-
நதியில் நகரும் பயணம் -2
ஜெர்மனில் வசிக்கும் எனது தம்பியின் வீட்டுக்கு பல வருடங்களுக்கு முன்பதாக சென்றிருந்த போது, அவன் தனது ஊரான வுட்ஸ்பேர்க் அருகே ஓடும் மெயின் நதிக்கரைக்கு கூட்டிச் சென்றான். அப்பொழுது ஓடும் நதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பயணக் கப்பல் பலரோடு , நிறைகுடம் ஏந்திய கர்ப்பிணிப் பெண்ணாகத் தண்ணீரில் அசைந்து கொண்டிருந்தது. நதியில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக ஓடக்கூடாது என்ற கட்டுப்பாடுள்ளது. ‘அது ஒரு உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்,…
-
புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் !
பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !! முருகபூபதி “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால், எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும். “…
-
நதியில் நகரும் பயணம்-1
அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றது. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் அந்த நகர்ப்பகுதி மின்சார வெளிச்சத்தில் அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின்…
-
தேவதைகளின் பாதணிகள்.
‘தேவதைகளின் பாதணிகள் படித்தேன். உன் சோகம் என்னைத் தொற்றிக்கொண்டது.’ இது நான் சஞ்சயன் செல்வமாணிக்கத்திற்கு எழுதிய குறிப்பு. எழுத்தாளராக எழுதும்போது வாசிப்பவர் மனதில் கோபம் , மகிழ்வு, ஏன் வெறுப்பு என ஏதாவது ஒரு விதத்தில் அவர்களது மனநிலை பாதிக்கவேண்டும் . அப்படி இல்லாதபோது எழுதுவது வீண் விரயம் என நினைப்பவன் நான். சஞ்சயன், தனது பெண் குழந்தைகளை வளர்த்த விதம், பின்பு மணவிலக்கு ஏற்பட்டதால் அவர்களாகிப் பிரிந்தது, ஒரு பெண்ணின் தந்தையான என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. பல விதங்களில் எந்த குறையும் ஏற்படாது வளர்ந்தவன் நான் என்பதால் இந்த…
-
சுடலை ஞானம்
“அலெக்ஸ்பரந்தாமன் தம்பிராசா இப்போது மிகவும் வயதாளியாக இருந்தார். கிட்டத்தட்ட எண்பது வயதை அவர் தாண்டியிருந்தார். அவரைப்போலவே அவரது மனைவியும் உடல் ரீதியாக மிகவும் தளர்ந்திருந்தாள். இருப்பினும், அவர்கள் இருவரும் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஏ.சி. பொருத்தப்பட்ட வீட்டுக்குள் மின்னியல் சாதனங்கள் ஒவ்வொரு தேவைகளுக்குமாக நிறைந்திருந்தன. அவர்கள் இருவரது தேவைகளைக் கவனிக்கும் பொருட்டு, கணவனை இழந்த ஒரு விதவைப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாள். தம்பிராசாவின் பிள்ளைகள் ஐவரும் லண்டன், கனடா, அவுஸ்திரேலியா…
-
அப்புஹாமியும் அப்புக்குட்டியும்
“”””””””””””””””””””””””””””””””””””””””” ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது. அப்புக்குட்டியை அந்தக் காபெற் வீதியில் காணமுடியவில்லை அப்புஹாமிக்கு. அவருக்குக் கடமைநேரம் இரவு – பகலென ஒழுங்கமைக்கப்பட்டதினால், அவரால் அப்புக்குட்டியைக் காண முடியாமல் போய் விட்டது. இன்று அப்புஹாமிக்குப் பகல் கடமை. காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு மணிவரைக்கும் அந்த முகாம் வாசலில் வாயிற்காப்பாளராக கடமை புரிய வேண்டும். ‘ இன்றைய பொழுதில் எப்படியும் அப்புக்குட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவார்.…
-
புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை
டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை மேற்படி, அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த 15-09-2024 இல் நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு: 1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வாவின் ஆகியோரின் அயராத பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 2. சியாமளா நடேசன் புற்றுநோய்…
-
“கரையில் மோதும் நினைவலைகள்”.
புஷ்பராணி. படித்துக்கொண்டிருக்கின்றேன். நிறுத்தி நிறுத்தியே வாசிக்கின்றேன். இந்நூலில் வரும் கதா பாத்திரங்கள் அநேகமாக எனக்குத் தெரிந்தவர்களாயும், நெருங்கிப் பழகியவர்களாகவும் இருந்ததால் என் நினைவலைகள் பின்னோக்கிச் சிதறுகின்றன . அந்த ஞாபகங்களில் கிளர்ந்து மூழ்கும்போது என்னையறியாமல் பலவித உணர்வுகள் மனதுக்குள்.அழுத்துகின்றன. தமிழ் ஈழ ஆரம்ப போராளிகள் பலருடன் இவருக்கிருந்த நெருக்கம்பல இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது. எனக்குள்ளும் ஏதேதோ நினை வலைகள்…. புதிய யுக்தியென்று நினைத்தாரோ என்னவோ தெரியாது சம்பவ ங்களை கோர்வைப்படுத்தி எழுதாமல் அங்கொன்றும் இங்கொன் றுமாக மாறி மாறி…
-
முடிவு
அலெக்ஸ்பரந்தாமன் ” என்ன மச்சாள் இனித்தானே சமையல்…?” மதிய உணவுக்காக சுளகினில் அரிசியைப் போட்டுப் புடைத்துக் கொண்டிருந்த இராசம்மா, கேள்வி கேட்டவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பவும் அரிசியைப் புடைக்கத் தொடங்கினாள். அங்கு வந்த வள்ளிப்பிள்ளைக்கு மச்சாள் தன்னோடு முகம் கொடுத்துக் கதைக்காதது மனதை ஏதோ குடைவதுபோல் இருந்தது. ‘ம்… ஆர் கண்டது…? இந்தக்குடும்பம் இப்படி முன்னுக்கு வருமெண்டு. ‘அ’ னாக்கு அடிவளம் தெரியாததுகள் எல்லாம் அந்நிய…