-
இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்
கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன் முருகபூபதி ‘புதிர்’ என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy). இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன் இந்த இரண்டு அர்த்தங்களும் கலந்த வாழ்வின் விழுமியங்களை சந்தித்திருக்கும் இலக்கிய நண்பராகவே செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களை இனம்காண்கின்றேன். இவருடைய அண்மைய வெளியீடு விளைச்சல் (குறுங்காவியம்) நூலின்…
-
மீள்வாசிப்பில் எஸ்.பொ.வின் சடங்கு.
நடேசன் ஈழத் தமிழ் உலகில் எஸ்.பொ. வின் சடங்கு வித்தியாசமான நாவல் மட்டுமல்ல, அகண்ட தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்து நிற்கக்கூடியது. தமிழ்நாவல்களில் குறியீட்டுத்தன்மையால் சடங்கு முன்னுதாரணமாகிறது. கதை மூன்று முக்கிய பாத்திரங்களை மட்டும் கொண்டு சொல்லப்படுகிறது. அதிலும் மூன்றாவது மனிதனாக கதை சொல்லத்தொடங்கி செந்தில்நாதனின் அகக்குரலை மட்டும் பிரதானமாக வைத்து எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் வெர்ஜினியா வுல்ஃப் ஒரே நாளில் நடப்பதாக எழுதிய (Mrs Dalloway)போன்று மனச்சாட்சியின் குரலாக (stream of consciousness)) கொண்டு செல்லும் மொடனிஸ்ட் நாவல்.…
-
60 வருடத்தில் பல முறை பிறந்தவர்..
நடேசன் அவருக்கு அண்மையில் 60 வயது பிறந்துவிட்டது. பிடல் காஸ்ரோவுக்கு அடுத்து நான் அறிந்தமட்டில், அதிக கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பவர் அவர். தொடர்ச்சியான அச்சுறுத்தலிலிருந்து தப்பி அறுபது வயதை அடைந்திருப்பது மிகவும் பெரிய சாதனைதான். நீரில் கண்டம் நிலத்தில் கண்டம் என சோதிடர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால், பாக்குநீரிணை, வெலிக்கடை, களுத்துறை என அடுத்தடுத்து கண்டங்களிலிருந்து தப்பி வந்தவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதமுடியும். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்பதனால் அவருக்கு…
-
இலக்கியச்சந்திப்பு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். கருத்துரை இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.…
-
மிருகவதை
88ம் ஆண்டில் பயோடெக்னோலஜி சிட்னி நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பாலில் உள்ள புரதத்தை எப்படி அதிகரிப்பதென ஒரு செமினார் நடந்தது – பசுவின் உணவில் சில மாற்றங்களையும் செய்து புரதத்தைக் கூட்டுவது என்பதே. அதில் நான் பங்குபற்றினேன். அப்பொழுது எனது ஜெனரிக் பேராசிரியர் ( Genetic Professor) அதைப் பகிஸ்கரித்ததோடு, எனக்குச் சொன்னார். . ‘பாலில் இருந்து புரதத்தை உருவாக்குவதைவிட பக்டீரியாவின் பரம்பரை அலகை மாற்றி அதிக புரதத்தை இன்னமும் சிலகாலத்தில் பெறலாம்.’ அக்காலத்தில் அவரது…
-
நாவல்:யாவரும் கேளீர்.
இம்முறை யாழ்பாணத்தில் நின்றபோது ஒரு புத்தக அறிமுகம் கொக்குவிலில் நடந்தது. அங்கு சென்றபோது இடதுசாரிகளின் கூட்டமாக இருந்தது. மற்றவர்கள் அங்கு தெரியவில்லை. பொறியியல் மாணவராக சிறையில் இருந்தவரால் எழுதப்பட்டு அவரது தந்தையாரால் வெளியிடப்பட்டது. அங்கு தெரிந்தவர்களை சந்தித்தது சந்தோசமாக இருந்தது . பின்பு ஒரு புத்தகத்தை வாங்கி வாசித்தேன். சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் சீரான தமிழ்வசனமும், அழகிய மொழி நடைகொண்டது. நாவல் சிறுவயதில் படித்த பேராசிரியர் மு வரதராஜனின் கரித்துண்டை நினைவுக்கு கொண்டுவந்தது. நாவலின் உள்ளடக்கம்…
-
நான் அறிந்த ராணி இலியேசர்
நடேசன் திருமதி ராணி இலியேஸருடனான சந்திப்பு தற்செயலானது. அவரை சில சந்தர்ப்பங்களில் சந்தித்திருந்தாலும், அந்த நட்பு, நெஞ்சோடு உறவாடியது. என்னை மனமார வாழ்த்தியும் கண்டித்தும் இருப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. அதில் முதன்மையானவர் ராணி இலியேசர் பேராசிரியர் இலியேசரது மரணத்தின் பின்பு துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றேன். என்னை அறிமுகப்படுத்தி எனது பெயர் நடேசன் என்றதும், ராணி இலியேசர் எனது வலது கையை பிடித்து ‘பெயரைக்கேள்விப்படடிருக்கிறேன்’ எனச்சொல்லிவிட்டு, ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கியபடியே வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.…
-
கொலம்பியா.
தென்னமரிக்க நாட் குறிப்புகள் 2. (Love in the time of Cholera) சர்வதேச மிருகவைத்திய மகாநாடு கொலம்பியாவில் உள்ள கட்டகேனாவில் நடப்பதாக இரண்டு வருடத்திற்கு, முன்பு அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் விரும்பிப் படித்த நாவல் லவ் இன் த ரைம் ஒவ் கொலரா(Love in the time of Cholera). அதை எழுதிய கபிரியல் மார்குவஸ் (Gabriel Garcia Marques) வாழ்ந்த இடம் மட்டுமல்ல அந்தக் கதை நிகழ்ந்த இடமும் கட்டகேனா. இந்தக் கதையில்…
-
சந்தியாகோ-சிலி
தென்னமெரிக்கா நாட்குறிப்புகள். நடேசன் கவிஞர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் கனவுதேசங்களாக தென்னமரிக்கா பலகாலமாக இருந்தது.எனக்கு இதுவரையும் செல்லாத இடங்கள், ஆனால் செல்வதற்காக ஆவலாக இருந்தேன். தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை இலத்தீன் அமெரிக்கா என்பார்கள்.. இலத்தீன் மொழியில் இருந்து உருவாகிய இரு மொழிகளான போர்த்துக்கீஸையும் ஸ்பானிஸ் மொழியையும் பேசுபவர்களைக் கொண்டவை தென்னமெரிக்க நாடுகள். 15ஆம் நூற்றாண்டில் மத்தியதரைக்கடல் நாடுகளான ஸ்பெயினும் போர்த்துகலும் உலகத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டன. அவை ஒன்றோடு ஒன்று சண்டை போடாமல் இருக்க பாப்பாண்டவர் அவர்களுக்கிடையே ஒப்பந்தத்தை…
-
சிறுகதை: கரும்புலி
நடேசன் கங்கா நித்திரையில் இருந்து விழித்தபோது கடிகாரத்தில் பன்னிரண்டு மணி காட்டியது. தனது பக்கத்தில் படுத்திருந்த முரளியின் தோளைக் கையால் தொட்டுப்பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருப்பதை உணர்ந்ததும், அவனது குஞ்சாமணியருகே கையை வைத்தாள்.வெம்மையாக இருந்தது. பாயில் கையால் தடவியபோது பாய் ஈரமில்லை. மூக்கின் அருகே கையை வைத்து உறுதிசெய்தாள். சில நாட்களாக நித்திரையில் அவன் சிறுநீர் கழித்துவிடுகிறான். இதுவரையும் இல்லாத பழக்கம் ஐந்து வயதில் அவனுக்கு ஏற்பட்டிருக்கு. அவனைக் குறை கூறமுடியாது. தாயோடு இருக்கும்போது எனது விடயங்கள்…