-
பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா
நடேசன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இயங்கிய வட-கிழக்கு மாகாணசபை 1987-90 களில் தீண்டத்தகாத மசுக்குட்டிப்புழுவாக பலரால் அருவருப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த மாகாணசபை இரண்டாகப் பிரிந்து வண்ணத்துப்பூச்சிபோல் அழகாகத்தோற்றமளிக்கிறது. அத்துடன் தற்பொழுது அதனை தேவைக்கு மேலாகப் பால்கறக்கும் காமதேனுவாகவும் பார்க்கிறார்கள். மடியில் முட்டிமுட்டி, கடைவாயில் பால்வழிந்த ஞானசம்பந்தராக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் குடிக்கிறார்கள். தீண்டத்தகாத மாகாணசபையின் இப்படியான உருமாற்றம் கடந்த முப்பது வருடங்களில் நடந்திருக்கிறது. தமிழர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களவர்களை இணைத்து உருவாக்கிய மாகாணசபைக்கு வரதராஜப்பெருமாளை…
-
மெல்லுணர்வு – நோயல் நடேசன்
By அனோஜன் பாலகிருஷ்ணன் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற…
-
வழிகாட்டியாக டொமினிக் ஜீவா
நடேசன் – அவுஸ்திரேலியா 2016 ஜூலையில் இலங்கை சென்றபோது மல்லிகை ஆசிரியரும் எழுத்தாளருமான டொமினிக்ஜீவாவை சந்திக்கத் தயாரானபோது ஞானம் ஆசிரியர் ஞானசேகரனும் என்னுடன் சேர்ந்து கொண்டார். கொழும்பில் மாலை மூன்று மணியளவில் எமது பயணம் ஓட்டோவில் தொடங்கியது. கோடை வெய்யில் அனலாக முகத்தில் அடித்தது. போக்குவரத்து ஓசை காதைப்பிளந்தது. தெருப்புழுதி, வாகனப்புகையுடன் கலந்து நுரையீரலை நிரப்பியது. ஒரு மணி நேரப்பிரயாணத்தில் உடல்வியர்த்து, உடைகள் தேகத்தில் ஒட்டியது. முகத்துவாரம் பகுதியில் உள்ள அவரது வீட்டை அடைந்தபோது, இந்துசமுத்திரத்திலிருந்து…
-
சதைகள் : அனோஜனின் சிறுகதைகள்.
சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன்…
-
கமலி பன்னீர்செல்வம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து…..
பிள்ளை தீட்டு “பிள்ளைத்தீட்டு” கதையில் ஜமீல் என்பவன் தனக்கு இலங்கை ராணுவத்தில் வேலை கிடைத்த சந்தோஷ செய்தியை மனைவி ஆயிஷாவிடம் பகிர்கிறான். அவள் இங்கு நாம் சுகமாக இருக்க எதுக்கு சண்டை பிடிக்கனும் என்கிறாள். இயக்கத்தவர்கள் ஒரு நாளில் எல்லாவற்றையும் பிடுங்கி வெளியே துரத்தியதை மறந்துவிட்டாயா நான் சேரபோகிறேன் என்கிறான். அப்படின்னா என்ன கொண்டுபோய் நாகலிங்கண்னே வீட்டில் விட்டுட்டு போங்க நானும் பிள்ளையும் நீங்க வரும்வரை அங்கே இருக்கோம் என்கிறாள். நாகலிங்கண்னே பெயர் கேட்டவுடன் ஜமீல் சோர்வுடன்…
-
பாரதி பள்ளியின் நாடகவிழா .
பங்குபற்றிய மாணவர்கள் பாரதி பள்ளியின் நாடகவிழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து சிறுவர் நாடகங்களை அனுபவித்து நினைவோடையில் நீந்த முடிந்தது. ஒருவிதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனத்தில் படிந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின்பு ஆங்கிலத்தில் பார்த்து, படித்து சிறுவர் இலக்கியங்கள், நாடகம் மற்றும் சினிமாவை புரிந்து கொண்டபோது ,எமது நாடுகளில் முக்கியமாக தமிழ்மொழியில் வறுமைக்கோட்டின்கீழ் கவனிப்பாரற்ற ஒரு துறையாக உணர்ந்தேன். அதனால் பல முறை மனத்தில் ஏக்கம்…
-
மலேசியன் ஏர்லைன் 370 – ஆசிரியர் நடேசன்
புத்தகம் பற்றி ஒரு பார்வை by kamaliswaminathan.blogspot.com “மலேசியன் ஏர்லைன் 370” சிறுகதைகளின் தொகுப்பு. நடேசன் எழுதியது. மலைகள் வெளியீடு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆ(வு)ஸ்திரேலியாவில் கால்நடை வைத்தியராக பணியாற்றிய எழுத்தாளர் அவரது பார்வையில் இலங்கையையும் அவர் பணிபுரிந்த அவர் சென்று பார்த்த இடங்களையும் பற்றிய அனுபங்களையும் அழகாக தொகுத்திருக்கிறார். இலங்கை தமிழர்கள் என்ன தான் சொந்த மண்ணை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வசதியாக வாழ்கின்ற போதும் தங்கள் மண்ணை மக்களை பிரிந்த…
-
வண்ணாத்திக்குளம்
தெய்வீகன் எண்பதுகளின் ஆரம்பத்தில் சிங்கள குடியேற்றங்களினால் விழுங்கப்பட்டு “பதவியா” என்று உருமாற்றப்பட்ட தமிழ் கிராமத்தினை கதைக்கருவாகக்கொண்டு உருவாக்கப்பட்ட “வண்ணாத்திக்குளம்” என்ற நாவல் ஈழத்து இலக்கிய பரப்பிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியான நூல்களிலும் முதன்மையானது. நூலாசிரியர் நடேசன் அவர்கள் படைப்பாளி என்ற அணிகலனை சூடிக்கொள்வதற்கு முன்பு தாயகத்திலேயே மிருக வைத்தியராகவும் பின்னர் ஒரு செயற்பாட்டாளராகவும் – போராட்ட அமைப்புக்களுடன் நெருக்கமாக இணைந்து இயங்கியவராகவும் தன்னை பல வடிவங்களுக்குள் பொருத்தி வாழ்ந்தவர். ஆகவே அவரது அனுபவங்கள் இந்த நாவலை பிரசவிப்பதற்கு…
-
முத்தமா முத்தம்மா?
அப்பழுக்கற்றவர்கள் எல்லோரும் முத்தத்துக்காக சிறைசென்ற ஒருவரை பொது வெளியில் துவைத்து காயவிட்டுள்ளார்கள். நல்லது, தீமைகளை கண்டிக்கும் ஒரு சமூகம் என்பது எனக்கு மயிர்கூச்செறிகிறது. ஆண்கள் தவறுவிடும்போது நீங்கள் பொங்கி எழுவது வரவேற்கத்தக்கது . அதுவும் முகநூல் நட்புக்கு இதைவிட சிறப்பு என்ன தேவை? நண்பனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்பது எமது நக்கீரன் பாரம்பரியமல்லவா? ஏற்கனவே ஒருவன் தண்டிக்கப்பட்டாலும் இரண்டாவது முறை, ஏன் பல முறை நாங்கள் தர்ம அடியை கொடுத்து, நாங்கள் எவ்வளவு நேர்மையானவர்கள் என்பதை…
-
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம்.
சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது. எமது…