Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • தனித்துவம் மிக்க சோ

    அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது முருகபூபதி ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.” என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர், சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்…

    noelnadesan

    07/12/2016
    Uncategorized
  • சிறுகதை:வெம்பல்.

      இருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள். வேறு எவைகளாக இருக்கும்? காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள். சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது. அது மட்டுமா? இவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் பெரியவர்களாக கிழமைக்கும் மாதத்திற்கும் ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பிழைசொல்லமுடியாது. இறகுகள் முளைத்த பின்பு புதிதான…

    noelnadesan

    04/12/2016
    Uncategorized
  • கதைகதையாம் காரணமாம்.சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.

    அ.ராமசாமி வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான்.…

    noelnadesan

    02/12/2016
    Uncategorized
  • தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்

    – இமையம். “வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, அரசியலை, நிலவியலை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே ஆராயும். தமிழ்நாட்டிலிருந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர்…

    noelnadesan

    26/11/2016
    Uncategorized
  • அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

    அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு அவுஸ்திரேலியாவில் பலவருடங்களாக இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் கடந்த ஆண்டு இறுதியில் மறைந்த முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை நினைவுகூர்ந்தும் மெளன…

    noelnadesan

    26/11/2016
    Uncategorized
  • நாவல்: சல்மாவின் மனாமியங்கள்.

    நடேசன்எஸ்கிலஸ்(Aeschylus)எழுதிய புராதன கிரேக்க நாடகத்தில் ஒரு காட்சி வரும். ரோய் (Troy)மேல் படை எடுத்து வென்ற அகமனான்(Agamemnon) என்ற கிரேக்கத்தளபதி திரும்பித் தனது மாளிகைக்கு வெற்றிவீரனாக வரும்போது அவரது மனைவி(Clytemnestra) கொலை செய்து விடுகிறாள். அதற்காக மகனாகிய ஒரீஸ்ரஸ்(Orestes) தாயை(Clytemnestra) கொலை செய்கிறன். இந்த வழக்கு ஏதன்ஸ் நீதிமன்றத்திற்கு செல்கிறது. ஒரேஸ்ரஸ் தனது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறான். கிரேக்க கடவுளான அப்போலோ போரில் வென்ற தளபதியை கொலை செய்தது தாயான பெண்ணைக் கொன்றதிலும் பார்க்க பாரதூரமான…

    noelnadesan

    18/11/2016
    Uncategorized
  • திரு. லெ.முருகபூபதி – நேர்காணல்

    01. ‘அரசியலைத் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களில் நீங்கள் குறிப்பிடத் தகுந்தவர்’ – எனது இந்தக் கருத்துப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ? முருகபூபதி : மனிதர்களிடத்தில் நாகரீகம் பரவத்தொடங்கிய காலம் முதலே அரசியலும் அறிமுகமாகிவிட்டது. அரசியல்தான் தேசங்களின் தலைவிதி. மக்கள் தேர்தலில் யாருக்கோ வாக்களிக்கிறார்கள். யாரையாவது ஆதரிக்கின்றார்கள். அத்துடன், அரசியல் கருத்தியல் சார்ந்தது. எனவே எவருமே தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை எனச்சொல்லமுடியாது. நான் பத்திரிகையாளனாக உருவாகி படைப்பாளியாக மாறியவன். பத்திரிகையாளனுக்கும்…

    noelnadesan

    16/11/2016
    Uncategorized
  • A cheque from the grave

    It was a bright sunny day in Melbourne. My veterinary clinic was quiet. My receptionist was on her lunch break. And I was reading a veterinary magazine. Suddenly the doorbell shattered the silence. At the entrance was a highly agitated forty-something, Mediterranean-looking man. I invited him in. He came in with his dog, an old,…

    noelnadesan

    14/11/2016
    Uncategorized
  • அமரிக்காவில் தேர்தல்

    நடேசன் இதுவரை காலமும் அமரிக்காவில் ஐனாதிபதியாக வந்தவர்களுக்குப் பின்புலமாக அமரிக்க பெரும் கம்பனிகள், ஆயுதவிற்பனையாளர் மற்றும் ஊடகங்கள் இருப்பார்கள். ஆனால் இம்முறை அப்படிப்பட்டவர்கள் தோற்ற ஹிலரி கிளின்ரனுக்கு பின்பலமாக இருந்ததுடன் அவருக்கு ஏராளமான பணமும் கொடுத்திருந்தார்கள். இந்த வகையில் சாமானிய மக்களால் டொனால்ட் ஜனாதிபதியாக்கப்பட்டது ஒருவித ஜனநாயகப் புரட்சியாகும். டோனால்ட் ரம் இதுவரைவந்த குடியரசுக்கட்சிகாரர்போல் அவர்களது கட்சியை சேர்ந்தவர் அல்ல. ஒரு விதமான கருத்தியலிலும் மாட்டிக்கொள்ளாதவர். அதேநேரத்தில் தனக்கு சரி எனப்படுவதைச் செய்யக்கூடியவர் அதாவதுஆங்கிலத்தில் பிறக்மட்டிக் மான்…

    noelnadesan

    12/11/2016
    Uncategorized
  • திருடனை நாய் கடித்தால் !

    நடேசன் அவுஸ்திரேலியாவில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பயிற்றப்பட்டும் , நட்பாகவும் இருப்பன. ஆனால், அவற்றில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் எப்பொழுதும் உரிமையாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் நெருங்க முடியாதவாறு இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை சிறிய நாய் வர்க்கமாக இருக்கும் . பெரிய நாய்களுக்கு கட்டாயமாகப் பயிற்சி கொடுப்பவர்கள், சிறிய நாய்களுக்கு அவ்வாறு பயிற்சி வழங்குவது குறைவு. வெளியே செல்லாமல் , வீட்டுக்குள் மட்டுமே பயிற்றப்படாத நாய்கள் வளர்வதால், அவைகளால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பது நம்பிக்கை. அது…

    noelnadesan

    11/11/2016
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 93 94 95 96 97 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar