குறிச்சொல்: நாவல்
-
அசோகனின் வைத்தியசாலை 11
டாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே? இந்த பொதுவான மனித சுபாவம் வைத்தியசாலையில் வேலை செய்பவர்களிடம் இருந்தது ஆச்சரியமானதல்ல. இந்த நிலையில் யாராவது ஒருவர் இதற்கான செயல்களை முன்னெடுத்து…
-
Indo – Sri Lanka Agreement
This for the record To establish peace and normalcy in Sri Lanka. The President of the Democratic Socialist Republic of Sri Lanka His Excellency Mr. J.R. Jayawardene, and the Prime Minister of the Republic of India, His Excellency Mr. Rajiv Gandhi, having met at Colombo on 29 July 1987: Attaching utmost importance to nurturing, intensifying…
-
அசோகனின் வைத்தியசாலை – 5
அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது…
-
அசோகனின் வைத்தியசாலை நாவல்- 4
சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் ,அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின்…
-
அசோகனின் வைத்தியசாலை- 3

நியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’ எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய்? எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட் மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட் குளிக்கும் அறையில் தங்கிவிட்டது.…