ஆசிரியர்: noelnadesan
-
புஸ்பராணியின் அகாலம்.
நடேசன் அகாலம் நூலை படித்து முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது இரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பின்பு குளியலறைக்குச் சென்று வந்தபோது ‘ என்ன இந்த அகாலத்தில் லைட்டை போட்டுவிட்டு திரிகிறீங்கள்’ என்றாள் எனது பிரிய மனைவி. அவருக்கு ஏற்கனவே குறைந்தது மூன்று மணிநேரத்து நித்திரை முடிந்திருக்கும். இதுவரை நேரமும் புத்தகம் வாசித்தேன் எனப் பதில் சொல்லியிருந்தால் ‘கண்டறியாத புத்தகம் இந்த நேரத்தில்’ என வார்த்தைகள் வந்திருக்கும் நான்குமணி நேரம் தொடர்ச்சியாக ஒரு நூலை வாசித்து…
-
வாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்
நடேசன் (அவுஸ்திரேலியா). தமிழில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புகளே சர்வதேசத்தன்மையானவை. இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலில் அவ்வகையான எழுத்தாளர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இலங்கை மலைநாட்டு தமிழர் பற்றிய ஆக்க இலக்கியப்படைப்புகளை எழுதும்போது அவர்களின் வட்டார மொழியை ஆடம்பரமற்ற எளிமையான மொழியில் சொல்வதுதான் அவரது வழக்கம். ஆனால் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது எந்த நாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் சாதாரண மனிதர்களின் யதார்த்தம். மனிதவாழ்வின் யதார்த்தம் இல்லாத இலக்கியப்படைப்பை என்னைப் பொறுத்தவரையில் மனமொன்றி கிரகிக்க முடியாது போகிறது. இந்த யதார்த்தம்…
-
மேடையில் உயிர் நீத்த தோழர் வி.பொன்னம்பலம்
திரும்பிப்பார்க்கின்றேன் 16 பனைமரத்துப்பாளையெல்லாம் நில மட்டத்தில் வெளிவந்தால்….. முருகபூபதி பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால் சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள் – இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர் கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான் கொள்கைப்பற்றாளர் பதவிகளுக்காக சோரம்போகாதவர் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர் மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர்…. இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே…
-
எனது நெஞ்சறையில் மு.கனகராசன் நினைவுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி “உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” – என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில்…
-
எகிப்தில் சில நாட்கள் – 11: வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம்
நடேசன் மனித இனம் வேட்டையாடுதலில் இருந்து விவசாய சமூகமாக மாறிய காலத்தில் மதுவின் பங்கு தற்காலத்தைவிட மிக முக்கியமானது. இக்காலத்தில் போதைப்பொருளாக மட்டுமே மது அருந்தப்பட்டது. வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வலிநிவாரணியாகவும் தூக்கமாத்திரை என்ற மருத்துவப் பதார்த்தமாகவும் அருந்தப்பட்டது. அக்கால மனிதர்கள் சராசரியாக முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்கள் மட்டுமே வாழ்வதால் மதுவின் பக்கவிளைவுகள் முக்கியமற்று போனது. கல்லீரல் பாதிப்பதற்கு முன்பாக வேறு காரணங்களால் மனிதன் இறந்து விடும் நிலைமை இருந்தது. துபாயில் இருந்து எகிப்து செல்லும்போது…
-
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு
அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் மெல்பனில் எப்பிங் மெமோரியல் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் நடைபெற்றது. உலகெங்கும் போரில் உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றதையடுத்து, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளை செயலாளர் திரு. கே.எஸ். சுதாகரன் சமர்ப்பித்தார். குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2012- 2013 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும்…
-
இலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி
எக்சோடஸ் 3 நடேசன் இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் கொடுத்தது. இந்தக் கூட்டத்தில் தனிமனிதன் வாழ்வதற்கு எவ்வளவு பாடுபடவேண்டும்? இயற்கை மற்றும் உற்பத்தி வளங்களை எவ்வாறு ஒவ்வொருவரும் பிரிப்பது? அபரிமிதமான…
-
பன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி இந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலமாக கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை. இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் பேச்சுவார்த்தை நடத்தும் தூதுவர்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இலங்கை – இந்தியாவில் அரசுகள் மாறினாலும் தூதுவர்கள் வந்துதிரும்பும் காட்சிகள் தொடரும்.…
-
மறுவளம் அறிமுகம்
( மேல்பேன்) நடேசன்) மேல்பேன் நகரத்தின் மத்திய பகுதியான கிங்ஸ் வீதியில் நடு இரவு கடந்து நைட்கிளப்புகளில் சந்தடி குறைந்து விட்டது. அதிக சன நடமாட்டமில்லை. கிட்டத்தட்ட மூன்று மணியாக இருக்கும். அந்த நேரத்தில் பாதையில் மிகவும் வெளிச்சமான பகுதியில் ஒரு முதியவர் குனிந்து எதையோ கவனமாக தேடிக்கொண்டிருந்தார். அந்த வழியால் பொலிஸ் கார் வந்தது.இந்த முதியவரைக் கண்டதும் காரை நிறுத்தி விட்டு இறங்கிய இரண்டு பொலிஸ்காரர் ‘எதைத் தேடுகிறீர்கள்’ என மிகவும் அக்கறையாக விசாரித்தார்கள். முதியவர்…