-
A Chola Tiger within Wigneswaran Swamy and the TNA?
NOTA BENE…. Scenes from the Pongu Thamil Rally held at Trincomalee in late 2002….. see “Militarism, Personality Cult at Trinco Rally,” Sunday Times, http://www.sundaytimes.lk/020324/frontm.html. Sebastian Rasalingam, It is extremely worrisome to read the election speeches in the Tamil language coming from those who are fighting it out in the North. It is also fortunate that…
-
கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர்
முருகபூபதி . வடமேல்மாகாணத்தில் தமிழுக்கு உயிரும் உணர்வுமூட்டிய கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர் இலங்கையில் வடமேல் மாகாணத்தில் இந்து சமுத்திரத்தாயை அணைத்தவாறு ஒரு தமிழ்க்கிராமம். யாழ்ப்பாணம் செல்லும் சிலாபம் – புத்தளம் பாதையில் பத்துலுஓயா என்ற இடத்திலிருந்து இடதுபுறம் செல்லும் பாதையில் பயணித்தால் கடலை நோக்கிச்செல்லலாம். அந்தக்கடலின் கரையில் எழில்கொஞ்சும் கிராமம் உடப்பு. அங்கு பூர்வகுடிமக்களாக வாழ்பவர்கள் இந்து தமிழர்கள். அவர்களின் கலாசாரம் தனித்துவமானது. 1960 களில் முதல் முதலாக நான் அங்கு சென்றபொழுது அந்தக்கிராமத்தில் தமிழர்களைத்தவிர வேறு…
-
எக்ஸோடஸ்1984
நடேசன் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பலின் மேல்தட்டில் என்னுடன் மேலும் சிலர் இருந்தார்கள் . அவர்கள் கொண்டுவந்த மூட்டை முடிச்சுக்கள் அவர்களை மலையகத்தில் இருந்து வந்தவர்களாக அடையாளம் காட்டியது. கண்ணுக்கு எட்டியதாகவிருந்த மன்னார் கடற்கரையை முற்றாக மறையும் வரையும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தேன். கலங்கிய கண்களும் கனத்த இதயமும் கொண்டவனாக மனதை அசைபோட்டேன். நாட்டை விட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பணம் முதலான காரணங்களால் பிரியும்போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது…
-
தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி
நடேசன் இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம்…
-
எகிப்தில் சில நாட்கள் 7:பிரமிட்டுகளின் வரலாற்று ஐதீகம்.
நடேசன் ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு…
-
கேரளத்தின் ‘பாக் வாட்டர்’
நடேசன் (எனது முதலாவது பயண எழுத்து – பத்துவருடம் முன்பாக) 2004 மார்கழி 23ம் திகதி மாலை சூரியன் பலநாடுகளில் தப்பிமறைய அடைக்கலம் கேட்ட இலங்கை தமிழ் அகதிகள் போல்,தென்னை மரங்களின் ஒலைகளுக்கு இடையிலும், பின் வாழைகளின் மறைவிலும், இறுதியில், நெற்கதிர்களில் கூட அடைக்கலம் கிடையாது போய் வெறுப்பில் மேற்குத் திசையில் சங்கமித்துவிட்டான். பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும் – என்கிறார் பாரதியார். பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பார்க்கும் போது பரவசமாக இருந்தது. பக்கத்தில் இருந்த…
-
கடல்கடந்தும் பேசப்பட்ட கடவுச்சீட்டு இல்லாதகவிஞர்
முருகபூபதி ஆனந்தவிகடன் இதழை, அதில் வெளியாகும் நகைச்சுவைத்துணுக்குகளுக்காகவே ஆரம்பத்தில் விரும்பிப்படித்தேன். ஆரம்பத்தில் ஆர்வமுடன் ஜோக்குகளை ரசித்தபோதிலும் காலப்போக்கில் தரமான இலக்கியவிடயங்கள் ஆனந்தவிகடனில் வெளியானால் அவற்றை கத்திரித்து சேகரித்தும் வைத்திருப்பேன். சிலவற்றை இன்றளவும் மறக்கமுடியவில்லை.நினைத்து நினைத்து வாய்விட்டுச்சிரித்த துணுக்குகளை நண்பர்கள் வட்டத்திலும் குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் பகிர்ந்து அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவது எனது இயல்பு. 1985 ஆம் ஆண்டு ஏழு கவிஞர்கள், பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சிலிர்ப்பு, பொறுப்பு, மூப்பு, இறப்பு என்ற தலைப்புகளில் எழுதிய கவிதைகளை தொகுத்து இலவச…
-
போரின் வலிகளை உணர்த்தும் எழுத்துக்கள்
கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் ரஸஞானி விவேகானந்தர் துறவி என்றாலும்,அவர் மனிதன் தனதுஅடையாளத்தைவிட்டுச்செல்வதற்கு மூன்றுஆலோசனைகளைசொல்லியிருக்கிறார். மனிதன் பிறக்கிறான்,மறைகிறான். இடையில் அவனிடமிருப்பதுநீண்டஅல்லதுகுறுகியகாலவாழ்க்கை. அந்த இடைவெளியில் அவன் உருப்படியாக மூன்றுவிடயங்களில் ஏதாவதுஒன்றையாவதுசெய்துவிடவேண்டும். இல்லையேல் அவனுக்குப்பிறகுஅவனதுபெயர் சொல்வதற்குஅடையாளமாகஒன்றும் இருக்காது. இல்லறத்தில் ஈடுபட்டுஒருபிள்ளைக்காவதுபெற்றோராகிவிடவேண்டும். அல்லதுதனதுபெயர் சொல்லஒருவீட்டையாவதுவிட்டுச்செல்லவேண்டும். அல்லதுஒருபுத்தகம் எழுதிவிடவேண்டும். நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் நூலைகையிலெடுத்தபொழுது விவேகானந்தர் சொன்னதுதான்எனதுநினைவுக்குவந்தது. கிருஷ்ணமூர்த்தி ஒன்றல்ல மூன்றுகடமையையும் செய்துவிட்டார். குழந்தைகளின் தந்தையாககுடும்பத்தலைவன்,புகலிடத்தில்உழைத்துவீடு. தற்பொழுதுஒருநூலையும் வாசகர்களுக்குசமர்ப்பித்துவிட்டார். நீண்டகாலமாகஅவர் எழுதிவந்தாலும் தற்பொழுதுதான் ஒருநூலைவெளியிடவேண்டும் என்றவிருப்பத்திற்குவந்துள்ளார் என்பதனால் விவேகானந்தரின் கூற்றையும் இங்கு குறிப்பிட்டேன். இலங்கையில் தமிழில்…
-
காத்தவராயன் (சிறுகதை)
முருகபூபதி கோடைகாலம் வந்துவிட்டால் வியர்த்துக்கொட்டுகிறது. எப்பொழுதும் வீட்டுக்குள் குளிர்சாதனம் இயங்கிக்கொண்டிருக்கும். காரில் ஏறினால் ஸ்டியரிங்கில் கைவைக்கமுடியாது. அவ்வளவு சூடு. வீட்டின் யன்னல்களை திறந்தால் கோடைவெப்பம் உள்ளே வந்துவிடும். ஒருநாளைக்கு இரண்டு தடவையாதல் உடலை தண்ணீரில் நனையவைத்து குளிர்மைப்படுத்தவேண்டும். குடும்பத்தை கடற்கரை, பூங்கா வெளியூர் அழைத்துப்போனால் செலவும் அதிகம். ஒவ்வொரு கோடைகாலமும் இந்தக் கவலைகளுடன் கழிவதனால் வீட்டை விற்றுவிட்டு நீச்சல்தடாகம் அமைந்த வீடு ஒன்றை பல மாதங்களாகத்தேடிக்கொண்டிருந்தான் ரமேஷ்காந்த். மனைவியும் அவனும் பல மாதங்களாக இணையத்திலும் சல்லடைபோட்டுப்பார்த்து, வீடுகள்…
-
எகிப்தில் சில நாட்கள்-6:மனித உழைப்பு.
எகிப்தில் சில நாட்கள் 6 நடேசன் எகிப்திய காசா பெரிய பிரமிட்டைக் கட்டுவதற்கு 90000 தொழிலாளர்களுக்கு, இருபது வருடங்கள் எடுத்தது. இயந்திரங்களினதோ ,மிருகங்களினதோ உதவியற்ற நிலையில் மனிதர்களினது சக்தியை மட்டுமே பாவித்து உருவாக்கப்பட்ட மகத்தான ஒரு சாதனையை சில மணி நேரத்தில் பார்த்து விட்டு மரியற் ஹொட்டலுக்குச் சென்று இழுத்து போர்த்து தூங்கி விடுவது என்பது என்னைப் போன்ற சுற்றுலா பிரயாணிகளுக்கு இக்காலத்தில் எவ்வளவு எளிதான காரியமாகி விட்டது. குறைந்த பட்சமாக இதைக் கட்டிய காலத்தில் நடந்தவற்றை…