-
கோசாக்கியர் நடனம்(Cossack’s Folk dance )
sholokhov இரண்டு மணி நேரமாகத் தியேட்டரில் அறுநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கோசக்கியரது நடன நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் நடனமாடிய கோசாக்கிய அழகி மேடையில் இருந்து இறங்கி வந்து எனது கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றாள்.அது நான் எதிர்பார்க்காத விடயம். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவளது கைகளால் மேடைக்கு இழுக்கப்பட்டு சென்றேன். அப்படியே நடனம் தொடர்ந்தது. வான்வெளியில் உலவுவதுபோல் இருந்தது.முடிந்தவரையில் கால்களை அசைத்தேன்.அது ஒரு கிராமிய நடனமானதாலும் 20 பேருக்கு மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் ஆடுவதால் அவர்களுக்குள்…
-
உன்னையே மயல் கொண்டு -நாவல்
அத்தியாயம் 1 சந்திரன் படுக்கையை விட்டு எழுந்து, திறந்திருந்த யன்னலை நோக்கிச் சென்றான். ஒவ்வொரு காலடிகளுக்கும் கோல்கோஸ்ட் எனப்படும் அந்த கடற்கரை நகரத்தின் இரவுப்போர்வை அவனது கண்களில் விரிவடைந்தது. யன்னலை அடைந்ததும் கம்பியில் கைவைத்தபடி வெறித்த பார்வையை வீசினான். கண்கள் வெளியே பார்த்தாலும், கருநீலமான பசுபிக் சமுத்திரம் அவனுக்குப் புலனாகவில்லை. தனிமை அவனுக்கு கொடுமையாக இருந்தது. அவ்வளவு பெரிய ஹொட்டலில் தான் மட்டும் தனியாக இருப்பது போல் உணர்ந்தான். வெறுமையான ஏக்கம் நெஞ்செங்கும் நிரம்பி இருந்தது. தனிமை…
-
திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள்
இலங்கைத் திரைப்பட உலகை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞன்! தமிழ்ப்பேசும் மக்களின் கனவுகளை ஆவணமாக்கிய மனிதநேயரையும் இழந்துவிட்டோம்! முருகபூபதி இலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர் திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன! அண்மையில்தான் அவருக்கு…
-
ரஸ்புடின் கொல்லப்பட்ட யுசுபோவ் மாளிகை.
ரஸ்புடின் மெய்க்கீர்த்தி ரஸ்சியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பரவியிருந்தது. நான் படித்த பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அவரது ஆண்குறி பற்றிய செய்திகள் கந்தானைக் குன்றுகள் மீது காற்றிலே தவழ்ந்து என்னையும் அடைந்தது. ரஸ்சியாவினது வரலாறோ அரசவம்சத்தைப்பற்றியோ அறியாத காலம். பெண்களை இலகுவாகக் கவரும் சாமியார். ரஸ்சிய அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதைவிட பிற்காலத்தில் அவரைப் பற்றி அறிந்தாலும் பீட்டர்ஸ்பேர்க் சென்றபோதே பல விடயங்கள் தெளிவானது. ரஸ்புடினை முதலில் சுட்ட அறை, பின்பு அவர் தப்பியோடிய வழி, இறுதியில்…
-
பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் சார்வாகன் (குறுநாவல்.
செங்கதிரோன் – 2000இல் எழுதப் பெற்றுப் பின் 2003இல் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மணிவிழாச் சிறப்பு மலரில் இடம்பிடித்த அவரது ~சார்வாகன்| குறுநாவல், ~மௌனம்| எனும் மகுடம் இட்ட இம் மணிவிழாச் சிறப்பு மலரின் உள்ளே இவ்வளவு காலமும் மௌனித்துக் கிடந்த பின் இப்போது நூலுருப்பெற்று இன்று வெளிவருகிறது. மகாபாரத இதிகாசக் கதையை மையப்படுத்தி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடைபெற்று முடிந்த குருஷேத்திர யுத்தத்தை நாவலின் கருப்பொருளாக்கி அதன்மூலமாக யுத்தத்திற்கு எதிரான மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் குரலாகச் ~சார்வாகன்| எனும்…
-
பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்
ஈழத்தின் இயற்கை எழிலையும் பொருளாதார வளத்தையும் இன ஐக்கியத்தையும் பொப்பிசையில் பேசுபொருளாக்கிய கலைஞன் தமிழ்த்திரையுலகிலும் காலூன்றிய பொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் முருகபூபதி இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வேளையில், 1983 தொடக்கத்தில் தமிழக எழுத்தாளர்கள் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன் ஆகியோரையும் அழைத்திருந்தது. இவர்களில் ரகுநாதன் பாரதி இயல் ஆய்வாளர். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அத்துடன் அவர் எனது அப்பாவின் வழியில் உறவினர். எனக்கு பாட்டா…
-
ஸ்கந்தகுமார் மறைவுக்கு அனுதாபங்கள்
உங்களில் சிலருக்காவது நினைவிருக்கும் என நம்புகிறேன். ஒருசில நாட்களுக்கு முன்பாக, முந்நாள் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னம் மறுபடியும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரசன்னமானதையொட்டி, நான் எனது சிறுபிராயத்து அனுபவத்தைப் பகிர்ந்தேன். அதில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எனது தந்தை கார்த்திகேசனின் போட்டியாளர், சைக்கிள் சின்னத்தைத் தாங்கியவர், ஸ்கந்தகுமார் அவர்களின் தந்தை துரைராஜா அவர்களே. அந்த எமது கோஷங்களையும் மீறி தேர்தலில் வெற்றி பெற்றவர் துரைராஜா அவர்களே. ஸ்கந்தகுமார் எனது தந்தையாரின் வகுப்பில்…
-
துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள்
எமது தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திற்கும் தார்மீக ஆதரவு வழங்கிய சமூகப்பணியாளர் முருகபூபதி ஒவ்வொரு வருடமும் முடிவடையும் டிசம்பர் மாதமும், புதிய வருடம் தொடங்கும் ஜனவரி மாதமும் எனக்கு சற்று மனக்கலக்கமாக இருக்கும். கடந்த சில வருடங்களாகவே இந்தக்கலக்கம் தொடருவதற்கு காரணம் சிலரது இழப்புகள்!!! அவர்களில் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், அல்லது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் இருப்பார்கள். கடந்த 2017 டிசம்பர் மாதத்திலும் புதிய ஆண்டின் (2018) தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் எதிர்பார்த்தவாறே மனக்கலக்கம் வந்தது. இலங்கையில் தெய்வநாயகம்…
-
இலச்சினை மனிதர்- ஞாநி
நாசரத்தை சேர்ந்த யேசு என்பவர் இறந்ததற்கு ரோம சாம்ராச்சியத்தில் ஒரு பதிவு இருந்தாலும் அவர் சிலுவையில் இறந்ததற்கு எந்தப் பதிவுகளிலும் இல்லை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் கிஸ்துவ மதத்தை ஸ்தாபித்த புனித போலால் ( St Paul) எங்கு சிலுவையைக் கண்டாலும் நாம் யேசுநாதரை நினைக்கிறோம். அதாவது ஐக்கோன்(Icon) எனப்படும் இலச்சினை. இப்படியான இலச்சினைகளை மதங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும் உருவாக்கினர்கள். நாம் அரிவாள், சுத்திலைப் பார்த்தால் கம்மியயூனிஸ்ட் இயக்கத்தை நினைப்போம். சில கோடுகளால்…
-
“பாரதிய பாஷா விருது
எழுத்தாளர் மாலனுக்கு “பாரதிய பாஷா விருது” வழங்கப்படுகிறது இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது’ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது கடந்த ஆண்டுகளில், ஜெய்காந்தன், சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன் இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப் புனைவுகளில்…