-
அறிமுகம் கானல் தேசம்
சுகு-ஸ்ரீதரன் கானல் தேசம் தமிழ் சமூகத்தில் பேசப்படுவதை விரும்பாத பிரச்சனைகளை கலை இலக்கிய வடிவத்திற்கு கொண்டு வருகிறது. பேசாப் பொருளைபேசத்துணிந்தது. தமிழ்போராட்டத்தின் அறஞ்சார் தராதரத்தை அது அலங்காரம் எதும் இல்லாமல் தனது இயல்பான ஓட்டத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது. போராட்டத்தின் பிரதான போக்கில் பொதிந்திருந்த சர்வதேச அளவிலான “மாபியாதனத்தை” மக்களின் பேரில் சேகரிக்கப்பட்ட உலகளாவிய நிதி எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் கருத்து சுதந்திர இடைவெளியை இல்லா தொழிப்பதில் ஊரிலும் உலகிலுமாக இருந்த மிருக வெறியையும், பிரக்ஞை பூர்வமாக போராட்டத்தில்…
-
நடேசனின் எக்சைல்
சுகு-ஸ்ரீதரன் திருநிலை- புனிதப்படுத்தப்பட்டவை மீதான தீவிரமான கேள்விகள் நடேசனின் எக்சைல் மற்றும் கானல் தேசம் இரண்டு நூல்களும் சமகால கவனத்திற்குரியன. படைப்பு சுதந்திரம் ஒரு சமூகத்தின் சுயவிசாரணை தொடர்பாக அவை முக்கியத்தும் வாய்ந்தன. எக்ஸைல் “முறிந்த பனை” 1990 களின் முற்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. அக்காலத்தில் அது தமிழ் “புனிதங்களை” பற்றி கேள்வி எழுப்பியதால் பூசிப்பவர்களின் கடும் சினத்திற்குள்ளானது. அதனை வாசிப்பவர்களும் அதனை வினியோகிப்பவர்களும் உயிராபத்தை எதிர் கொள்ளும் நிலை நிலவியது. இலங்கையின் எந்த தமிழ் புத்தக…
-
அறச்சீற்றமா? ஆற்றாமையா?
ஜெயமோகனுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் முக்கியமாக கவிஞர்களின் அறச்சீற்றம் ஆழிப் பேரலையென பொங்கியெழுந்ததைக் கண்டு பயந்து போய்விட்டேன் . 2004 மார்கழியை நினைவு படுத்தியது. ஐரோப்பாவில் இருந்து பெருந்தலை எனது பெயரையும் இழுத்து விட்டது. இது அடுக்குமா? ஒருவரின் நண்பனாக இருப்பது குற்றமா ? வேறொருவர் அல்லக்கை என ஒரு நக்கல். ஜெயமோகனது நண்பனாக இருப்பது மட்டும் நல்ல நாவல் எழுதுவதற்கு போதுமா என இலக்கியப் பெரும்தலை என்னை இழுத்துவிட்டிருந்தார். அதாவது கம்பன் வீட்டு கைத்தறி கணக்கில்.எனது நாவல்கள்…
-
நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்
மதிப்புரை ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன.…
-
கானல்தேசம்- முன்னுரை
அப்பிள் நிலத்தில் விழுவது, அதனது காம்பு சூரியவெப்பத்தில் காய்ந்துவிடுவதாலா? காற்று பலமாக வீசியதாலா? புவியீர்ப்பினாலா? அல்லது அப்பிள் மரத்தின் கீழே நின்ற சிறுவன் அதை உண்பதற்கு விரும்பியதாலா? இப்படி பல காரணங்கள் பழமொன்று விழுவதற்கு இருக்கும்போது, ஏனைய விடயங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கலாம் என ருஷ்ஷிய எழுத்தாளர் லியோ ரோல்ஸ்ரோய் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதை வாசித்தபோது இலங்கையில் தமிழர்கள் போராட்டம் தோற்றதற்கு இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல காரணம் என்ற விசாலமான சிந்தனையில் உருவாகியதே இந்த நாவல். அதேவேளையில்…
-
வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”
கருணாகரன்— “வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற எண்ணமே பலரையும் அரசியல் குறித்துச் சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க மட்டுமல்ல, அரசியலில் செயற்படவும் வைக்கிறது. அது நேரடியான பங்கேற்பாகவும் இருக்கலாம். சற்று இடைவெளி கொண்ட ஆதரவாகவும் இருக்கலாம். அதுவும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் நிகழ்கின்ற காலத்தில் அல்லது இன ரீதியான அரசியல் விவகாரம் என்று வந்து விட்டால் இதைச் சொல்லவே தேவையில்லை. இந்த உணர்வு ஒரு உந்துதலாக அல்லது ஈர்ப்பாக மாறி எங்கெங்கோ கொண்டு சென்று…
-
நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி.
மகேந்திரன் திருவரங்கன் இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகி விடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளை வழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், ஏமாற்றியும் வருகிறது. இந்த யுத்தம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறிப்பாக வடக்குக் கிழக்கிலே வாழும் சமூகங்களை…
-
அசோகனின் வைத்தியசாலை : நாவல்
டாக்டர் எம்.கே.முருகானந்தன் இந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத…
-
நூல் விமர்சனம் -வாழும் சுவடுகள்.
– சரவணன் பார்த்தசாரதி : எழுத்துத்துறையில் இயங்கிவரும் பலரும் தமிழில் ‘இளையோர் இலக்கியம் வளரவில்லை’ என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எந்தவோர் இலக்கியமும் வளர்வதற்கு அது சார்ந்த அடிப்படைத் தரவுகள், மேலதிகத் தகவல்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அவை பெரும்பாலும் அபுனைவு (Non-fiction) எழுத்துகளில்தான் நிரம்பிக்கிடக்கின்றன, அபுனைவு எழுத்திற்கும், புனைவுகளின் எண்ணிக்கைக்கும் உள்ளார்ந்த தொடர்பிருக்கிறது. உதாரணமாக, கடந்த நாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ், தமிழ் அரசர்கள், அவர்களின் ஆட்சிமுறை குறித்த ஆய்வுசுள் பெருமளவு நடைபெற்றன. அந்த ஆராய்ச்சியாளர்கள்…
-
கானல் தேசம்: பழைய கள், பழைய மொந்தை ஆனால் தவிர்க்க முடியாதது.
ஹஸீன் நிறைய வேலைகளுக்கிடையில் இந்த நாவலை நான் வாசித்தேன். இந்த கால கட்ட மனிதர்களுக்கு இன்னும் நாவல் வாசிக்க நேரம் இருக்கிறதா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்கும் மீன்டும் எழுந்தது. போழுது போக்குக்காக நாவல் வாசிபபவர்கள் நிச்சயமாக குறைந்துதான் இருக்க வேண்டும்.நாவலை விடபோழுது போக்க கூடிய சாதனைங்கள் எப்போதும் கையில் இருக்கும் படியான காலத்தில் இருக்கிறோம். இப்போது நாவல் படிப்பது தேவை நிமிர்த்தமாக இருக்கிறது. அந்த தேவைகளில் முக்கியமான ஒன்று புரிந்து கொள்ளல் எனும் அடிப்படையில்…