-
பூமராங் இணைய இதழ்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் உங்கள் பார்வைக்கு வருகிறது. http://www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம். சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம்,…
-
அசோகமித்திரன் நினைவுகள்
தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி. முருகபூபதி சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்ஷாவை காணும் குழந்தை, ” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது. உடனே தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். ” ரி… க்…ஷா…” குழந்தையும் அவ்வாறே, ”…
-
லாபிரடோரும் சீனக்குடும்பமும்
ஒரு லாபிரடோர் நாயை வீட்டுக்குள் வைத்து வளர்க்கும் எனக்குத் தெரியும் அதனது நிபந்தனையற்ற அன்பு, விசுவாசம் மற்றும் தோழமை. ஆனால் வற்றாத நதியில் குளிக்கும்போது வேகமாக இழுத்துச் செல்லும் நதியின் சுழல்போல் சிக்கல்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நமது வாழ்வில் ஏற்படும் காதல் பாசத்திற்குக் கொடுக்கும் விலை போன்றது. என்ன 12 அல்லது 13 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். அதில் முக்கியமானது வீட்டின் தரையில் தினம் தினம் புதிதாக முளைக்கும் உரோமங்கள். தரையில் மட்டுமல்ல வீட்டில் உள்ள கட்டில்,…
-
வாழும் சுவடுகள்
By Pon Vasudevan கடந்த இரண்டு நாட்களாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கப்படிக்க மிகவும் பிடித்துப்போய் இதைப்பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. இன்று படித்து முடித்துவிட்டேன். எழுதலாம் என்று யோசித்தால், ‘ஆகா, ஓகோ, பிரமாதம், பேஷ் பேஷ்’ என்ற மாதிரியான வார்த்தைகளை மாற்றிப்போட்டு ‘உணர்வுகளை, ரசனையைத் தூண்டும் எழுத்து, சகல உயிரினங்களின் மீதும் உருவாகும் மனிதாபிமானம், நுண்ணுணர்வால் மனிதர்களை அடிமைப்படுத்துகிற செல்லப் பிராணிகள், அழகாகச் சித்தரிக்கப்பட்ட உறவுச்சிக்கல்கள்’ என்றெல்லாம் எழுத வேண்டி வருமோ…
-
பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம்
காலச்சுவடு நாட்காட்டி “அடிசில்” பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள் முருகபூபதி ” ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு வீட்டைக்கடக்கும்போதும் காற்றில் ஒவ்வொரு வாசம். ஒருவீட்டில், தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பிழிந்துவிடும் வாசம். – அது ‘பாற்சொதி’. இன்னொரு வீட்டில்,…
-
2.கரையில் மோதும் நினைவலைகள்.
கரையில் மோதும் நினைவலைகள் ஒருவர் நமக்கு நல்லவராகவும் மற்றவருக்கு வில்லனாகவும்இருப்பதை பல தடவை பார்த்துள்ளேன். 2011ல் இலங்கையில் கட்டுநாயக்கா ஏர்போட்டால் வந்து இரவு ஒரு மணியளவில் நீர்கொழும்பிலுள்ள ஒரு கடற்கரையோர ஹோட்டலில் படுத்தேன். அதிகாலை நேரம். கடல் அலைகள் கரைமீது மோதும் ஓசை சங்கீதமாக இருந்தது. ஆனாலும் அவுஸ்திரேலிய நேரத்திற்குப் பழக்கமான உடல் என்பதால் கண் விழித்துவிட்டேன். ஆனால் உடல் அயர்வாக இருந்தது. எனது மோபைல் சத்தமிட்டது. நான் இலங்கைக்கு வந்த காலத்திலே எனது மகனோடு எனது…
-
சரோ என்றால் லயன்
இதுவரையும் வர்த்தக விளம்பரங்களைப் படமாக்கிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியன் டைரக்ரரின்(Garth Davis) படம் லையன். முதல் படத்திலே ஓஸகாருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அறச்சீற்றத்துடன் புதிதான கருத்தை எடுத்து அன்னியமான கலாச்சாரத்தில் உள்ள கதையை படமெடுப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும். நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மிகவும் நேரடியான கதை. அனாதையாகச் சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் வளர்ந்த பின்பு தனது குடும்பத்தை தேடுதலே இந்தப்படம். உள்ளுணர்வுகளின் தேடுதலே தொடர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது சிலம் டக் மிலியனரில் வந்த தேவ்…
-
ஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும்
நடேசன் மிருகவைத்தியர் அவுஸ்திரேலியா தாய்லாந்து போனபோது என்னுடன் வந்தவர்கள் யானையில் ஏறி சவாரி செய்தார்கள். நான் ஏறவில்லை. அதற்குக் காரணம் யானைகளை சவாரிக்குப் பழக்கும்போது அவற்றை அடிபணிய வைக்க துன்புறுத்துவார்கள். அதற்கான ஆதாரங்கள் யானைகளில் வெள்ளைத் தழுப்புகளாக அதன் உடலில் பல இடத்தில் இருக்கும். அதேவேளையில் ஆசிய நாடுகளில் யானைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதற்குக் காரணம் அவை மனிதர்களுக்கு வழிபாட்டிற்க்கும்; தொன்மக் கதையாடல்கள் அரசபடை மற்றும் கூலியற்ற வேலையாள் எனப் பல வகைகளில் பயன்படுகின்றன. ஆனால் ஆபிரிக்க…
-
அடிநிலைமக்களின் குரலாகத் தெணியான்
அடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான் இன்று அவருக்கு 75 வயது முருகபூபதி கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு…
-
The Multi Faceted Tamil Writer
Arjunan Puveendran Last (2015) year, the Australian Tamil community lost Arun Vijayarani, who was a well-regarded Tamil writer and community worker. As a humble woman, she preferred to remain out of the limelight. However, the celebration of her life since her passing has served as an ideal to many in the Tamil community of a…