-
உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு
வெளியே வந்த சந்திரனுக்கு தெரு விளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. திருடிக் கொண்டு வெளியேறும் திருடன் போல், தன்னை யாராவது பார்க்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாராவது நடந்தோ, காரிலோ போகிறவர்கள் தன்னை அவதானிக்கலாம் என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவசரமாக காரை நோக்கி எட்டிக்கடந்து காரில் ஏறினான். காரை ஓட்டும் போது உடல் உறவில் ஏற்பட்ட ஒரு அமைதி நிலையுடன், குற்ற உணர்வும் சேர்ந்து யாழ்பாணத்தில் ஒரு முறை உயர வளர்ந்த தக்காளி…
-
நாவல்: ஜீவ முரளியின் :லெனின் சின்னத்தம்பி.
லெனின் சின்னத்தம்பி நாவலைப் படித்தபோது அவுஸ்திரேலியாவில் ஒரு பஞ்சாபி உணவகத்தில் நான் வேலைசெய்த காலத்தை நினைவூட்டியது. இரண்டு மாதங்களாக பாத்திரம் கழுவிய என்னால் இறுதி வரையும் சப்பாத்தியை வட்டமாக போடத் தெரியவில்லை. இதனால் சமையல்காரரின் உதவியாளராக வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வரியற்று கையில் பணம் வரும் வேலை என்பது கவர்ச்சியாக இருந்தபோதிலும் நமக்கு இது சரி வராத சங்கீதம் என அங்கிருந்து விலகினேன். எந்தத் தொழில் திறமையுமற்றவர்களையும் ஏற்று வேலையளிக்கும் ஒரே இடம் இந்த உணவகங்கள். விசேடமாக…
-
செக்சிவூமன் (Saksaywaman)
காலை முழுவதும் இரயில் பிரயாணம் செய்து மாலையில் மச்சுப்பிச்சியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது அதன் பின்பு காலையில் எழுந்து சன்கேட் எனப்படும் மலைக்குச் சென்று மதியத்தின் திரும்பி மீண்டும் ஹரன் பிங்கம் இரயில் ஏறினோம். இடையில் இரயில் நிலயம் செல்வதற்கு பஸ் அதுவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் அதுவே இராணுவத் தன்மையை அளித்தது. பல இடங்களுக்குத் திரிந்து தொலைந்த பாக்கியம் கிடைக்கவில்லை. மச்சுபிச்சுவிலும் குறிப்பிட்ட அளவாக உல்லாசப்பிரயாணிகளை அனுமதிப்பதால் பெரும்பாலானவர்கள் குழுவாக வந்துபோகிறார்கள்.…
-
மாமனார் நட்ட மாதுளை
பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன். எங்கள் மெல்பன் வீட்டின் பின்புறத்தில் ஒரு மாதுளைச் செடி எனது மாமனாரால் நடப்பட்டது. அவரது மகளுக்கு அது அப்பா நட்டது என்று சொல்வதில் ஆனந்தம்.அவரது காலத்தில் வீட்டில்…
-
அண்டியன் எக்ஸ்பிரஸ்
இரயில்ப்பயணம் எனக்குப் பிடித்தது யாழ்ப்பாணம்- கொழும்பு அதன்பின் கண்டி மலையகம் என மாணவப் பருவத்திலும் சென்னை-டெல்கி பம்பாய்- திருவனந்தபுரம் என தொடந்து பின்பு ஐரோப்பாவின் இரயில்களில் நாடுகள் ஊடாகப் பியாணம் செய்திருக்கிறேன். இப்பொழுது நான் எழுதும் இந்தப் பிரயாணம் மிகவும் வித்தியாசமானது இன்கா அரச பரம்பரையின் தலைநகரான குஸ்கோ அவர்களது தொப்பிள் எனச் சொல்வார்கள். ஆனால் இன்காக்களின் வரலாறு தொடங்கிய இடம் புனாவுக்கு அருகில் உள்ள வாவி. ((Lake Titicaca) இந்த வாவியில் இருந்தே இன்காக்களின் ஆரம்ப…
-
பான்பராக்
நருக் சக்கரபோத்தியா தனது சிவப்பு பொமரேனியன் நாயுடன் எதுவித முன்னறிவித்தலும் இல்லாது எமது மிருகவைத்தியக் கிளினிக்கிற்கு வந்திறங்குவார். குழந்தையைத் தூக்கி வருவதுபோல காவியபடி வந்து தனது நாயின் பிரச்சினையை சொல்வார். பெரும்பாலும் மதிய வேளைகளில் நான் இல்லாதபோது வந்து தெள்ளு மற்றும் புழுவுக்கான மருந்துகள் பெறுவார். பலவருடங்களாக அறிமுகமானவர்.கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து மெல்பேனில் வசிக்கிறார்.சில காலத்துக்கு முன்பாக இளைப்பாறிவர். அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர் என நினைக்கிறேன். மூச்சுத்திணறும் குழந்தையை அவசரமாகத் தூக்கியபடி இந்திய அரசாங்க வைத்தியசாலையின் நீண்ட…
-
உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு
ஆய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில் இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன், போராசிரியர் சிண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும், சந்திரனை “கம் இன்” என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக் கொண்டுவா. அதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு அனுப்ப வேண்டும். அடுத்த ஆய்வுக்கு பணம் பெற இது உதவும். உனக்கு இரண்டு மாதம் தருகிறேன் என்றார்.” நன்றி கூறிவிட்டு…
-
நாவல்:தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்
ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சில காலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு முன்பானது. இன்னமும் செவ்வியல் இலக்கியமாக மட்டுமல்லாது நிகழ்கால இலக்கியமாகவும் பேசப்படுவதற்கு காரணம், கரமசோவ் சகோதரர்கள் மனித வாழ்க்கையின் முரண்பாடுகளை, நம்பிக்கைகளை, மற்றும்…
-
மெல்பனில் கவிதா மண்டலம்
மெல்பனில்: மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த கவிஞர் ஒன்றுகூடல் மறைந்த கவிஞர்களையும் நினைவுகூர்ந்த கவிதா மண்டலம் ரஸஞானி மெல்பனில் நேற்றைய தினம் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலம் நிகழ்ச்சியில் மறைந்த ஈழத்து, தமிழக கவிஞர்களையும் நினைவு கூர்ந்து கவிதைகள் வாசிக்கப்பட்டன. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வ, சங்கத்தின் தலைவர் கவிஞர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில் கிளேய்ட்டன் நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் மூத்த – இளம் தலைமுறையினர் தமக்குப்பிடித்தமான…
-
மத்தியு என்ற சூறாவளி
மிருகவைத்தியர்கள் மகாநாட்டிற்கு முதல்நாள் ஊர்சுற்றிப் பார்பதற்கு போட்டிருந்த திட்டம் பிசுபிசுத்துவிட்டது. கொலம்பியாவில், அரசாங்கத்திற்கும் இடதுசாரி கொரில்லாக்களுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் காரணமாக கற்றகேனாவுக்கு வருகை தந்த முக்கிய வெளிநாட்டுப் பிரமுகர்கள் பாதுகாப்பிற்காக போட்டிருந்த பாதைத்தடைகள் எங்களையும் தடைசெய்துவிட்டது. இதுவரையில் பார்க்காத முக்கிய இடங்களுக்கு மகாநாடு முடிந்த பின்பாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தில் கரிபியன் கடலில் பெரிய சூறாவெளியே உருவாகியது . மத்தியு என்ற பெயரில் சூறாவளி ஒன்று மையம் கொள்வதாக அறிவித்தல் எமது…