-
7: கரையில் மோதும் நினைவலைகள்.
சிட்னியின் மேற்குப் பல்கலைக்கழகம் – தொழிலாளர் நிலையில் இருந்து விஞ்ஞான ஆய்வாளன் என தொழில் கிடைத்தபோது ஆரம்பத்தில் ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை ஏற்பட்டது . எந்த ஒரு வழிமுறையும் இல்லாது , என்னிடம் பொதுமக்கள் நலம் சம்பந்தமான ஒரு புறொயெக்ட் தரப்பட்டது . சிட்னிக்கு வடக்கே சில நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லாச பிரயாணிகள் செல்லும் நகரம் கொஸ்காபர். இந்த நகரத்தில் வெளியேறும் மனித கழிவுகளின் திண்ணப்பகுதி வடிகட்டப்பட்டாலும் திரவப்பகுதி…
-
மெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:
மெல்பன் கே.சி தமிழ்மன்றத்தின் வருடாந்த பொங்கல் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் Keysborough GAELIC மைதானத்தில் காலை முதல் மாலை வரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வெளியரங்கில் மூத்த இளம் தலைமுறையினரின் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப்போட்டிகளும் உள்ளரங்கில் சிறார்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் கைவினை, கோலம் வரைதல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இம்முறை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கதை சொல்லும் நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மெல்பன் எழுத்தாளர் விலங்கு மருத்துவர் நடேசனின் சிறுகதையொன்றை திருமதி…
-
அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை
– கருணாகரன் ஈழயுத்தம் முடிந்த பிறகு, 2010 இல்தான் நடேசனுடன் அறிமுகம் கிடைத்தது. புலம்பெயர் சமூகப் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த சந்திப்பில் பூபதியும் நடேசனும் வேறு சில நண்பர்களும் வந்திருந்தனர். முருகபூபதியே நடேசனை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு அவுஸ்திரேலியாவில் “உதயம்” என்ற பத்திரிகையை நடத்துகிறார். வண்ணாத்திகுளம் என்ற நாவலை எழுதியவர். மெல்பேணில் புலிகளின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கும் ஆள் என்ற அளவிலேயே நடேசனை அறிந்திருந்தேன். யுத்தம் முடிந்த பிறகு மாறியிருந்த சூழலில் நடேசனும் அவுஸ்திரேலியாவிலிருந்து…
-
காட்டுத் தீ (2009)
ஆஸ்திரேலியா என் ஆஸ்திரேலியா! – நடேசன் – எந்தக்காலத்திலும் இல்லாமல் இந்த கோடைகாலம் எப்பொழுது முடியும் என காத்திருந்தேன். விக்ரோரியாவில் இந்தக் காலத்தில் பற்றிய காட்டுத் தீ 210 மனித உயிர்களை பறித்து விட்டது. இரண்டாயிரத்துக்கு(2029) மேற்பட்ட வீடுகள், இதைவிட தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்களுடன் காட்டு விலங்குளும் ஆயிரக்கணக்கில் கருகிவிட்டன. ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இவ்வளவு அதிகமானவர்கள் ஓரே நேரத்தில் இறந்தது இல்லை. மனித உயிர்களுக்கு பெருமதிபபு அளிக்கும் இந்த நாட்டின் மனசாட்சியை…
-
நாவல்:தோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை
நடேசன் “Happy families are all alike, every unhappy family is unhappy in its own way. “ ( குதூகலமான குடும்பங்கள் ஒன்றே போல் இருக்கும் . ஆனால் சந்தோசமற்றவர்களது குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனியானது “https://youtu.be/D1l2OgeFq9cதனது அன்னா கரீனினா நாவல் எதைப் பற்றியது என டால்ஸ்டாய் முதல் பந்தியிலேயே இவ்வாறு சொல்லிவிட்டார். கடலோரக் கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரானின் முதல் நாவல் என்றபோதும் மூன்றாவது பந்தியிலேயே கதையின் கரு வந்துவிட்டது.…
-
6: கரையில் மோதும் நினைவலைகள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதி “எடேய், இதெல்லாம் சினிமா நடிகைகள். சரஸ்வதி சபதத்தில் நடித்தவர்கள். இவர்களைக் கும்பிட்டால் எப்படி படிப்பு வரும்?“ என் நண்பன் தூசண வார்த்தைகளைப் பேசி அடிக்க வந்தான் . நான் சிரித்தபடி மேல்மாடி விடுதியில் இருந்து கீழே ஓடி ஒளித்தேன். கிட்டத்தட்ட ஒரு கிழமை என்னுடன் அவன் முகம் கொடுத்துப் பேசவில்லை . யாழ்ப்பாணம் இந்து கல்லுரியின் விடுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு கட்டிலும் ஒரு கபேட் எனப்படும் சிறிய அலுமாரியும் தருவார்கள். அந்த அலுமாரி,…
-
சிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்.
நடேசன் “இது எமது சிவப்பு விளக்குப்பகுதி “ என்றான் எனது வழிகாட்டியாக வந்த டாக்சி சாரதி . முழுநாளும் அவனது டாக்சியை வாடகைக்கு எடுத்துக் கொண்டதால் எனது மொழிபெயர்ப்பாளர் , வழிகாட்டி மற்றும் பாதுகாப்பாளர் முதலான பல தொழில்கள் அவனுக்கிருந்தது. முப்பது வயதான இளைஞன். அமெரிக்காவில் ஏற்கனவே பலகாலம் வாழ்ந்ததால் ஆங்கிலம் சரளமாக வந்தது. “அப்படியா ? “ எனக்கேட்டு, என் கண்களால் அந்தத் தெருவை அளந்தேன் “இப்பொழுது அல்ல , ஒருகாலத்தில் விலைமாதர்கள் நிற்கும் தெருவாக…
-
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்
சொல்ல மறந்த கதைகள்: புதுவை இரத்தினதுரை நினைவுகள் முருகபூபதி புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை.…
-
5:கரையில்மோதும் நினைவலைகள்: வேலை தந்த தேவதை.
நடேசன் யாழ்ப்பாணம் “நீ தீவான். ஆர்ட்ஸ் படித்து என்ன செய்யப்போகிறாய்? இந்துக்கல்லுரிக்கு எஞ்ஜினியரிங் படிப்பதற்கு எல்லோரும் வருகிறார்கள் “ என்று பொன்னம்பலம் மாஸ்டர் முகம் சிவந்த கோபத்துடன் எனது இடக் காதை பிடித்துத் திருகியபடி 9 ஆவது வகுப்பில் கலைப்பிரிவில் இருந்த என்னை பாடசாலை வராந்தாவில் இழுத்துக்கொண்டு போய் இரண்டு வகுப்பறைகள் தள்ளியிருந்த கணிதப்பிரிவில் இருக்கும்படி கட்டளையிட்டார். உயரமானவர். எனது எட்டாம் வகுப்பில் தமிழாசிரியர். எனது தந்தையைத் தெரிந்த ஆசிரியர் அத்துடன் எங்கள் குடும்பத்தில் கொண்டும் கொடுத்த…
-
பிராணவாயுவைத் தேடி
ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்-2 நடேசன் கீற்றோவிற்கு செல்லும் எவரும் பார்ப்பதற்குத் தவறாத இடம் பூமத்திய ரேகை என்னும் கற்பனையான கோடாக நினைக்கும் புவியின் மத்திய பகுதி.அதனாலேயே ஸ்பானிய மொழியில் ஈகுவடோர் எனப் பெயர் வந்தது. பூமத்திய ரேகை கீற்றேவிற்கு வடக்கே செல்கிறது. கீற்றோ மத்திய நகரம் கோட்டிற்கு தெற்கேயுள்ளது. 200 வருடங்கள் முன்பாக பிரான்சின் புவியியல் விஞ்ஞானிகளது வருகையை கவுரவிக்கும் முகமாக பூமத்திய ரேகை வரையப்பட்டு, அங்கு கண்காட்சியகம் , பூங்கா என்பன…