ஆசிரியர்: noelnadesan
-
நாவல்: சல்மாவின் மனாமியங்கள்.
நடேசன்எஸ்கிலஸ்(Aeschylus)எழுதிய புராதன கிரேக்க நாடகத்தில் ஒரு காட்சி வரும். ரோய் (Troy)மேல் படை எடுத்து வென்ற அகமனான்(Agamemnon) என்ற கிரேக்கத்தளபதி திரும்பித் தனது மாளிகைக்கு வெற்றிவீரனாக வரும்போது அவரது மனைவி(Clytemnestra) கொலை செய்து விடுகிறாள். அதற்காக மகனாகிய ஒரீஸ்ரஸ்(Orestes) தாயை(Clytemnestra) கொலை செய்கிறன். இந்த வழக்கு ஏதன்ஸ் நீதிமன்றத்திற்கு செல்கிறது. ஒரேஸ்ரஸ் தனது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறான். கிரேக்க கடவுளான அப்போலோ போரில் வென்ற தளபதியை கொலை செய்தது தாயான பெண்ணைக் கொன்றதிலும் பார்க்க பாரதூரமான…
-
திரு. லெ.முருகபூபதி – நேர்காணல்
01. ‘அரசியலைத் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களில் நீங்கள் குறிப்பிடத் தகுந்தவர்’ – எனது இந்தக் கருத்துப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ? முருகபூபதி : மனிதர்களிடத்தில் நாகரீகம் பரவத்தொடங்கிய காலம் முதலே அரசியலும் அறிமுகமாகிவிட்டது. அரசியல்தான் தேசங்களின் தலைவிதி. மக்கள் தேர்தலில் யாருக்கோ வாக்களிக்கிறார்கள். யாரையாவது ஆதரிக்கின்றார்கள். அத்துடன், அரசியல் கருத்தியல் சார்ந்தது. எனவே எவருமே தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை எனச்சொல்லமுடியாது. நான் பத்திரிகையாளனாக உருவாகி படைப்பாளியாக மாறியவன். பத்திரிகையாளனுக்கும்…
-
A cheque from the grave
It was a bright, sunny day in Melbourne. My veterinary clinic was quiet. My receptionist was on her lunch break while I read a veterinary magazine. Suddenly, the doorbell broke the silence, and I saw a tense, Mediterranean-looking man in his 40s at the door. I welcomed him inside. He arrived with his dog, an…
-
அமரிக்காவில் தேர்தல்
நடேசன் இதுவரை காலமும் அமரிக்காவில் ஐனாதிபதியாக வந்தவர்களுக்குப் பின்புலமாக அமரிக்க பெரும் கம்பனிகள், ஆயுதவிற்பனையாளர் மற்றும் ஊடகங்கள் இருப்பார்கள். ஆனால் இம்முறை அப்படிப்பட்டவர்கள் தோற்ற ஹிலரி கிளின்ரனுக்கு பின்பலமாக இருந்ததுடன் அவருக்கு ஏராளமான பணமும் கொடுத்திருந்தார்கள். இந்த வகையில் சாமானிய மக்களால் டொனால்ட் ஜனாதிபதியாக்கப்பட்டது ஒருவித ஜனநாயகப் புரட்சியாகும். டோனால்ட் ரம் இதுவரைவந்த குடியரசுக்கட்சிகாரர்போல் அவர்களது கட்சியை சேர்ந்தவர் அல்ல. ஒரு விதமான கருத்தியலிலும் மாட்டிக்கொள்ளாதவர். அதேநேரத்தில் தனக்கு சரி எனப்படுவதைச் செய்யக்கூடியவர் அதாவதுஆங்கிலத்தில் பிறக்மட்டிக் மான்…
-
திருடனை நாய் கடித்தால் !
நடேசன் அவுஸ்திரேலியாவில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பயிற்றப்பட்டும் , நட்பாகவும் இருப்பன. ஆனால், அவற்றில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் எப்பொழுதும் உரிமையாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் நெருங்க முடியாதவாறு இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை சிறிய நாய் வர்க்கமாக இருக்கும் . பெரிய நாய்களுக்கு கட்டாயமாகப் பயிற்சி கொடுப்பவர்கள், சிறிய நாய்களுக்கு அவ்வாறு பயிற்சி வழங்குவது குறைவு. வெளியே செல்லாமல் , வீட்டுக்குள் மட்டுமே பயிற்றப்படாத நாய்கள் வளர்வதால், அவைகளால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பது நம்பிக்கை. அது…
-
காட்சி இரண்டு கதையொன்று
நடேசன் எனது ஆச்சி வாயாடி!கோபம் வந்தால் ஊரிலுள்ள தூஷண வார்த்தைகள் அவர் வாயிலிருந்து தாராளமாக வெளியே வரும். ஆச்சி எரிச்சலடையும்போது அவர் அவிட்டுவிடும் ‘பூனையின் புடுக்கு மாதிரி” என்ற வார்த்தையை சிறுவயதில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வயதில் அதன் படிமமான கருப்பொருள் புரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் ஆச்சி பாவித்த சந்தர்ப்பத்தை பார்த்தபோது அந்தச் ‘சொல்லடை’ மனமுடைந்திருக்கும் பெண்ணிடம் ஒரு உளவியல் மருந்தாக பாவிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன். எங்கள் பகுதியான வட இலங்கையின் தீவுப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் ‘பேசி’ச் செய்வார்கள்.…
-
நாவல்: உதயனின்: U P 83.
UP 83 (உத்தரப்பிதேசம்) நான் சமிபத்தில் வாசித்த தமிழ் புத்கங்களில் தொடர்ச்சியாக பக்கங்களை சுவாரசியத்தோடு திருப்ப வைத்தது. ஒவ்வொரு பக்கமும் சுவையானது. அரைத்தமாவைஅரையாமல் புதிதான ஒரு பகுதியை சொல்லுகிறது. வித்தியாசமான மொழி (remarkable genre) நான் சென்னையில் இருந்த காலத்தில் உத்தரப் பிரதேசத்ததில் பயிற்சி எடுத்து முடித்த பல இயக்க இளைஞர்கள் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தார்கள். 84 ஆண்டின் ஒரு நாள்சூழைமேட்டில் உள்ள தமிழர் மருத்துவமனைகட்டிடத்தின் மேல் நின்றபோது எனக்குஅறிமுகமான சில ஈ பி ஆர் எல்…
-
அவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay)
அவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay) நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தேன். அதில் எனக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், என்னுடன் சேர்ந்து குடித்த ஒரு நண்பனுக்கு முகத்தில் விறைப்புத்தோன்றி தேறி வருவதற்கு சில நாட்களாகியது. அவனுக்கு ஏதோ வந்துவிட்டது என்ற குற்ற உணர்வில் குறிப்பிட்ட அந்தச் சிலநாட்கள் மனம் குழம்பினேன். அவனுக்கு முற்றாகக் குணமாகியதும் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு வந்த முகவிறைப்புக்கு…
-
மரணதேவதை
நடேசன் அந்த வீட்டின் முன்கதவைத் திறந்தபடி உள்ளே சென்ற என்னைத் தனது வெள்ளைத்தாடியை ஒரு கையால் தடவியபடி சிவந்த கலங்கிய கண்களுடன் மறுகையால் வீட்டின் கதவைத் திறந்து ‘நொயல் நன்றி’ எனச்சொல்லியவாறு மகிந்தபால உள்ளே அழைக்க, மிருகவைத்தியராகிய என்னைப் பார்த்து ‘மரணதேவதை வருகிறது’ என்று திருமதி மகிந்தபால சொன்னார். நான் எதிர்பார்க்காத வார்த்தைகள். பழைய சுவிஷேச வார்த்தைகள். மெல்பனின் வசந்தகாலத்தின் மாலை நேரம். பசுமையான புற்கள் அழகாக செதுக்கியபடியிருந்தது. வேலியோரத்து பொக்ஸ் செடிகள் இடுப்பளவு உயரத்தில் கத்தரிக்கப்பட்டிருந்தன.…
-
கோல்ட் கோஸ்டில், ஹம் பாக் திமிங்கிலங்கள்
நடேசன் கடற்பரப்பிலிருந்து தண்ணீர் ஒரு மீட்டர் உயரத்திற்குப் பீறி அடித்தது. ஏதோ வாய்க்குள் வைத்து தண்ணீரை மேல் நோக்கி வாணம்போல ஊதுவது தெரிந்தது. ‘சுவாசிக்க எப்படியும் மேலே வரவேண்டும்’ திமிங்கிலங்கள் காற்றிலிருந்தே சுவாசிக்க வேண்டும். நீரின்மேல் தலையை நீட்டி காற்றை உள்ளெடுக்க வேண்டும். உற்றுப்பார்த்த போது சாம்பலும், கறுப்பும் கலந்த நிறத்தில் ஒரு ஹம் பாக் திமிங்கிலம் . அந்த நீல நிற சமுத்திரத்தை கிழித்தபடி நீர் மூழ்கிக்கப்பல் எழுவதுபோல் நீர்ப்பரப்பில், ஒரு மீட்டர் உயரத்திற்கு…