Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • வாழும்சுவடுகள் இரண்டு

    அணிந்துரை – கோவை ஞானி ஆஸ்திரேலியாவில் கால்நடை மருத்துவராகக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டாக்டர் என்.எஸ் நடேசன் அவர்களை நேரில் நான் அறியவில்லை என்றபோதிலும், அவரது வாழும் சுவடுகள், வண்ணாத்திக்கும் ஆகிய படைப்புகளைப் படித்த நிலையிலும், அவரது படைப்புகளுக்கு திருவாளர்கள் எஸ்பொ- முருகபூபதி-எஸ் ராமகிருஷ்ணன் ஆகியவர்கள் வழங்கியுள்ள அணிந்துரைகளில் இருந்தும் நடேசன் அவர்களை என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்போல் உணர்கிறேன். வாழும் சுவடுகள் இரண்டாவது தொகுதி என்ற மகுடத்தில்; வெளிவரும் இந்த நூலை அணிந்துரை எழுதுவதற்குப்…

    noelnadesan

    31/07/2020
    Uncategorized
  • தற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்

    2012 ல் எழுதியது கொஞ்சம் எடிட் பண்ணியது நடேசன் கம்போடியாவில் ரொன்லி சப் என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தி;ல் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் பகுதி; மக்கள் 100கிலோ மீன்பிடிப்பதன் மூலம் தங்கள் உணவுத் தேவையை தீர்த்துக்கொள்வார்கள். கம்போடியாவின்…

    noelnadesan

    27/07/2020
    Uncategorized
  • கோவை ஞானி நினைவுகள்

    அஞ்சலிக்குறிப்பு: மனக்கண்ணால் இலக்கியம் பேசியும் எழுதியும் இயங்கிய ஆளுமை ! முருகபூபதி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூரில் மாலைநேர தனது வீதியுலாவுக்கு என்னை அழைத்துச்சென்ற மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இம்மாதம் ( ஜூலை ) முதலாம் திகதிதான் அவர் தமது 85 வயது அகவையை நிறைவுசெய்துகொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்தபோது, யுகமாயினி சித்தனுடன், சென்று அவரைப்பார்த்துவிட்டுத் திரும்பி, ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன்.…

    noelnadesan

    23/07/2020
    Uncategorized
  • அலைந்து திரியும் ஆவிகள்

    ( சிறுகதை )நடேசன் ஒரு எழுத்தாளனாக இருப்பவன் தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கவும் மற்றவர்கள் கதைகளைக் கேட்கவும் வேண்டும். ஒரு விதத்தில் பூக்களை வாங்கி மாலையாக்கும் பூக்காரியின் தொழில் போன்றதுதான் கதையாக்கமும். அப்படியான ஒரு கதையை உங்களிடம் சொல்லப் போகிறேன். கடந்த வருடம் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்குத் தனியாகச் சென்றேன். ஹோட்டலில் தங்கி, ஏன் தேவையில்லாமல் அதிக பணத்தை செலவழிக்கவேண்டும் என நினைத்து சென்னையில் உள்ள என் நண்பனிடம் பேசியபோது, அவன், தனது நண்பனது மாடிக்கட்டிடம் ஒன்றுள்ளது.…

    noelnadesan

    20/07/2020
    Uncategorized
  • உங்கள் பாவங்களை கழுவ கடைசி சந்தர்ப்பம்

    ( 2009ல் எழுதி அஸ்திரேலியா உதயம் பத்திரிகையில் வெளியாகியது) நடேசன் இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தமிழர் பலருக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் கொடுப்பவையாக இருப்பவை. இதன்காரணத்தால் இப்படி விளைவுகளுக்கு யார் மேலாவது பழியை போடவேண்டும் என தேடும் போது பலருக்கு இலங்கையில் தற்போது அரசியல் நடத்தும் மகிந்த இராஜபக்ச அரசாங்கம் கண்முன்பு தெரியும். அதேபோல் சிலர் விடுதலைப்புலிகளின் அரசியல் விவேகமற்ற இராணுவ ரீதியான போக்கு இதற்கு பொறுப்பு என சொல்வார்கள். கடந்த முப்பது வருட அழிவுகளுக்கும் உயிர்…

    noelnadesan

    15/07/2020
    Uncategorized
  • நாவல்:இமயத்தின் கோவேறு கழுதைகள்

    நடேசன் இருட்டறையில் பல வருடங்கள் பாதுகாக்கப்பட்ட வைன் நாக்கில் மட்டுமல்ல, சுவை நரம்புகள் அற்று அறியமுடியாத அடித்தொண்டையிலும் சுவைக்கும். அதுபோல் பலகாலமாக எனது அலமாரியில் இருந்து பின் பெட்டிகளில் புகுந்து ஒளித்திருந்த நாவல் இமயத்தின் கோவேறு கழுதைகள். 25 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதியது என்றபோது ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் வாசித்திருந்தால் சில மணிநேரத்தில் வாசித்துவிட்டு வைத்திருப்பேன். தற்போது வாசிப்பதற்கு ஒரு கிழமை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நல்ல இலக்கிய வாசிப்பும் கலவி மாதிரி. நான்…

    noelnadesan

    13/07/2020
    Uncategorized
  • பஷீர் சேகுதாவூத்

    முருகபூபதி – மெல்பன் – அவுஸ்திரேலியா தோழர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் எழுத்துக்களையும் கருத்துக்களையும் அவ்வப்போது படித்து வருகின்றேன். அவருடைய சிந்தனைகளில் மிளிரும் இன நல்லிணக்கம் எவ்வாறு உருவாகுதல் வேண்டும் , இஸ்லாமிய மக்கள் குறித்த சந்தேகங்கள் எவ்வாறு களையப்படல்வேண்டும், தேசத்தின் அபிவிருத்தியில் அனைத்து இனமக்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்ளவேண்டும் முதலான எண்ணங்கள் என்னை பெரிதும் கவர்ந்தவை. அவரை சந்தித்து உரையாடல்வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் நீண்டகாலம் நீடித்திருந்தது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் (…

    noelnadesan

    10/07/2020
    Uncategorized
  • Racialized bodies in bio-medical settings

    By Rajes BalasubramaniamMA Medical Anthropology 1994 The increasing power of bio-medicine has been very little time for a holistic approach in treating people. The development of bio-medicine and the doctors’ relationship with his patients is always the relationship of a master and servant, as medical language, technology investigations and practices are often alien to the…

    noelnadesan

    09/07/2020
    Uncategorized
  • ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!

    – நடேசன்- “”ஜனற், உனது தாயார் இந்த ஓய்வு இல்லத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது உனது மனநிலை எப்படி இருந்தது””? “”எனது மனத்தில் ஓர் ஆறுதல் உணர்வு ஏற்பட்டது. நான் வேலையில் இருந்து களைப்பாக வீடு வந்ததும் அம்மாவிடம் பேசவேண்டும். நாள் முழுவதும் தனியே இருந்த அம்மா நான் வந்ததும் என்னுடன் பேசுவதற்கு வருவார். நான் மனமும் உடலும் களைத்த நிலையில் சாவகாசமாக உரையாட முடியாது, நான் வந்தவுடன் எனக்காக அம்மா கஸ்டப்பட்டு சமைக்க வேண்டும். தான்…

    noelnadesan

    07/07/2020
    Uncategorized
  • அஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.

    தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம் முருகபூபதி மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின் நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance – NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது…

    noelnadesan

    03/07/2020
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 58 59 60 61 62 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar