பகுப்பு: Uncategorized
-
Constitution can solve 99% of Tamils’ woes – Expat doctor
Prolonged battle due to West giving hope to LTTE on ceasfire: TNA’s tug-o-war will not help Tamils: By Manjula FERNANDO Dr. Noel Nadesan Noel Nadesan, a veterinarian who owns a private clinic in Melbourne was closely related to Sri Lanka’s conflict with the ruthless LTTE. As a young graduate in 1985, he set up the…
-
உன்னையே மயல் கொண்டு- பாகம் நாலு
1983ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை. அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்திஇ வாள்இ பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது.. துரத்திரயவர்களின் வாய்களிலிருந்து ஆபாசமான, ஆத்திரமான சிங்கள வார்த்தைகள் வந்தன. வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிடினும் கெட்டவார்த்தைகள் என்பது புரிந்தது. முன்பாக ஓடியவர்களில் ஒருவன்…
-
அன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கட்கு ஒரு பகிரங்க மடல்..
நடேசன் – அவுஸ்திரேலியா என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள்; ஆதாரிக்காத போது எப்படி 77இல் வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தை தமிழ் ஈழம் எனக் காண்பித்து எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்?; என்று கேட்டபோது, தாங்கள் “48ஆம் ஆண்டில் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள்” என்றீர்கள். அப்பொழுது நான்,…
-
சிறுகதை: சலனங்களுக்கு வயதில்லை.
காலை எட்டு மணியளவில் ஜெனிவாவில் ஒரு குறுக்குத் தெருவில் சம்பந்த மூர்த்தி நின்றுகொண்டிருந்தார். அந்தத் தெருவின் ஒரு மூலையில் ரூரிஸ்ட் ஆபீஸ் இருந்தது. அங்கே நின்றால் ‘நீங்கள் அல்ப்ஸ் மலைகளுக்கு செல்லும் வாகனத்தை பிடிக்கலாம்’ என ஏற்கனவே பஸ் ஸ்ராண்டில் இருந்த பெண் அரைகுறை ஆங்கிலத்தில் கூறி இருந்தாள். பிரான்ஸ்சும் ஆங்கிலமும் கலந்த அந்த பதிலில் சம்பந்த மூர்த்தி முடிந்தவரை ஆங்கிலத்தை பிரித்து எடுத்து புரிந்து கொண்டு தெருவைக் கண்டு பிடித்தது தன்னை ஒரு சாதனையாளனாக தனக்குள்…
-
உன்னையே மயல் கொண்டு – மூன்றாவது பாகம்
பரிசோதனை டிஸ்ஸில் வளர்ந்த பக்டீரியா கொலனிகளை மேசையில் வைத்து கீழே குனிந்தபடி எண்ணிக் கொண்டிருந்த சந்திரனின் முதுகில் பலத்த அடி விழுந்தது. எரிச்சலுடன் திரும்பியபோது குண்டலராவ் நின்றான். முகத்தில் சந்தோசம் வந்தது. “எப்படி உன் ஆராய்ச்சி போகிறது” என்றான் சந்திரன். “பரவாயில்லை ஏதோ போகிறது” என்றான் சலித்தபடி. இந்த ஆய்வுகூடத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு படிக்கும் மூன்றாவது மாணவன் அவன். இந்தியாவில் ஆந்திரப்ப்pரதேசத்தில் இருந்து வந்து ஸ்கொலசிப்பில் படிக்கிறான். “என்ன இலங்கை-இந்திய மகாநாடு நடக்கிறதா”? எனக் கேட்டபடி சிண்டியும்…
-
முதுமையின் எல்லை
நடேசன் ‘அம்மாவுக்கு அல்சைம்மேர் வியாதி வந்து விட்டது. நானும் எனது சகோதரியும் மாறி மாறி இரவில் அவரது வீட்டில் தங்கி இருக்கிறோம்.’‘நான் இரண்டு கிழமைக்கு முன்பாகத்தானே ‘ஒலி’யை பார்க்க வீட்டுக்கு சென்றேன். என்னால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை. அம்மாவை எனக்கு எட்டு வருடங்களாக தெரியும் ‘அம்மா தன்னை வயோதிபர் இல்லத்துக்கு அனுப்பிவிடுவோம் என்ற பயத்தில் நோயை மறைப்பதில் கெட்டிக்காரி.’எண்பது வயதான போலின் சான்லியின் இரண்டாவது மகள் லீசா. தாயின் நாயான ஒலியை என்னிடம் கொண்டுவந்தபோது எங்களுக்கு…
-
கருணையால் மட்டும் அல்ல.
நடேசன் இலங்கை அரசியல்வாதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த புலம் பெயர்ந்த தமிழர்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரி மற்றும் புளட் அமைப்பினர் கூட கே. பத்மநாதனை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இது ஏன் என்பது புரியவில்லை.. விடுதலைப்பலிகளையும் தனி ஈழக்கோட்பாட்டையும் கருத்தியல் ரீதியாக எதிர்த்த எனக்கு, வெறுப்புக்கலந்த பார்வையுடன் கே. பி. யை எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை. இந்த எதிர்பாளர்கள் எல்லோரும் வேறு காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது கோட்பாட்டையும்…
-
உறவுகள் பலவிதம்.
-அனுபவ பகிர்வு —நடேசன் மெல்பனில் புறநகரான டண்டினொங்கில் இருந்து எனது மிருக வைத்திய நிலயத்திற்கு வந்த இந்திய இளைஞனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். ஆறு அடி உயரமான அவனுக்கு முகத்தில் சிறிய தாடி. பெயரைக் கேட்ட போது பஞ்சாபி இனத்தவன் போல் இருந்தது. அவன் இந்து பஞ்சாபியாக இருக்கலாம் அல்லது தலைப்பா கட்டாத சீக்கியனாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவன் ஜக் ரஸ்ஸல் இனத்தைச் சேர்ந்த அந்த சிறிய நாயை தூக்கிக் கொண்டு…
-
உன்னையே மயல் கொண்டு இரண்டாவது பகுதி
சிட்னியின் மேற்குப்பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் உயர் கல்விக்கூடமாக இருந்தது. இங்கு விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி கிடைக்கும். அந்த இடத்தில் ஆறு ஓடுவதால் பல கால்நடைப் பண்ணைகள் இருந்தன. சிட்னியின் சனத்தொகை பெருகி மேற்குப்புறமாக வீடுகள் கட்டப்பட்டதால் விவசாய பண்ணை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனத்தொகை வளர்ச்சியுடன் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மற்றைய பல்கலைக் கழகங்களைப் போல் கொங்கிறீட் மாடிக்கட்டடங்கள் கட்டப்படவில்லை. மரங்களுக்கு இடையில் தனிகட்டடங்கள் இயற்கைசூழலின் தன்மையை இழக்காமல் அமைந்தன. நுழைவாசலின் வலப்…
-
உன்னையே மயல் கொண்டு –நாவல்.
நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன. -எஸ் .ராமகிருஸ்ணன் எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உனையே மயல் கொண்டு என்ற நாவல் குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. – தமிழன் —————————- சந்திரன் படுக்கையை விட்டு எழுந்து, திறந்திருந்த யன்னலை நோக்கிச்…