-
கானல் தேசம் – உனையே மயல்கொண்டு
மதிப்பீடு : சி. செல்வராசா ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் 1972-76 வரை பேராதனைப்பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன். அதன் பின் அரசறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987ல் அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து எழுதியது மட்டுமே. நாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து…
-
விமர்சனம் -நடேசனின் வண்ணாத்திக் குளம்
பாலியல் வயது இளையயோடும் ஒரு காதல் கதை. இப்படித் தான் இந்த வண்ணாத்திக் குளம் குறுநாவலின் தொடக்கத்தை என்னால் முதலில் உணரமுடிந்தது. ஆனால் இக்கதைப் பின்னணியின் ஆழத்தை ஒரு தமிழன் என்ற பகுப்பாய்வில் நின்று கொண்டு நான் வாசித்த போது தான், ஏதோ ஒரு ஏக்கம் இளையோடுவதை உணர முடிந்தது. கதையின் கருத்து உணர்த்தும் உள் நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் கொண்டு சென்றிருக்குமா என்ற கேள்வியோடு தான் இதை எழுதுகிறேன். பெரும்பான்மையான இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ நடக்க…
-
1-கரையில் மோதும் நினைவலைகள் கள்ளவிசா.
நடேசன் 62ஆவது பிறந்ததினம் கடந்த மார்கழி 23 ஆம் திகதியன்று மாலை 6.30 மணிவரையும் வேலை செய்தேன். வெளியே சென்று காலையில்; ரெஸ்ரோரண்ட் ஒன்றில் உணவருந்துவோம் என்று மனைவி கேட்டபோது மறுத்துவிட்டேன். கோதில்லாத நண்டு வீட்டில் சமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உணவு சிறந்ததாக இருக்கும்போது வெளியில்போகத்தேவையில்லையே? ஆனால், வாய்க்கு இதமாகவும் சமிப்பதற்கு வசதியாகவும் வெள்ளை வைன் போத்தல் ஒன்றை வாங்கிவருவதற்கு நினைத்தேன். நியூசிலாந்து ஓய்ரர் பே சவன் பிலாங் எனக் கேட்டேன். வெள்ளை வைனும் கடல் உணவுக்குப் பொருத்தமானது…
-
கானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.
ஆங்கிலத்தில் pregnant pause என்று ஒரு வார்த்தையுள்ளது . அதாவது கேள்விக்கு பல பதில்களை வைத்தபடி கேட்பது. உதாரணமாக- do you love me ? என்றால் அதற்கு பல பதில்கள் இருக்கலாமல்லவா? அப்படியான கேள்வியைக் கேட்டு விட்டு பதிலுக்காக காத்திருக்கும் அந்த இடைவேளை pregnant pause என்பது. அதேபோல் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டு பேசாமல் இருப்பது மிகவும் கடினமானது . அதிலும் பத்திரிகை ஆசிரியராகவும் பின்பு ஒரு நாவலாசியராக மாறிய எனக்கு அப்படியான கர்ப்பமான…
-
அறிமுகம் “எக்ஸைல்” எனது நோக்கு.
கலாநிதி மு. ஸ்ரீகௌரிசங்கர் எக்ஸ்ஸைல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பின்வருமாறு விளங்கப்படுத்தியுள்ளார்கள். Exile: the state of being barred from one’s native country, typically for political or punitive reasons. அதாவது ஒருவர் தேசத்தினின்று அகற்றப்படுதல் அல்லது வேறு நாட்டில் தலைமறைவு வாழ்வு வாழுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இது ஏன் நடைபெறுகிறது என்பதிற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படமுடியும் என்றாலும் நடேசன் அவர்கள் இங்கு தனது அனுபவம் மூலம் வித்தியாசமான ஓர் உணர்வை…
-
கானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு
எதிர் மறையான கருத்துகள் பலமானவை .உத்வேகத்தைக் கொடுப்பவை. 2016வது ஆண்டில் வந்த புத்தகங்களில் சிறந்தது வாழும்சுவடுகள் எனக் கவிஞர் சல்மா ஆனந்தவிகடனில் சொன்னார். அதேபோல் ஜெயமோகன் ராமகிருஸ்ணன் போன்றோர் அதைத் தமிழுக்குப் புதுவரவெனச் சிலாகித்தனர். அதேபோல் 13 ஆண்டு அசோகனின் வைத்தியசாலையைப் பலர் நன்றாகச் சொன்னார்கள். இரண்டும் முதல் பதிப்பைத் தாண்டாது பதுங்கு குழிகளில் கிடக்கின்றன. 2019 ஆண்டு தைமாதம் வெளிவந்த கானல் தேசம் இரண்டாவது பதிப்பை நோக்கிப் பிரவேசிப்பதான நேற்று எனது நண்பர் சொன்னார் .…
-
மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்
விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு ரஸஞானி படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் ” தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து ” என்றுதான் சொல்லிவருகிறார்கள். முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள். தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான், அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக…
-
விமர்சனம் -வாழும் சுவடுகள்
விஜி ராம் ஒரு கார்காலத்து சனிக்கிழமை மதியம் உங்கள் ஓய்வு நேரத்தில் இலக்கியம் பேசவும் கேட்கவும் சிந்திக்கவும் வந்திருக்கும் உங்களனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். இந்த வாய்ப்பினை எனக்கு நல்கிய திரு நோயல் நடேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும். எனக்கு கொடுக்கப்பட்ட “வாழும் சுவடுகள்” எனும் இந்த புத்தகம். 2015 காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் அவர்கள் பின்னுரை எழுதி இருக்கிறார். ஒரு மிருக வைத்தியராக தன் தொழில்சார்…
-
அவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019
ஈழத்து மல்லிகை ஜீவாவின் வாழ்வும் பணிகளும் – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகம் – கவிஞர் அம்பியின் கவிதை உலகம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்படும் கன்பராவில் வதியும் கலை – இலக்கிய அன்பர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23 ஆம் திகதி ( 23-06-2019) ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு – 2019 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கலை, இலக்கிய ஆர்வலர் திரு. சிவசபேசன் தலைமையில் கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் ( Canberra Tamil Senior Citizens’ Meeting Hall,…
-
நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை
“பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் ” என்பதை உணர்த்தும் நாவல் விமர்சன உரை: சாந்தி சிவக்குமார் ( மெல்பனில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற நடேசனின் நூல்கள் பற்றிய அறிமுக – விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) நடேசன் அவர்களுடைய “அசோகனின் வைத்தியசாலை நாவல்”, இரண்டு சிறப்புகளை உடையது. நான் முதன்மையாக கருதுவது புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கடந்த கால வாழ்க்கையையும் ஏக்கங்களையும் மட்டுமே பிரதிபலிக்கிற கதைகளாக இல்லாமல் நிகழ்காலத்தில்,…