-
மனநோய்களும் திருமணங்களும்.
நடேசன். இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் சந்தித்தேன். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் அந்தப் பெண்ணை “ அங்கொடை சில்வா “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால், அந்த வார்த்தையின் உள்ளர்த்தம் என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அங்கொடை என்ற இடம் இலங்கையில் பிரதான மன நோய் வைத்தியசாலை அமைந்துள்ள கொழும்பின்…
-
எக்ஸைல்
” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. ஜெயமோகன்
-
23 கரையில் மோதும் நினைவலைகள்.
ஈழமுரசில் எனக்கெதிராக பிரசுரிக்கப்பட்ட வாசகர் கடிதம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை குறிக்கப்பட்ட நாளில் கிளன்வேவளியில் உள்ள விடுதலைப்புலிகளது ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரது வீட்டில் நடக்கவிருந்தது. நாங்களும் நண்பர்கள் கொண்ட ஒரு குழுவாகச் சென்றோம். அந்தக் குழுவில் நானும் என்னுடன் நண்பர்களான லோயர் ரவீந்திரன் மற்றும் சிவநாதன் உடன் வந்தனர். மாலை மயங்கிய நேரத்தில் அங்கு சென்றபோது எனது கண்ணில் தெரிந்தது கல்லூரி நண்பன் ஒருவனது சிரித்த முகம் , என்னுடன் இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பில் படித்த இரத்தினகாந்தனது, இருபது…
-
ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்:அஞ்சலி
ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் விடைபெற்றார் ! முருகபூபதி “ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு…
-
கானல்தேசத்தில் மெல்பேன்
“மெல்பேன் தமிழ் உறவுகளிடமிருந்து வரும் போராட்ட நிதி யுத்த நிறுத்தத்தின் பின் குறைந்து விட்டது. பலர் ஊரில் தங்கள் உறவினர் மூலமாக விடுதலைப்புலிகளிடம் கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் இனி சமாதானம் வந்து விட்டது. பணம் ஏன் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் மண்ணில் போராடுபவர்களுக்கு எப்படி பணம் அனுப்புவது? மற்ற நாடுகளைப் போல் இலங்கைக்கு விடுமுறையில் செல்பவர்களிடம் விசா மாதிரி பணம் அறவிட்டால் தான் சரிவரும் ” என்று ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். “நீங்கள்…
-
எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்.
நடேசன் ————————————————- எஸ் . பொ. என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ இல்லையோ, அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா? அவர் எனது நான்கு நூல்களைப் பதிப்பித்தவர். என் கையைப் பிடித்துக் கதை எழுதுபவனாக அழைத்துச் சென்றவர். அவர் இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் ஒரு மிருக வைத்தியனாகவும் ஓய்வு வேளைகளில் கையில் விஸ்கி கிளாசுடனும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொரித்த…
-
கலாநிதி கார்த்திகா கணேசர்.
பவளவிழாக்காணும் நாட்டிய நர்த்தகி கலாநிதி கார்த்திகா கணேசர் ஆய்வாளராகவும் அயராது இயங்கும் கலைஞர் ! முருகபூபதி இலங்கையின் மூத்த பரத நாட்டிய நர்த்தகியும், தமிழ்க்கலை உலகப்புகழ்பெற்ற நடனக்கலைஞர் ( அமரர் ) பத்மபூஷன் வழுவூர் இராமையா பிள்ளை அவர்களின் சிரேஷ்ட மாணவியுமான கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் இந்த ஆண்டு பவளவிழாக் காணுகிறார். அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் இவர், இங்கும் தனது ஆற்றல்களை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தியவாறு நடனம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும்…
-
ராஜேஸ் பாலாவின சிறுகதைகளில் பெண்ணிய வெளிப்பாடு
நவஜோதி ஜோகரட்னம் லண்டன் கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே அறிய வந்தேன். பாரிசில், எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கியம், அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போதும் ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று…
-
துரோகி என்று என்னை வர்ணித்த ஈழமுரசு பத்திரிகை
22 கரையில் மோதும் நினைவலைகள். நடேசன் “ உங்கள் பத்திரிகைக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது..? “ இது நான் எனக்குத் தெரிந்த ஒரு சட்டத்தரணி ஊடாக மற்றும் ஒரு பத்திரிகையான ஈழமுரசுவுக்கு அனுப்பிய கடிதத்தின் சாராம்சம். அவுஸ்திரேலியாவில் நான் ஆரம்பித்து 12 வருடகாலம் நடத்திய உதயம் பத்திரிகை வெளிவந்த காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு அது. அதனையொட்டி நடந்த பல விடயங்கள் தொடர்ந்தும் நிழலாடுகின்றது . அந்தக்கடிதத்தை அந்த ஈழமுரசுவுக்கு அனுப்புவதா வேண்டாமா…
-
சுனாமி– கானல்தேசம்
கார்த்திகா முல்லைத்தீவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக கிளிநொச்சி முகாமுக்கு வந்திருந்தாள். அங்கு அவள் கண்ட காட்சிகள், பிணங்களில் இருந்து வந்த துர்நாற்றம், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்கள் என்பன அவள் மனதில் ஆழமாக பதிந்து கனவிலும், நினைவிலும் கரப்பான் பூச்சிகளாக தொடர்ந்தன. விலகிச் செல்ல முடியவில்லை. சதாமுகத்தை மொய்த்தன. இரண்டு நாட்கள் மட்டுமல்ல எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவை அவளை விட்டு தொலையாது என்ற உணர்வைக் கொடுத்தன. இது போன்ற அனுபவம் அவள் வாழ்க்கையை எதிர்கொள்ளவரும் என அவள்…