-
தமிழர்களின் எதிரிகள் யார்? ஜூலை 13 வெள்ளிக்கிழமை:
ஜூலை 13 வெள்ளிக்கிழமை:நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்!அருமைத்தம்பிமாரும் “My Boys” களும் செலுத்திய நன்றிக்கடன்!?தமிழர்களின் எதிரிகள் யார்….? உறைபொருளும் மறைபொருளும்! முருகபூபதியேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12 பேருடன் (அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர்) விருந்துக்குச்சென்றபோதுதான் யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதனால் கிறீஸ்தவர்களில் பலர் 13 ஆம் திகதி வரும் வெள்ளிக்கிழமை தினத்தை கவலையோடுதான் எதிர்நோக்குவார்கள்.ஐரோப்பிய நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளியன்று வந்தால் வேலைக்குச்செல்வதற்கும் சற்று தயங்குவார்களாம்! அவ்வாறு ஒரு 13 ஆம் திகதியன்று இலங்கையில்…
-
தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:
எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் கலாநிதி அமீர் அலி ( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா) (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் நடைபெற்ற நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை) இத்தலைப்பிலே ஒரு பெரும் சிக்கலுண்டு. அதனைத் தெளிவுபடுத்துதல் முதலில் அவசியம். தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத்…
-
“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை. “தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும்…
-
தாஜ்மாகால்
நடேசன் ஆக்ராவில் தாஜ்மாகாலுக்கு அருகே அரைகிலோ மீட்டருக்கு எரிபொருள் வாகனங்கள் செல்லத்தடை உள்ளதால் நானும் மனைவியும் நடந்து செல்ல முயற்சித்தோம். ரிக்ஸா வண்டிக்காரின் தொல்லை தவிர்க்க முடியாமல் ரிக்ஸாவில் தாஜ்மாகால் வாசல் அருகே இறங்கினோம்.. அனுமதி சீட்டுக்கு நின்ற போது ஏதோ ஓரு பழய கோட்டை வாசல் போல் தோன்றியது. மேற்றல் டிக்டேட்டரால் பரிசோதிக்கப்ட்ட பின் உள்ளே நடந்த போதுதான் அற்புதமான காட்சியொன்று கண்களுக்கு தெரிந்தது. எத்தனை திரைப்படங்கள், புகைப்படங்ககளில் பார்த்து இருந்தாலும் முழுதாக நேரில் பார்க்கும்போது…
-
லா பாஸ் கடிகாரம்
பொலிவியாவின் தலைநகரானன லா பாஸ் நகர அரச கட்டிடத்தில் உள்ள கடிகாரத்தை பார்த்தபடியே நின்ற எம்மைப் பார்த்து ‘இந்தக் கடிகாரத்தில் ஏதாவது விசேடமாகத் தெரிகிறதா? என எமது வழிகாட்டியாக வந்த பெண் கேட்டபோது ‘நேரம் பிழையாக இருக்கிறது’ என்றேன். இதுவரை எமக்கு வழிகாட்டியாக வந்தவர்கள் ஸ்பானிய வம்சாவளியினர் ஆனால் பொலிவியாவில் எமது வழிகாட்டி சுதேச அய்மாறா இனப்பெண் உயரம் குறைந்து குண்டானவர். 35 வயதிருக்கும் நகைச்சுவையான பெண்மணி. அவரது நடையும் பார்ப்பதற்கு உருட்டிவிட்ட உருளைக்கிழங்கு போல் இருப்பதால்…
-
கவிதை நூல் முன்னுரை:பனிவிழும் தேசத்தில் எரிமலையின் சீற்றம்.
ஆதிமனிதன் தனது காதல், பாசம், மற்றும் நட்பு என்ற அகவுணர்வுகளை தன்னுடன் இருப்பவர்களுடன் பரிமாற மொழி உருவாகியது. வோகல்கோட்(Vocal cord) எனப்படும் குரல்நாண் மற்றைய மிருகங்களுக்கு வாய்க்கு சமீபத்திலும் மனிதர்களில் வாய்க்கு தூரத்திலும் உள்ளது. இப்படி குரல்நாண் கீழ் இறங்கியது நாங்கள் பேசுவதற்கு ஏற்றதாகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு மற்றைய மிருகங்கள் போல் ஆரம்பத்தில் மேலே இருந்து கீழ் இறங்குவதுடன் பதினாலு வயதில் குரல் நாண் தடிப்பாகிறது என்பதை எந்தத் தாய் தந்தையராலும் தெரிந்து கொள்ளமுடியும். மேலும் மனிதனது…
-
இனநல்லிணக்கத்தில் இலக்கியவாதிகள் வகிபாகம்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின்…
-
மட்டுநகர் மைந்தன்- செல்லையா இராசதுரை
கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் — (03) பத்திரிகை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து ஆன்மீகவாதியான மட்டுநகர் மைந்தன் முருகபூபதி “அத்திக்காய், காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ, நீ என்னைப்போல் பெண்ணல்லவோ” என்ற பாடலை எமது மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள். 1962 ஆம் ஆண்டில் பி.ஆர். பந்துலு இயக்கிய பலே பாண்டியா படத்திற்காக கவியரசு கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த பாடல். “இந்தப்பாடலில் நிறைய காய்கள் வருவதனால், சென்னை கொத்தவால்…
-
நாவல்:நௌஸாத்தின் கொல்வதெழுதல்90.
கொல்வதெழுதல் 90, ஆங்கிலத்தில் பைனரி(Binary) எனப்படுவது வகையை சேர்ந்தது. எளிமையான புளட்(simple Plot). நாவல் முத்துமுகம்மது என்ற இளைஞனது பாத்திரத்தை சுற்றியே கதை செல்கிறது. அதிகம் கல்வியோ, வசதியோ அற்று ஊரில் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும் சாதாரணமான கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிமுனைவாசி, அரசியலில் ஈடுபட்டு பாராளாமன்ற அங்கத்தவராகுவது கதையின் சுருக்கம். முத்துமுகம்மது என்ற கதாநாயகனுக்கு மிகவும் சவாலான, கொடுமையான, வில்லானாகச் சப்புச்சுல்தான். மாமி மகள், மைமுனா முத்துமுகமதின் காதலி. இந்த மூவரையும் பிரதானமான பாத்திரங்களாக கதை பின்னப்படுகிறது.…
-
உன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்
நத்தார் விடுமுறை ஆரம்பித்து விட்டது. சந்திரனுக்கு ஓய்வாக இருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. பெப்ரவரி மாதம் மெல்பேனில் வேலைக்கு போக வேண்டும். மார்கழி இறுதி வரையும் கொலசிப் காசு கிடைக்கும். மெல்பேணில் முதல் சம்பளம் எடுக்கும்வரை சேமிப்பில் குடும்பம் நடத்த வேண்டும். சோபா பெற்றோருடன் வெளியே போயிருந்தாள். சந்திரன் மட்டும் தனியே இருந்தான். கார் சாவியோட சேர்ந்திருந்த ஜுலியாவின் வீட்டு சாவி இவனை நெருடிக் கொண்டிருந்தது. “இந்த திறப்பை கடிதத்தோடு அனுப்புவது தான் நல்லது. மெல்பேனுக்கு இடம்…