-
அவன் வந்தபோது…
– அலெக்ஸ்பரந்தாமன்.””””””””””””””””””””””””””””””””””””” வைகாசிமாத சோளகக்காற்று தெருவிலே கிடந்த குப்பை கூழங்களை மட்டுமல்லாது, கூடவே மண்ணின் புழுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு, வடதிசைநோக்கி வீசிச் செல்கையில், ஐயனார் கோவிலின் பெருங்கோபுர மணியோசை நேரம் பகல் பன்னிரெண்டு மணியென்பதை காற்றோடு காற்றாய் பறைசாற்றிக் கொண்டிருந்தது. உச்சிவானத்திலிருந்து வரும் பகலவனின் கதிர்கள் பெரும் உஷ்ணமாய்… அதைப் பூமியெங்கும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க, கூட்டுறவுச் சங்கக்கடையில் உலர்உணவு அட்டைக்குக் கொடுக்கப்பட்ட அரிசி, சாமான்களை வாங்கிக்கொண்டு, அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் நல்லம்மா.…
-
எனது முன்னுரை.
எமது அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் கவிதா நிகழ்வு ஆதியில் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாகிய இலக்கிய வடிவம் கவிதை. அது மனித மனமகிழ்விற்காகவே தோன்றிய து .12 மனிதர்களில் ஒருவன் ஒரு நாள் வழக்கமான வேட்டைக்குப் போகாது தனது குகையில் தங்கிவிடுகிறான். மாலையில் வேட்டையிலிருந்து மீண்டவர்கள் உண்ணும்போது வேட்டைக்குப்போகாது தங்கியவன் அவனது கவிதையால் களைத்திருந்தவர்கள் உணவருந்தியபோது மகிழ்வித்தான் என்கிறார் ஐரிஸ் கவிஞர் ஓஸ்கார் வைல்ட்.இப்படி சாதாரண மனிதர்கள் மத்தில் உலாவிய கவிதை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பாக…
-
காலமாற்றம்.
– அலெக்ஸ்பரந்தாமன். நீண்டநாள்களாக மனதினுள் கிடந்து துருத்திக்கொண்டிருந்த விருப்பொன்று இன்று நிறைவேற இருப்பதையிட்டு, பரமலிங்கத்துக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் அவர் அந்தக் கிராமத்தைவிட்டு வெளிக்கிடும் வரைக்கும் அந்தக்கிராமமே அவருக்கு உயிர்நாடியாக இருந்தது என்னவோ உண்மைதான். சிறுவயது தொடக்கம் வாலிபவயதுவரை அந்தக்கிராமத்தில் வாழ்ந்தவருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, பின்பு எண்பத்துமூன்று ஆடிக்கலவரத்தோடு வன்னிக்கு அழைத்து வந்து விட்டன. அவர் இப்போது வன்னிவாசி. வன்னிமண்ணிலே தனக்கென ஓர் இணையைத் தேடிக்கொண்டவர்,…
-
பெளத்த காருண்யம்
அலெக்ஸ்பரந்தாமன். நிலமெங்கும் பரவியிருந்தது கார்த்திகை மாதத்துக்குரிய கடுங்குளிர். மண்ணின் வரட்சியைப் போக்கிவிட்டதில், இன்னும் திருப்தி கொள்ளாத மனோபாவமாக வானமும் கொட்டித் தீர்த்திருந்தது மழைத்துளிகளை. நீண்ட நாள்களாக முழுக்கற்று இருந்த வான்பயிர்களும் அகம் குளிர்ந்தனவாய் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தவண்ணம் இருந்தன. வருடத்தின் இறுதியில் மலரும் பூக்களும் தம் இதழ்களைவிரித்து புன்னகை பூத்தன. தொடர்ந்து நான்கு நாள்கள் இடைவிடாது தன் திமிர்த்தனத்தைக்காட்டிய கனமழை மனந்திருந்தியதுபோன்று, தனது ஆங்காரத்தனத்தைக் குறைத்துக் கொண்டதும் வானம் மெல்ல மெல்ல தன்…
-
போர்த்தழும்புகள்
– அலெக்ஸ்பரந்தாமன். “”””””””””””””””””””””””””””””””” பரமன் சோற்றை உண்டு கொண்டிருந்தான். சோற்றின் அரைப்பகுதி இலையில் கிடந்தது. பசி உணர்வைவிட, தண்ணீர்த் தாகமே அவனுள் மேலோங்கியிருந்தது. தண்ணீரைக் குடித்தால், சோறு சாப்பிட முடியாது… என்ற சிந்தனை மேலிட , குவளையில் இருந்து நீரையெடுத்து ஒருமிடறு குடித்துவிட்டு, குவளையை மீண்டும் மேசையில் வைத்தான். பசி அவதியில் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டதில், களைப்பு ஏற்பட்டிருந்தது அவனில். ” வாங்கோ… வாங்கோ… உள்ள வாங்கோ…” உணவகப் பணியாளரின் குரல்…
-
‘கரையில் மோதும் நினைவலைகள்’
தர்மினி- பிரான்ஸ் தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். ‘நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?’ என்று கேட்டு அடுத்துக் கேட்பது ‘நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?’ உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர்…
-
எழுத்தாளர் லெ. முருகபூபதி – ஜேகே
எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை திரு லெ. முருகபூபதிக்கு வழங்குவதன்மூலம் பெருமைகொள்கிறது. இளவேனில் சஞ்சிகை இச்செய்தி…