பகுப்பு: Uncategorized
-
சுனாமி– கானல்தேசம்
கார்த்திகா முல்லைத்தீவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பாக கிளிநொச்சி முகாமுக்கு வந்திருந்தாள். அங்கு அவள் கண்ட காட்சிகள், பிணங்களில் இருந்து வந்த துர்நாற்றம், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல்கள் என்பன அவள் மனதில் ஆழமாக பதிந்து கனவிலும், நினைவிலும் கரப்பான் பூச்சிகளாக தொடர்ந்தன. விலகிச் செல்ல முடியவில்லை. சதாமுகத்தை மொய்த்தன. இரண்டு நாட்கள் மட்டுமல்ல எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவை அவளை விட்டு தொலையாது என்ற உணர்வைக் கொடுத்தன. இது போன்ற அனுபவம் அவள் வாழ்க்கையை எதிர்கொள்ளவரும் என அவள்…
-
இராஜெஸ்வரி பாலசுப்ரமனியனின் கதைகளில் இருக்கும் பெண்ணியப் பார்வை.
ராஜேஸ் என்று நான் நேசத்துடன் அழைக்கும் ராஜேஸ்வரியின் எழுத்து ஒரு அலாதியான எழுத்து . புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் விஷேசமான பெண்ணியப்பார்வை கொண்டவர். இந்திய தமிழ் நாட்டுப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களிலிருந்து இலங்கை பெண் எழுத்தாளர்கள் வேறுபட காரணங்கள் உண்டு. அவர்களின் பிரச்சினைகள் உள ரீதியாக மன ரீதியாக மாறுபட்டவை. இந்திய தமிழ் பெண்கள் உணராத பாதிப்புகளையும் , ஆறாத வடுக்களையும் சுமப்பவர்கள்: இனக்கலவரத்தையும், பயங்கரவாத அத்துமீறல்களையும், போர்காலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை…
-
“ஏன் ஒரு இலக்கியவாதியை நாம் கொண்டாடவேண்டும் ? “
மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவுரை. நடேசன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் கடந்த 19 ஆம் திகதி ஞாயிறன்று நடைபெற்ற மல்லிகை ஜீவா நினைவரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை ) காட்டில் வசிக்கும் யானை தாகம் தணிக்க நீர் நிலைகளையும் , தனக்குத் தேவையான உணவையும் தேடி நடந்த பாதையிலேயே ஏனைய மிருகங்களும் நடக்கும் என்பதால் யானைகளே உலகில் முதல் பாதை அமைத்த சிவில் எஞ்ஜினியர்கள். அதேபோன்று நமது வாழ்வு இலக்கியங்களின் வழியே நடக்கிறது. ஒரு இலக்கிய புத்தகத்தை…
-
ஹாங்கிங் ரொக். விக்டோரியா
நடேசன் – நடேசன் ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை உல்லாசப்பயண சுற்றுலா இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அவுஸ்திரேலிய காலனி ஆட்சியாளர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை. இலகுவாகச் செய்ய முடிந்தது. மெல்பனில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஹாங்கிங் ரொக்ஸ் ( Hanging Rocks) எனப்படும் இடம், 26000 வருடகாலமாக அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் வணக்கத்துக்குரிய இடமாக இருந்தது. அவர்களது…
-
சத்தியம் மீறியபோது – சிறுகதை- திறனாய்வு
சத்தியம் மீறியபோது என்ற V S கணநாதனது சிறுகதை, தொகுப்பில் உள்ள பிரதான கதை மட்டுமல்ல. அது அது ஒரு நெடுங்கதை என்பதுடன் அதுவே கதைத்தொகுப்பின் பிரதான கதையாக உள்ளது . இந்தக்கதை உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் அந்தக்கதை எழுதப்பட்ட விதத்தில் நான் கவரப்பட்டேன். முக்கியமாகக் கதைசொல்லியான பாட்டியின் பாத்திரம் முழுமையானதாக அமைந்திருக்கிறது. சிறுகதை மட்டுமல்ல, நாவல் எழுதுவதற்குமே மொழி அதிக அளவு தேவையில்லை . ஜப்பானிய மொழியில் பல சித்திர நாவல்கள்…
-
எழுத்தாளர் இராஜேஸ்வரி சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாடு
நம்மவர் நிகழ்வு எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாட்டை எடுத்துப் பேசுவதே நமது நிகழ்வின் நோக்கம். பல நாடுகளில் பெண்ணியம் என்பது கல்வித்துறை மற்றும் சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டது. அதன் விளைவை நமது சகோதரிகள், பெண் குழந்தைகள் அனுபவிக்கிறார்கள். பல நாடுகளில் அரசியல் கட்சிகள், பெரிய நிறுவனங்கள் பெண்களுக்காக முக்கிய இடங்களை ஒதுக்கியுள்ளார்கள். இவை மரத்தில் தானாக இருந்து உதிரும் கனிகளாக விழவில்லை. பலர் உயிர், மற்றும் உழைப்பைக் கொடுத்தபின் விளைந்த அறுவடையைத்தான்…
-
புதுவையின் ரத்த புஷ்பங்கள்
ரத்த புஷ்பங்கள்-ஒரு விமர்சனம் புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது கவிதை நூலாக ‘இரத்த புஷ்பங்கள்’ வெளிவந்துள்ளது. ஒரு தோழனின் காதல் கடிதம், வானம் சிவக்கிறது ஆகியவை முன்னர் வெளிவந்த அவரது கவிதை நூல்கள். விருப்பான சொற்களில் கோஷம் எழுப்புவதே இவரது கவித்துவப் பாணி. இத்தகைய’கோஷ நடையை’ ஒட்டிய கவிதைகளே இரத்த புஷ்பங்களிலும் காணப்படுகின்றன. இவற்றுட் பல இடதுசாரி அரசியல் சார்பான கோஷங்களாகும். இவரது அதி தீவிர இடதுசாரிக் கோஷங்கள், இவருக்கு முற்போக்கு கவிஞர் என்ற புகழைப் பெற்றுக் கொடுத்தன.…
-
நண்பன் ராமதாஸ் மறைவு
எழுவைதீவு ஆதார வைத்தியசாலையைக் கட்டித் தந்த பொறியியலாளரான நண்பன் ராமதாஸ் இளமையில் உதிர்ந்து விட்டான். பல்கலைக்கழகம் பின்பு இந்தியா எனத் தொடர்ந்து பழகிய நட்பு, சில காலத்தின் முன்பாக அவனுடன் பேசியது ஒரு ஆறுதல். அவனது நினைவுகள் என்றும் என் மனத்தில் நிரந்தரமானது. குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.
-
My Guilt and Punishment
Short story by Noel Nadesan It was my lunchtime. I was seated next to my favorite window in the ‘Red Back’ pub in north Melbourne. The pub is situated along Elizabeth Street, just and Royal Women’s Hospital. Usually, I long for that table next to the window facing Elizabeth Street when I pay a…
-
புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து இங்கிலாந்து வரையில் அயராது இயங்கும் பெண்ணிய ஆளுமை !! முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் அயராது பங்காற்றியவர் அவரது வாழ்வும் பணிகளும் குறிப்பிடத்தகுந்தன. விதந்து போற்றுதலுக்குரியன. அத்துடன் எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடி. பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து…