-
கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் அம்பாறை மாவட்ட தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் அண்மையில் பாண்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில், கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபவிருத்தி நிறுவகத்தின் தலைவர், முன்னாள் அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு, எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், விரிவுரையாளர் திரு. அற்புதன், பாண்டிருப்பு மகா வித்தியாலய…
-
எகிப்தின் கற்சாசனம்
—————————– பாரிஸ் , மட்ரிட், நியுயோரக் எனப் பல இடங்களில் அருங்காட்சியகங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் ஏற்படாத ஒரு அதீத உணர்வு லண்டன் அருங்காட்சியகத்தில் ஏற்பட்டது. அதே நேரத்தில் தனிமரியாதையும் தவிர்க்க முடியவில்லை முதல் ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லிவிடுகிறேன் ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டினுள் கொண்டு வரும் சட்டப் படி அனுமதியல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும் சுங்க இலாகா, போதைவஸ்துக்கள் மற்றும் உணவு, பாவனை பொருட்களை எரித்துவிட்டு, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை…
-
வட இந்தியப் பயணம்:3
தர்மசாலாவிலிருந்து எங்களது பயணம் அமிர்தசரஸ் நோக்கி திரும்பியது. பொற்கோவில் எனக்கு மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய பிரதேசமாக இருந்தது. மாலையில் பொற்கோவிலை அடைந்தபோது, மிகவும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் தங்க கோபுரம் தகதகவென மின்னியதுடன் சுற்றியிருந்த வாவியில் அந்தக்காட்சி பிரதிபலித்து கண்களைக் கவர்ந்து செல்லும் காட்சியாய் எம் முன்னே விரிந்தது. அங்கு மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே பூசாரி, முல்லா அல்லது பாதிரி எனத் தரகர்கள் எவருமில்லை என்பது முக்கிய விடயமாகும்.அத்துடன் அங்குள்ளவர்கள் எல்லோரும் வேதனமற்று வேலை செய்தார்கள்.…
-
வட இந்தியப் பயணம்:2
டெல்லியில் இருந்து சிம்லாவிற்குச் சென்ற இந்திய ரயில் பயணம் சுகமாக இருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் உணவு மற்றும் பத்திரிகைகளும் தரப்பட்டது. சிம்லா வட இந்தியாவில் மிகவும் சுத்தமான இடமாக எனக்குத்தெரிந்தது. எங்களுடன் பயணித்த ஆங்கிலப்பெண் சிம்லா ஸ்கொட்லாந்து நகரம்போல இருக்கிறதென்றாள். பெரும்பாலான வட இந்தியர்கள் தேன்நிலவிற்கு வரும் இடமாக இது தெரிந்தது . கடைத்தெருக்கள் மிக சுத்தமாகக் காட்சியளித்தன. சிம்லாவில் எனக்கு ஜுடியின் இருமல் தொற்றிக்கொண்டது. ஒரு நாள் அறையிலே தங்கியிருந்தேன். ஆக இரண்டு இரவுகள்…
-
தாத்தாவின் வீடு-நாவல் :வாசக அனுபவம்
புத்தகம்: தாத்தாவின் வீடு ஆசிரியர்: நோயல் நடேசன் Canute Aravintharaj Denicius ஆசிரியரின் சொந்த ஊரான எழுவைதீவை களமாக கொண்டு புனையப்பட்ட நாவல் தாத்தாவின் வீடு. அவருடைய இளவயது அனுபவங்களிலிருந்து முகிழ்கிறது கதையின் கரு. ஊரைப்பார்க்கவரும் பேரனான நட்சத்திரனுக்கும் அவனது தாத்தாவான சிவசாமிக்கும் இடையிலான உறவை வைத்து அவனுடைய ஞாபகங்களிலும் கனவுகளிலுமாக கதை நகர்கிறது. நாவல் 1960- 1970 களில் இருந்த எழுவைதீவைப் பற்றி பேசுகிறது. அந்தக்கால சமூக பொருளாதார கட்டமைப்புகள், வசதிக் குறைபாடுகள், குடும்ப அமைப்பு,…
-
வட இந்தியப் பயணம்:1
இந்த (2023) வருடம் மார்ச்சில் புது டில்கி போயிருந்தபோது முன்னைய வாலிப காலத்துப் பயணம் நினைவுகள் சிறகடித்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு( 1985) முன்பாக போயிருந்தேன். அப்பொழுது சித்திரை மாதம். கோடை வெயில் காலம். அக்காலத்தில் மெட்ரோ ரயில் இல்லை. ஓட்டோவும் நடராசாவுமே. சூரியன் தலைக்கு நேரே வந்து எங்கள் மேல் தரையிலும் தலையிலும் எரிதணலைக் கொட்டியதுபோல் இருந்தது. நடக்கும்போது சிறுவயதில் எங்களது ஊரில் கோவிலின் முன்பாக பார்த்த தீ மிதிப்பு நினைவுக்கு வரும். டெல்லித் தெருவில்…
-
கானல் தேசம் — நடேசன்
1 பாலைவனத்து நடனம் அசோகனுக்கு தூரத்தில் பாலைவனம் தண்ணீராகத் தெரிந்தது. இதுதான் கானல்நீரா? . பாலை நிலத்தில் மட்டுமா யாழ்ப்பாணத் தெருவிலும் கூட பாடசாலை விட்டு வரும்போது இந்தக் கானல் நீரை பார்த்திருக்கிறேனே!. தார் வீதியில் தெளிவாகத் தெரியுமே. நாமும் கானல் தேசத்து மனிதர்கள்தானோ? மேகமற்ற வெளிர் நீலவானம், ராஜஸ்தான் தார்ப் பாலைவனத்தில் மேல் குடைவிரித்திருந்தது. பத்துமணிக்கே ஆக்ரோஷமாக சூரியக்கதிர்கள் தரையை நோக்கிப் பாய்ந்தன. போட்டிருந்த பேஸ்போல் தொப்பியின் கீழ் தலை வியர்த்தது. அணிந்திருந்த சேட் வியர்வையில்…
-
மேரி மாதாவின் தரிசனம் நாடி
பிரான்சிலுள்ள பரிசுத்த லூர்து (St. Lourdes) மாதா எங்கள் வீட்டிற்கும் வந்து பல காலமாகிவிட்டது. எப்படி என்றா கேட்கிறீர்கள்? சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக மனைவி சியாமளாவின் கான்சர் நோய் பற்றி அறிந்ததும் அதனது அறுவை சிகிச்சைக்கு சியாமளாவோடு நானும் வைத்தியசாலைக்குப் போனேன். பல வருடங்கள் முன்பாக நாங்கள் லூர்து நகர் போய் வந்தபோது அங்கிருந்து கொண்டு வந்த புனித நீர் (Holy water) நிறைந்த மாதா சொரூபம் வைத்தியசாலையின் கட்டிலருகே உள்ள சிறிய மேசையில் எனக்குத்…
-
என் புனைவு எழுத்துப் பயணம்.
( தமிழ்மொழிச் செயல்பாட்டகம்– இலண்டன்( 5-29-2023) பேசிய சாரம்) எழுதுவது என்பது எனக்குத் திட்டமிட்டோ அல்லது எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடனோ உருவாகிய ஒன்றல்ல. என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலை என்னை எழுத்தாளனாக்கியது . இப்படியாகச் சொல்லும் எழுத்தாளர்கள் அரிது என நினைப்பீர்கள். உண்மையை மறைக்கமுடியுமா? அவுஸ்திரேலியாவில் மெல்பேனில் விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் சகல வானொலிகளையும் கைப்பற்றி அரசியல் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், அரசியலில் மாற்றுச் சிந்தனை கொண்ட நண்பர்கள் தங்களுக்கு ஒரு ஊடகம் வேண்டும்…
-
ஈழப் போரின்இறுதிக் காட்சிகள்
By சிவராசா கருணாகரன் 2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு…