ஆசிரியர்: noelnadesan
-
68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
நடேசன் இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கையர்களாகிய நாம் தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் நமது தாய்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அதிர்வுகளும் எல்லோரையும் இன, மத பாகுபாடு இன்றி பாதிக்கிறது என்பதுதான் வரலாற்றில் படித்த உண்மை. இயற்கையின் பேரழிவு 2004 இல் நடந்த சுனாமி. அது தெற்கு மற்றும் கிழக்கு கரையோர மக்களை ஆயிரக்கணக்கில் காவு கொண்டது. அந்த சுனாமி மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சீற்றம். இதைவிட…
-
‘தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது’
நேர்காணல்: எஸ்.ஜீவா ஒரு புத்தகம் நன்றாக இருந்தாலும் எல்¬லோ¬ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை. அதாவது எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழுமையாக இருக்குமென கூற முடியாது. ஒரு புத்தகம் பலரின் கைகளில் சேர்ந்த பின்பு அதனை விமர்சிக்கலாம். அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. இது காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. பிழையான விமர்சனங்கள் மூலம் புத்தகத்திற்கான வரவேற்பு முற்றாக தடைப்பட்டுவிடுகிறது. இலங்கையில்…
-
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு
மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு விஜயதாரகை வெளியீடு அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் உருவப்படத்திற்கு…
-
வாழும் சுவடுகள்
Ashroff Shihabdeen · புதிய பிடித்த நூல்களை இப்போதெல்லாம் ஒரே மூச்சில் நான் படித்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு அல்லது இவ்விரு அங்கமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன். அப்படித்தான் டாக்டர் நடேசனின் வாழும் சுவடுகள் நூலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவத் தொழில் ரீதியான இலகுபடுத்தப்பட்ட அதேவேளை சுவை குன்றாத எழுத்துக்கு டாக்டர். முருகானந்தனையும் டாக்டர் நடேசனையும்தான் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அடிப்படையில் இருவரும் சிறந்த படைப்பாளிகளாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்பேன். மிருக வைத்தியரான…
-
சேரனின் வாதத்தில் ஓட்டைகள் – நடேசன்
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் – சேரன்:- courtesy globaltamilnews.net இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை ‘இனப்படுகொலை’ என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான,…
-
பாலச்சந்திரனின் மணிவாசக அணியமுதம்.
நடேசன் மொழியில் கடுமையும் சுவாரசியமற்ற உரைநடையுமே சமயநூல்களின் பொதுவான தன்மை என்பது எனது அபிப்பிராயம். இதனால் அவற்றை வாசிப்பது சிறுவயதிலிருந்து எனக்குத் தண்டனையாகத் தெரியும். கட்டாயத்திற்காக பாடசாலைத் தேர்வில் படித்துவிட்டு அதன்பின்பு அதன்பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருப்பது சாலச்சிறந்தது என்ற மனப்பான்மையில் ஊறி பிற்காலத்தில் திராவிட பகுத்தறிவுவாதம், கம்மியூனிசம் பின்பு சோசலிசம் பின்பு செக்கியூரியல் ஏதிசம் என பரிணாமமடைந்த என் போன்ற மத நம்பிக்கையற்ற ஒருவர் மதத்தின் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் இலக்கிய நயத்தை அனுபவிக்கவுமே…
-
வாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம்
டாக்டர் என். எஸ். நடேசனின்‘வாழும் சுவடுகள்’ நூலறிமுகம் -க. நவம்- ‘உலகில் சொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளம் பிராணிகளும் தங்கள் மனோரதத்தை செலுத்தியாவது தேசயாத்திரை செய்து பார்க்க, பிறநாட்டு இலக்கியப் பயிற்சி அளிப்பதே இத்தொகுப்பின் நோக்கமாகும்’. புதுமைப்பித்தன் இவ்வாறு ஒருமுறை மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கு வழங்கிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். தான் வாழும் கிணற்றுக்குள்ளேயே முழு உலகையும் அமுக்கிவிட்டதாக…
-
A Change in Tablets
By Nadesan The long ‘dog’s day work’ was coming to an end. When I was preparing to wind up my clinic for the night, telephone rang. It was not only a dog’s day night I was also ‘tired like a dog’ and even considered not attending the call but by practice I picked up the…
-
நினைவுகளில் அருண். விஜயராணி
நடேசன் இந்தியாவில் இருந்து பேராசிரியை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் மெல்பன் வந்தபோது அருண். விஜயராணியின்; சிறுகதை ஒன்றை கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழில் வாசித்துவிட்டு, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் கூறினார். மேலும், தான் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களை ஆய்வுசெய்து எழுதுவதற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியபோது அந்தச் செய்தி எனது மனதிற்கு உவகையாக இருந்தது. இங்கு வருகைதந்த சுமதி அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களுக்கும் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டார் என்பதும் எனக்குத் தெரியும். விஜயா என்று நாம் அழைக்கும் விஜயராணியின்; சிறுகதையான…
-
CONTAGIOUS DISEASES
Arun Vijayarani Picture -Author Arun Vijayarani with with Translator Thamizhachi Thangapandian (Published in ‘KANAIYAZHI’ – August 2000 – A special Issue on Australia) “I have not called you to Australia to bore me with load of advice everyday”. “I would have stayed there back at home, had I known that you had called me only…