Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • வண்ணாத்திக்குளம்;பாலில் கலப்படம்

    மன்னார் ரோட்டும், யாழ்ப்பாண ரோட்டும்; மதவாச்சியில் ஒன்றாக சந்தித்து கண்டி ரோட்டாக மாறுகிறது. இந்த சந்தியின் இடைவெளியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தைச் சுற்றி கடைத்தெரு உண்டு. இரண்டு உணவுக் கடைகள் இஸ்லாமியரால் நடத்தப்படுகிறது. தமிழர்கள் அரசாங்க வேலை பார்த்து விட்டு வார இறுதியில் காணாமல் போய் விடுவார்கள். மீண்டும் திங்கட் கிழமையில் உயிர்த்தெழுவது போல் தோன்றுவார்கள். மன்னார் வீதியில் சிறிதாக ஒரு வீட்டை வாடகைக்கு நாங்கள் எடுத்துக்கொண்டோம். விடுதியை விட்டு சென்றது என் நண்பர்களுக்கு…

    noelnadesan

    07/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல: 4

    விடிந்தது நான் இருந்த கட்டிடத்தினுள் சுற்றும் முற்றும் பார்த்தேன், சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இருந்தார்கள். எம்முடன் சாவகச்சேரியில் கைதிகளாக இருந்து விடுதலை என்று அழைத்துச் செல்லப்பட்ட எல்லோரும் அங்கு இருந்தார்கள். எல்லோருமே விடுதலை செய்யப்படவில்லை. பல புதிய கைதிகளும் இருந்தார்கள். பல கைதிகள் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்கள். அநேகர் தலை மொட்டை அடிக்கப்பட்டும், கண்ணிமை வழிக்கப்பட்டும் காணப்பட்டார்கள். என்னையும் இப்படித்தான் செய்வார்களோ என்ற பயம் பிடித்துக் கொண்டது. காலை 7 மணிப்போல் சகல கைதிகளும் மைதானத்திற்கு…

    noelnadesan

    07/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்;தீவுப்பகுதி

    சித்ராவுடன் யாழ்ப்பாணம் செல்ல தீர்மானித்தபோது நாங்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது நல்லது என முடிவு செய்தோம். தாயாரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ரயிலில் செல்வது நல்லது என மகளின் காதில் சொல்லப்பட்டது. மோட்டார் சைக்கிளில் போனால் எல்லா இடங்களுக்கும்; போகமுடியும். அத்துடன் இரண்டு நாள்கள் சென்று திரும்ப வேறு வழியில்லை என வாதிட்டபோது தாயும், மகளும் ஏற்றுக் கொண்டார்கள். வெள்ளிக்கிழமை காலையில் மதவாச்சியில் இருந்து புறப்பட்டால் மூன்றரை மணி சொச்சத்தில் யாழ்;ப்பாணம் சென்று விடலாம் என நினைத்துப்…

    noelnadesan

    07/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல- 3

    வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் அவர்கள் பதவியேற்று யாழ நகருக்கு வந்த போது பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவருக்கு மாலை அணிவித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேலே கூறப்பட்டவை ஒரு சில சம்பவங்களே ஆனால் வெறும் ஐயப்பாட்டிலும், கோபதாபங்களிலும் கூட பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இப்படியான குற்றச் சாட்டுக்களின் பேரில் 3000க்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் வடமாகாணம் முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். பிள்ளை தமக்கெதிரான இயக்கத்திலிருந்தால் தந்தை கைது செய்யப்படுவார்.…

    noelnadesan

    06/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்;அக்சிடென்டல் ஹீரோ

    அநுராதபுரத்தில் இருந்து பஸ்ஸில் வருவதற்கு, இரவு பத்து மணியாகி விட்டது. அன்று வார விடுமுறை தினம். இதனால் குணதாசா நண்பர் ஒருவருடன் மதுபானத்தால் இரத்த நாடிகளை சூடாக்கி கொண்டிருந்தார். காமினியும் ருக்மனும் அவருக்குப் பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர். என்னைப் பார்த்ததும் குணதாச ‘எப்படி உங்கள் தேர்தல் கடமைகள் சுமுகமாக முடிந்ததா’ என நகைச்சவை கலந்த போதையில் கேட்டார். ‘தேர்தல் எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால் எனக்குத்தான் நேரம் சரியில்லை’. ‘அப்படி என்ன நடந்தது’ என காமினி…

    noelnadesan

    05/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்;தங்கப்பல் ரகசியம்

    திருமணப்பதிவு காலை பத்துமணியளவில் நடந்தது. வீட்டின் முன்பக்கத்தில் மாமரத்தின் கீழ் மேஜை வைக்கப்பட்டு மஞ்சள் துணி விரிக்கப்பட்டிருந்தது. சுற்றி பல கதிரைகள் வரிசையில் போடப்பட்டிருந்தன. சித்ரா வேலை பார்க்கும் பதவியா மகா வித்தியாலயத்தின் கதிரைகள் என நினைக்கிறேன். ருக்மனின் நண்பர்கள், சித்ராவின் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ருக்மனின் நண்பர்கள் ஜேவிபி கட்சியின் பதவியா பிரதேச உறுப்பினர்கள் என நினைத்தேன். சில மாதங்களுக்கு முன்னர் சிறிபுர பகுதியில் பண்ணையில் கோழிகள் இறப்பதாக எனக்கு…

    noelnadesan

    05/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல – 2.

    சாவகச்சேரி சாள்ஸ் முகாமுக்கு வந்த அடுத்த நாள் என்னிடம் இருந்த உடமைகள் எல்லாம் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டன. நான் கைது செய்யப்படும் போது என்னிடம் 1 பவுண் மோதிரம் ஒன்றும் பணமாக ரூபா எண்ணாயிரத்து முன்னூறும் இருந்தது. அத்துடன் எனது தேசிய அடையாள அட்டையும் இருந்தது. இவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. இம்முகாமில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகளில் பலருக்கு பொக்கிளிப்பான் நோய் கண்டிருந்தது. அவர்களை முகாமின் பின் கோடியில் அமைந்திருந்த ஓலைக் கொட்டிலில் காவல் வைப்பார்கள்.…

    noelnadesan

    05/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல – 1.

    சமரன் 1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வட-கிழக்கு மக்களும் யாழ்ப்பாண பத்திரிகைகளும் புலிகளின் வரவை ஒரு வகையில் வரவேற்றனர். இந்நிலையில்தான் மாகாண அரசை ஆதரித்த தமிழ் மக்கள் மீது புலிகளின் பழிவாங்கல்…

    noelnadesan

    04/06/2020
    Uncategorized
  • வண்ணாத்திக்குளம்;நூலக தகனம்

    காலை நேரத்துடன் எழுந்து விட்டேன் என்று சொல்வதை விட நித்திரை கொள்ளவில்லை என்பதே பொருத்தமானது. அம்மா தந்த கோப்பியைக் குடித்து விட்டு கொக்குவில் ஸ்ரேசனில் ரயில் ஏறி விட்டேன். மதவாச்சி ரயில் நிலையத்தில் எனக்காக காமினி மோட்டார் சைக்கிளில் எதிர்பார்த்துக் கொண்டுஇருந்தான். இருவருமாக விடுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து பதவியா சென்றோம். மனதில் பல நினைவுகள் ஆக்கிரமித்தபடியால் காமினியிடம் சைக்கிள் ஓட்டும் பொறுப்பை விட்டு விட்டேன். கெப்பிற்றிகொல்லாவ வரை எதுவும் பேசவில்லை. எனது மௌனம் காமினிக்குப் பொறுக்கவில்லை.…

    noelnadesan

    03/06/2020
    Uncategorized
  • நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல..

    மன்றாட்டம் ஓ கடவுளேஉடலின் பிரயர்த்தனம் உயிரைக் கெஞ்சிப் பற்றிக்கொள்வது.இந்த மனமோதாங்கொணா வேதனையை விடச்சாகலாமெனத் துடிக்கிறது.பரந்த பூமியில்தர்மம் நீதி நியாயங்கள் யாவும்கண்களை மூடிக் கொண்டன.உலகம் முழுக்கப் பெயரை ஒட்டிக் கொண்டமனித உரிமை அமைப்புக்களோசெவிகளைப் பொத்திக் கொண்டனர்.மக்களென்று எஞ்சியவர்கள்வாய்களைப் பொத்திக் கொண்டனர்.யாவருமாக கேள்வியற்று வதைக்கும்பூரண சுதந்திரத்தை தாரை வார்த்து விட்டதன் பின்னால்ஆண்டவரே,மன்றாடுகிறோம்கதியற்றசித்திரவதைக் கைதிகள் நாம்எமக்கு மரணத்தைத் தாரும். இந்தப் புத்தகத்தை வாசித்து மூடுகையில் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிடாத ஒரு சராசரி மனிதனின் மனதில் எங்கள் சமுதாயத்தில் மனிதாபிமானம் எவ்வளவு இழிநிலை…

    noelnadesan

    03/06/2020
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 62 63 64 65 66 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 103 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar