-
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிப்பணம் அதிகரிப்பு
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவிப்பணம் அதிகரிப்பு. 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம். இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்து பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் மெல்பனில் அண்மையில் Vermont South மண்டபத்தில் நிதியத்தின் தலைவர் திருமதி அருண். விஜயராணியின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போர்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம…
-
ஆண்மை விருத்திக்கு காண்டா மிருகத்தின் கொம்பு.
நடேசன் 50 வயதான மிஸ்டர் லி வான் அவர்கள் ஹொங்கொங் சீன மருந்து கடைக்குச்சென்று தனது குறி ஒழுங்காக சுடவேண்டும் என்பதற்காக மருந்து கேட்கிறார். அங்கேயுள்ள சீன மருத்துவர் ‘இப்பொழுதுதான் புதிதாக வெள்ளைக் காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு கிலோ வந்தது. அதில் சில சீவல்களை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டுவிட்டு மனவியுடன் உறவாடுங்கள். பத்து இரவுகள் தொடர்ச்சியாக சாப்பிடுங்கள். அதன் பின்பு இளைஞராகிவிடுவீர்கள்’ என்று பத்து சரைகளைக் கொடுத்தார். மிஸ்டர் லி வான் பத்து அமெரிக்க நூறு…
-
தமிழர் மருத்துவ நிலையம்
எக்சோடஸ் 1984 நடேசன் 1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF)எனறொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம்(TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS)மற்றும் ஈழமக்கள் புரட்சிகரமுன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் யாவற்றிலும் பிரசுரமாகியிருந்தது. இந்த நிகழ்வு அக்காலத்தில் பலருக்கும் மகிழ்வைக் கொடுத்தது. எனினும் இந்த நிகழ்வையிட்டு கவலை கொண்டவர்களையும் ஓன்று சேர்க்க…
-
The Queen Story
Noel Nadesan She did not rule a country nor did a country declare her birthday as a holiday of that country. She was merely a cat that was named ‘queen’ (‘Rani,’ in Tamil). To others, she was only a cat. It was around midnight on a cold night. I was preparing to close for the…
-
அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வு
சிட்னியில் மூத்த எழுத்தாளர் அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளருமான காவலூர் ராஜதுரையின் மறைவையடுத்து அன்னாரின் இறுதிநிகழ்வுகள் சிட்னியில் நடைபெற்றபொழுது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். தமது 83 வயதில் காலமான காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வு – இரங்கல் நிகழ்ச்சி கடந்த 20 ஆம் திகதி சிட்னியில் Red gum Centre இல் நடைபெற்றது. திருவாளர்கள் Mark Schulz ,…
-
எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு
அடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு எல்லாம் இழந்து நிர்க்கதியான பின்னரும் தனது உடலை தானமாக வழங்கிய சகோதரிராஜம் கிருஷ்ணன். முருகபூபதி அவுஸ்திரேலியா – சிட்னியில் கடந்த 14 ஆம் திகதி மறைந்த மூத்தபடைப்பாளி காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை சிட்னி மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து மெல்பன் புறப்படும் ரயிலில் அமர்ந்திருக்கின்றேன். பத்திரிகையாளர் சுந்தரதாஸ் கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றார். காவலூரை வழியனுப்பிவிட்டு புறப்பட்டீர்கள். மற்றும் ஒருவரும் மீள முடியாத இடம் நோக்கிப்புறப்பட்டுவிட்டார்…
-
தென் ஆபிரிக்க சவானக்காடான குருகர் தேசிய வனம் (Kruger National park )
மதம் வந்த யானை கட்டப்பட்டிருக்கும்போது அந்த யானையால் கட்டப்பட்டிருக்கும் காரணத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால் கட்டை அறுத்துக்கொண்டு சுதந்திரமாக நடமாட விரும்பி அட்காசத்தில் ஈடுபடுகிறது. பல நகரங்களில், விலங்கியல் பண்ணைகள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் பல மிருகங்கள் மன உளைச்சலால் துன்பப்படுகின்றன. செயற்கையாக காட்டை, மலையை, நீர்நிலைகளை எவ்வளவு திறமையாக அமைத்து அவைகளுக்கு இயற்கையான சூழ்நிலையை கொடுக்க முயற்சித்த போதும் அவை திருப்தி தருபவையல்ல. அவற்றின் இயற்கைச் சூழலை தரமுடியாதவை. இப்படியான வதிவிடங்களில் வைத்திருக்கும்போது ஏற்படும்…
-
வண்ணச்சிவிங்கி
நடேசன் ஆபிரிக்காவுக்கு மட்டுமே உரிய மிருகமாக மட்டுமல்லாது சவானாக் காடுகளில் வளரும் முட்களைக் கொண்ட முக்கிய மரமான அக்கேசியாவின்(Acacia) இலையை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக மட்டுமே பரிணாமமெடுத்துள்ள ஒட்டகச்சிவிங்கியை பார்த்தபோது – இவ்வளவு பெரிய உடம்பிற்கு சிறிய தலையிருப்பதென்றால் நிச்சயமாக அதன் புத்தி மட்டமாகத்தான் இருக்கவேண்டுமன்ற நினைப்பே ஆரம்பத்தில் எனது மனதில் ஏற்பட்டது. குருகர் தேசிய வனத்தில் எமது ஜீப்பை கண்ட ஒவ்வொரு முறையும் அக்காசிய மரங்களின் மேற்பகுதியை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எங்களை அந்த ஒட்டகசிவிங்கி…
-
மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான காவலூர் ராஜதுரை நேற்று (14-10-2014) மாலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரையின் கதை வசனத்தில் வெளியான பொன்மணி திரைப்படம் இலங்கை தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில் வசீகரா விளம்பர நிறுவனத்தின் இயக்குநராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரை பல வருடங்களாக அவுஸ்திரேலியா சிட்னியில் தமது குடும்பத்தினருடன் வசித்தார். இங்கு இயங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும்…
-
Lamb, the lawn mower
DR Noel Nadesan On a freezing Melbourne winter morning, gusty winds were blowing an icy chill through my bones. I stood shivering in front of a magistrate court in Melbourne, cursing an Egyptian named Ibrahim. The cold weather and my disgust irritated me badly but I waited patiently not knowing when my name would be…