-
நேவா நதி
நேவா நதி, பீட்டர்ஸ்பேக் நகரத்தைச் சுற்றி ஓடுவதால் பார்ப்பதற்கு படகில் சென்றோம். வடக்கின் வெனிஸ் எனக்கருதப்படும் பீட்டர்ஸ்பேக் மிகவும் பெரிய மாளிகைகளை நதிக்கரையில் கொண்டது. அதில் மகோன்னதமாகத்தெரிவது ரஸ்சியமன்னரின் வின்ரர் பலஸ். 1786 கதவுகள் 1945 ஜன்னல்கள் 1500 அறைகள் 117 மாடிப்படிகள் கொண்ட மாளிகை. போல்சுவிக்குகள், வின்ரர் பலஸ்சில் இருந்த இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றியது கம்மியூனிச நூல்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும். 1917 ஒக்ரோபர் நிகழ்வின் வித்து பன்னிரண்டு வருடங்கள் முன்பாக இதே வின்ரர் மாளிகையின் முன்பாக…
-
கனவு தேசம்.
ஹெல்சிங்கியில் இருந்து மூன்று மணி நேரத்தில் எம்முடனிருந்த ஐம்பது பேருடன் பஸ் சென்ட் பீட்டர்ஸ்பேக் அடைந்தது. ரஸ்சிய எல்லையில் எங்கள் கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்பட்டன. எமது வழிகாட்டியான வெரோனிக்கா முப்பது வருடங்களாக ரஸ்சியாவிற்கு வந்து போவதோடு ரஸ்சிய மொழியையும் தெரிந்தவர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் தரைபாதையால் செல்லும்போது மூன்று இடங்களில் இறக்கி ஏற்றுவார்கள் என்றார். எங்கள் பஸ்சை மூன்று இடத்தில் மறித்தாலும ஒரு இடத்தில் மட்டும் எம்மை இறக்கிப்பாஸ்போட்டைப் பரிசோதித்தார்கள். மற்றைய இடத்தில் பஸ்சின் உள்ளே வந்து…
-
மௌனித்துவிட்ட கலகக்குரல்: கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்
கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி முருகபூபதி நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள்…
-
பயணக் குறிப்பு -ஹெல்சிங்கி
Uspenski Cathedral பதில் சொல்ல முடியாத கேள்விகள்: அந்தக்காலத்தில் பரசிற்ரோலஜி( Parasitology) வாய்மொழிப் பரீட்சைபோல் இருந்தது. பரீட்சைகள் மாணவப் பருவத்தில் மட்டுமல்ல வயதாகி இளைப்பாறும் தறுவாயிலும் ஏற்படும் என்பதை சமீபத்திய ரஸ்சியப் பயணத்தில் அறிந்துகொண்டேன். பயணத்தின் ஆரம்பம் பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் இருந்தது. அங்கு செல்ல மூனிச்சில் விமானம் மாறியபோதுஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன்(Schengen Zone/ Agreement) எனப்படும் ஒன்றிணைந்த பிரதேசத்திற்குள் வந்ததால் ஓர் விமானநிலயத்தில் பாஸ்போட்டில் குத்தப்பட்ட முத்திரை எல்லா ஐரோப்யிய ஒன்றிய நாடுகளுக்கும் போதுமானது. நாங்கள்…
-
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)
படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி 17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன். அவ்வப்போது அவரது…
-
சிட்னி கலை – இலக்கியம் 2017-மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டு
சிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும் சிட்னியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் அவர்களும் இலங்கையின் மூத்த படைப்பாளி சமூகப்பணியாளர் ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஸ்ணன் அவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டார்கள். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிட்னியில் Black town இல் அமைந்துள்ள பல்தேசிய கலாசார மண்டபத்தில் சங்கத்தின் நடப்பாண்டு நிதிச்செயலாளர்…
-
கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள்.
கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்தூக்க முயன்றவரின் படைப்பாக்கத்தின் ஆச்சரியங்கள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் முருகபூபதி ” கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு. நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு. மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு. நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.” — இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே இலக்கிய…
-
நாவல்:பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.
நூல் அறிமுகம் : நடேசன் பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தான் அறிந்த ஐந்து விலங்குகளில் மாடுகளை பன்றிகளை பற்றி எழுதமுடியாது. நாய்களும் பூனைகளும் கவிதைக்கானவை என்கிறார். வெள்ளாடுகள் சுறுசுறுப்பானவை என்பதால் அவற்றை வைத்து நாவல் எழுதியிருக்கிறார். தெய்வங்களைப்பற்றி எழுத பேரச்சம் எனவே அசுரர்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார். இப்படி அவர் எழுதிய நாவல் புனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை . கோகுல் எழுதிய ஓவர்கோட்டை(Gogol’s ‘Overcoat’)ஆவிகளின் கதை என்றால் பெருமாள் முருகன் எழுதியது ஆடுகளின்…
-
”நைல் நதிக்கரையோரம்
சாந்தி சிவகுமாரின் வாசிப்பனுபவம் ”நைல் நதிக்கரையோரம்” நான் படித்த முதல் பயணநூல். அதனால், எந்த அனுமானங்களும், எதிர்பார்ப்புகளுமின்றி படிக்க துவங்கினேன். முதல் இரண்டு அத்தியாயங்கள் பயணநூல் போன்று இருக்கலாம். அதன் பின் உள்ள அத்தியாயங்களை படிக்கும்பொழுது வரலாற்று நூலை படிப்பதை போலத்தான் உணர்ந்தேன். முதல் அத்தியாயத்தில் முதல் வரியை அவர் தொடங்கியுள்ள விதம் பலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு வியப்பாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு மருத்துவர் எனும் முத்திரையாகவே நான் அதை பார்க்கிறேன். மருத்துவர் என்பதை கடந்து ஓர்…
-
ஜுலி.
சிறுகதை நடேசன் அது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது. அதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள். அவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும்…