உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு
ய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில் இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன் போராசிரியர் சிண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும், சந்திரனை “கம் இன்” என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக் கொண்டுவா. அதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு அனுப்ப வேண்டும். அடுத்த ஆய்வுக்கு பணம் பெற இது உதவும். உனக்கு இரண்டு மாதம் தருகிறேன் என்றார்.” நன்றி கூறிவிட்டு வெளியேறிய சந்திரனை சிண்டி பின்தொடர்ந்து “ஏன் சந்திரன் முகம் நல்லாவில்லையே நீ டல்லாக இருக்கிறாய்” எனத் துருவினாள். 
“அப்படி ஒன்றுமில்லை.” “உனக்கு பேச விருப்பமில்லை போல இருக்கிறது.”
 “அப்படியில்லை. எனது மனைவி சோபாவை பற்றியது அவளை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பெரும்பாலான நேரங்களில் நன்றாக இருப்பாள். சிலநேரங்களில் உலகமே அழியப்போகிறது என்கிற மாதிரி மனம் சோர்வடைந்து சுருங்கிவிடுவாள். சிலநேரம் கேவிக்கேவி அழுகிறாள்”. 
“வைத்தியர் என்ன கூறுகிறார்.” “குழந்தை பிறந்ததால் ஏற்படும் போஸ்ட் நேற்றல் டிப்பிரசன் என்கிறார். நான் அதை நம்பவில்லை.” 
“ஏன் சைக்காற்றிடிடம் கடிதம் தரும்படி உனது வைத்தியரிடம் கேட்டால் என்ன.? “ 
“இதுதான் எனக்கும் பிரச்சனையாக இருக்கிறது. சோபா மனோவியாதியை எப்படி ஒத்துக்கொள்வாள் என்பதும் அவளது பெற்றோர் எப்படி ஓத்துக்கொள்வார்கள் என்பதும் தற்போது எனக்கு முன் உள்ள பிரச்சனை.”

“இது பெரிய விடயமில்லை. உனது குடும்ப வைத்தியடம் பேசிப்பார்ப்பதுதானே? “

. “சிண்டி உனக்குச் சில விடயங்கள் தெரியாது எங்கள் சமூகத்தில் மனேவியாதிக்காரருக்கு மட்டும் அல்ல . மனநல மருத்துவர்களுக்கும் நல்ல பெயர் கிடையாது. மனநோயாளர்களை சமூகம் வேண்டாதவர்களாக பார்க்கிறது. தாய்தந்தைகயரால் பராமரிக்கபடாவிட்டால் பிச்சைக்காரர்களாக தான் எம்மூரில் வாழ்வார்கள். மனநோயாளர் மேல் கல்லெறிந்து விளையாடும் ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இதனால் மனநோய் என்பதை மறைத்து வைப்பதே எமது நடைமுறை. அந்த மனப்பான்மை இங்கேயும் தொடர்கிறது இவர்களுக்கு மத்தியில் சோபாவால் எப்படி வாழமுடியும்.?”

“நீங்கள் சொல்லும் இந்த விடயங்கள் மேற்குநாடுகளிலும் இருந்தது. ஐரொப்பாவில் மூளைக்கோளாறான பெண்களைச் சூனியக்காரிகள் என நெருப்பில் எரித்தார்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என சவுக்கால் அடித்து துன்புறுத்தினார்க்ள். சிலுவையில் வைத்து எரித்தார்கள்.. வைத்திய சாத்திரத்தில் கடைசியாக வந்த பகுதியே மனநோய்வைத்தியம். மற்றவர்களுக்காக நீ வாழவில்லை. மற்றவர்களைப் புறக்கணித்து விடு.”

“உன்பேச்சு நன்றாக இருக்கிறது. பார்ப்போம்” எனக் கூறிவிட்டு தனது மேசைக்குச் சென்றான்.

“சரியானதைச் செய்” என கூறிவிட்டு செல்லமாக அவன் தலையைத் தட்டிச் சென்றாள் சிண்டி.

இவளுக்கு எப்படி புரியும். சிட்னியில் தற்போது ஒரு குட்டி யாழ்ப்பாணம் உருவாகியுள்ளது. பிறந்தநாட்டில் இருந்து கொண்டு வந்த அலங்கோலமான விடயங்கள் இங்கும் வேகமாக பரவுகிறது மற்றவர்கள் விடயங்களில் போலியான அக்கறையை வெளிக்காட்டினாலும், ஒவ்வொருவருக்கும் இனம்புரியாத காழ்ப்புணர்வுடன் வாழ்கிறார்கள்.அன்று ஒரு நாள் ரெயில்வே ஸ்ரேசனில் ஒருவர் என்னைக் கண்டதும் யாழ்ப்பாணத்தில் எந்தப்பகுதி என்று விசாரித்தார். எனக்கு புரிந்தது. திருமணத்துக்கு யாரோ இருக்கிறார்கள் போல் என நினைத்துக் கொண்டு எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னதும் மனிதரின் முகமே மாறிவிட்டது, மனிதர் ஏமாற்றத்தைக் காட்டாமல் தன்னை சமாளித்துக்கொண்டு மீண்டும் கேட்டார். “தம்பிஇ நாங்கள் பெடியளால்தான் வரமுடிந்தது” “உங்கள் பிள்ளைகளோ உங்களை கூப்பிட்டது” என்றேன். மனிதருக்கு ஆதரவாக. “பிள்ளைகள் கூப்பிட்டது சரி ஆனால் புலிப்பெடியளைக் காரணம் காட்டித்தான் நான் அகதி அந்தஸ்து கேட்டேன். அரசாங்கமும் தந்துவிட்டது.” “ஊரில் பிரச்சனை சில விடயங்களுக்கு வசதியாக இருக்கு” என்கிற வார்த்தைகள் ஏளனமாக வந்தன. மனிதனின் வக்கிரதன்மையைக் கண்டு கொண்டதால். “தம்பி, உங்களைப்போல் இளம்பொடியள் படிக்க வரலாம் எங்களைப் போல் வயதானவர்கள் மருத்துவ வசதியில்லாமல் சாக வேண்டியதா? “

“நீங்கள் சொல்வதிலும் உண்மை உண்டு.” எனக் கூறி தப்பினேன். இப்படியான பொய் பித்தலாட்டங்கள் உள்ளவர்கள் மத்தியில் மனோவியாதியுள்ள மனைவியுடன் எப்படி வாழ முடியும?;. இதைவிட எப்படி சோபாவை மருத்துவரிடம் கொண்டு செல்வது? பின்பு எப்படி மருந்து எடுக்க பண்ணுவது? இவை பெரிய பிரச்சனைகளாகச் சந்திரனுக்கு தெரிந்தன.

சந்திரனோடு பேராதனையில் படித்த மகிந்த நியூசவுத்வேல் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறான். பழைய நினைவுகளை அவனுடன் இரைமீட்பதில் சந்திரனுக்கு சந்தோசமான விடயம். மதியம் சென்று மகிந்தவுடன் பேசிவிட்டு மாணவர் சங்க கன்ரீனில் சிற்றுண்டி சாப்பிட்டுத் திரும்புவான். சந்திரனது அந்தரங்கம் தெரிந்தவன் மகிந்தா. மஞ்சுளாவை கைவிட்டதையிட்டு பலமுறை “நீ ஒரு கோழை சரியான யாழ்ப்பாணத்தான்” என பலமுறை கூறுவான். மகிந்த மாத்தறைப் பகுதியை சேர்ந்தவன். அன்றும் மகிந்தவிடம் விடைபெற்று ரன்விக் சந்திக்கு வந்தவனுக்கு ஜீலியாவின் எண்ணம் மேலெழுந்தது. ‘இவ்வளவு துரம் வந்துவிட்டேன் பக்கத்தில் தானே இவள்வீடு இருக்கிறது. எந்தநேரமும் கதவு திறந்திருக்கும் என்றாளே. தொலைபேசியில் அழைக்காமல் திடுதிடு;;ப்பென போவது நாகரிகமில்லை. தொலைபேசியில் கூறவில்லை பிறந்தநாளுக்கு அழைத்தாள். என்பதை சாட்டாக வைத்துக்கொண்டு போவது நல்லதா? ஏதாவது பிரச்சனையில் மாட்டிவிடுமோ?” என பலமுறை கவலைப்பட்டாலும் காரை அவளுடைய வீடு இருந்த உள்ள திசையில் செலுத்தினான். ‘தற்செயலாக வந்ததாக கூறுவோம். ஜீலியா வீட்டில் இல்லை என்றாலும நல்லதுதான்’ என்று மனதில் எண்ணங்கள் மாறிமாறி வந்தன. மாலைநேரத்து வாகன நெரிசல் வழமைபோல் இருந்தது. கூஜி கடற்கரைக்கு போகும் வழியில் ஜீலியாவின் வீடு இருந்தது. சந்திரனின் கார் நெரிசலில் நத்தையாக ஊர்ந்தது. முன் செல்லும் கார்களில் தனது கண்களை பதித்துக் கொண்டு காரை செலுத்தியவனுக்கு நடைபாதையில் அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளை நிறமான கவுனுடன் உச்சியில் கொண்டை போட்டுக் கொண்டு ரைகரை அழைத்துக்n;காண்டு ஜீலியா சென்று கொண்டிருந்தாள். சந்திரன் காரின் கோனை அடித்து சைகை காட்டினான். அவளுக்கு புரிந்து கொள்;ள நேரம் எடுத்தது. சுந்திரனின் கார் மெதுவாகியதால் பின்னுக்கு வந்தவர்கள் கார் கோனை பலமான அடித்தனர். சந்திரன் காரை நடைபாதையில் நிறுத்தினான். காரை விட்டு இறங்கிய சந்திரனைப் பார்த்துஇ “வாகனப் போக்குவரத்து நின்றுவிட்டதே” என்றாள் சிரித்தபடி. “எல்லாம் உங்களால் தான்”. “நான் என்ன செய்தேன்? “

“உங்களைக் கண்டதும் கார் என்னை அறியாமல் வேகத்தை குறைத்துக் கொண்டது. நான் பொறுப்பேற்க முடியாது. “

“ரோட்டில் ரைகருடன் என் பாட்டில் போன என்னை குற்றவாளியாக்குகிறீர்களே? எங்கே போகிறீர்கள்?;.”

“நியூசவுத்வேல்ஸ் யூனிவசிட்டியில் வேலை செய்யும் நண்பனிடம் வந்துவிட்டு சிறிதுநேரம் கடற்கரையில் இருந்துவிட்டு போகலாம் என வந்தேன்” என்று பாதி உண்மையும் மறுபாதி பொய்யுமாக கூறினான்.

“என் வீட்டுக்கு வாங்கோ” “நீங்கள் முன்னே போங்கோ நான் வருகிறேன்.”

ஜீலியாவின் வீட்டுக்கு முன் காரை நிறுத்திவிட்டு அவளுக்காக காத்திருந்தான். கடற்கரைப் பகுதியானதால் காற்று உப்பு கலந்து வீசியது. வீட்டு வாசலில் ரைகரின் சங்கிலியை கழற்றியபின் கதவை திறந்ததும் ரைகர் இருவரையும் தள்ளிக்கொண்டு முன்பாக வீட்டுக்குள் சென்றது. தயக்கத்துடன் ஜீலியாவை பின்தொடர்ந்தான் சந்திரன். திரும்பிப் பார்த்து “தயக்கமில்லாமல் வரலாம். எவரும் இல்லை” என்று கூறிகொண்டு கதவருகே இருந்த லைட் சுவிச்சை தட்டினாள். லைட் வெளிச்சம் அந்த ஓடைபோன்ற பிரதேசத்தை ஒளிவெள்ளத்தால் நனைத்தது.

“கொஞ்சம் இருங்கள். ரைகருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு வருகிறேன்”. என்று கூறி உள்ளே சென்றாள். இந்த சந்தர்ப்பம் சந்திரனின் மனத்தவிப்பை குறைக்கப் பயன்பட்டது. பக்கத்தில் இருந்த கதிரையில் ஏராளமான நாய் மயிர்கள் இருந்தன. ‘இதுதான் ரைகரின் படுக்கை போல் இருக்கிறது எப்படி இவர்கள் நாய்களையும் பூனைகளையும் தங்களது அருகில் அனுமதிக்கிறார்கள். ஏதோ ஒருபத்திரிகையில் இருந்து. அவுஸ்த்திரேலியாவில் பலர் படுக்கையில் செல்லப் பிராணிகளை அனுமதிக்கிறார்கள். இவர்களுக்கு தோழமையும் துணையுமாக இவை விளங்குகின்றன.

“எப்படி உங்கள் குடும்பம் “?; எனக்கேட்டுக் கொண்டு பக்கத்தில் அமர்ந்தாள். சந்திரனும் அருகில் அமர்ந்தான்.

“எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.” அவுஸ்திரேலியாவின் வழமையான கேள்வி கேட்பவர்கள் எதிர்மறையான பதில் கேட்பதற்கு தயாரில்லை மற்றவர்கள் பிரச்சனைகளை கேட்பதற்கும் அதற்கான உதவிகளை செய்வதற்கும் வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், மனநலவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பணம்பெற்றுக் கொண்டு அந்த சேவையில் ஈடுபடுகிறார்கள். சாதாரணமாக உங்களை சந்தித்து நலம் விசாரிப்பவர்கள் உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள தயாரில்லை. ஜீலியா விடவில்லை.

“உங்கள் கவலை முகத்தில் தெரிகிறது. ஆராட்சியாளரை ஆராய்ச்சி செய்யவில்லை. எனக்கு பட்டதை சொல்கிறேன்.”

“உண்மைதான். எனது குடும்ப பிரச்சனைகளை எப்படி சொல்வது. சிண்டி, மகிந்தவினுடன் பகிர்ந்து கொள்ளலாம். இவளிடம் இதையெல்லாம் சொல்லாவிட்டாலும் ஒரு இடைவெளி ஏற்படும். இவளிடம் நட்புநாடி வந்தேனா? பாலியல் கவர்ச்சியால் வந்தேனா?

முகத்தில் சிந்தனைகளை பார்த்ததும் “எனக்கு சொல்ல விருப்பமில்லை என்றால் விடவும். என்ன குடிக்கிறீர்கள்?.” என முகபாவத்தை மாற்றிக்கொண்டு உபசரித்தாள்.

“எதுவும் பரவாயில்லை.” உள்ளே இருந்து இரண்டு கிளாசில் தண்ணீர் கொண்டு வந்தாள். கிளாசுகளின் விளிம்புகளில் எலுமிச்சம் பாதிகள் செருகப்பட்டு இருந்தன.

“எனது கதையை கூறி உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை.”

“அப்படியா? “ என கூறியபடி சந்திரனின் தோளில் கை வைத்தாள்.

சந்திரனுக்கு அச்சமும் கூச்சமும் சேர்ந்து உடல் விறைத்தது.

சந்திரன் ரிலாக்ஸ் எனக்கூறி தோள்பட்டையை ஜீலியா அழுத்தியபோது விறைப்பு தளர்ந்தது.

“மெதுவாக திரும்பு “ எனக் கூறிவிட்டு இரண்டு கைகளாலும் அழுத்தினாள். சந்திரனின் உடம்பில் மாற்றம் ஏற்பட்டு ஒருவித சுகமான உணர்வு ஏற்பட்டது.

“இந்தக்கலையை எப்போது கற்றீர்கள்.? “

“அது தொழில் ரகசியம். பிடித்தால் நான் செய்துவிடுகிறேன்.”

“சரி”யென்று உடன் பதில் சொன்னாலும் மனம் குறுகுறுத்தது.

“கட்டிலில் வந்து படுத்தால் தான் செய்யமுடியும் ; என கூறியபடி அறையை நோக்கி நடந்தாள்.

“இனி பின்வாங்க முடியாது” என நினைத்தபடி பின் தொடர்ந்தான்.

“கமோன் படுக்கவும்.”

அப்படியே படுக்க சென்றவனிடம் “சேட்டை கழற்றிவிட்டால் தான் நான் மசாஜ் செய்ய முடியும் “ என்றாள்.

அந்நியப் பெண்ணின் முன் சேட்டை கழட்ட வெட்கமாக இருந்தது. இதைவிட இவளது கட்டிலில் படுப்பதற்கு உடல் கூசியது. வேறு வழியில்லாமல் படுத்தான். படுக்கையில் ஏனோ புதுமையான மணம் வந்தது.

“முகத்தை குப்பற வைத்துப் படுக்கவும். நான் ஒயில் எடுத்த வருகிறேன் ; என்றாள்.

குரலில் அதிகாரம் இருந்தது. குப்புற படுத்தபடி அந்த அறையை நோட்டம் விட்டான். படுக்கைக்கு பக்கத்தில் சிறிய மேசையில் மெழுகுதிரியும் அதன் அருகே சில புத்தகங்களும் இருந்தன. பக்கத்தில் புத்தக அலுமாரியில் பல புத்தகங்கள் இருந்தன. தலைக்கு எதிரில் பெரிய ஓவியம் கன்வசில் வரையப்பட்டிருந்தது. இளம்பெண் ஒருத்தி கழுத்துவரை தண்ணீரில் நீராடுவதும் அவளை சுற்றி தாமரை அல்லி போன்ற மலர்கள் பூத்திருப்பதும் அவற்றைவிட வானத்தில் இருந்து மலர்கள் சொரியும் காட்சியும் அந்த சித்திரத்தில் இருந்தது.

‘ஜீலியா தன்னை சுற்றி இந்த படுக்கை அறையில் ஒரு விசித்திரமான உலகத்தை சிருஸ்டித்திருககிறாள் போல் இருக்கிறது’ ஓவியத்தை ரசித்துக்கொண்டு இருந்தவன் கதவடியில் கேட்ட காலடியோசையால் கழுத்தை திருப்ப எத்தனித்தாள்.

“தலையை திருப்பவேண்டாம். அப்படியே படுக்கவும்.”

ஓரக்கண்ணால் பார்த்தபடி சந்திரன், “கையில் என்ன? “ என்றான். “இது ஒரு தைலம்”, என்றபடி முகத்துக்கு அருகே கொண்டு வந்தாள்.

“நல்லவாசம்தான்”. இளம்சூட்டுடன் தைலத்தை தொட்டு முதுகில் அழுத்தியதும் முதுகு தசைநார்கள் இறுகியது போன்ற உணர்வு ஏற்பட்டது. மஞ்சுளாவோ, சோபாவோ தொடும்போது ஏற்படாத உணர்வு என புரிந்துகொள்ள முடிந்தது. அந்நிய பெண்ணின் படுக்கையில் படுத்திருப்;பதும் ஏதோ நெஞ்சில் முட்டியது. குற்ற உணர்வுகள் தேன் கூட்டில் இருந்து கலைந்த தேனிக்கள் தலையை சுற்றி இரைந்து கொண்டே மொய்ப்பது போல் இருந்தன. தொடர்ச்சியாக ஜீலியாவின் கைகளும் இளம்சூடான தைலமும் தசைநார்களின்; இறுக்கத்தை தளர்த்தன. மனத்திலே நிரமபி இருந்த குற்ற உணரவு அடைப்பை இழுத்த பின் குறைந்து வரும் தொட்டி போன்று தோன்றியது.

“சந்திரன் என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? நான் இதற்கு எந்த கூலியும் கேட்கப் போவதில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்.”

“என்னை மன்னிக்கவேண்டும் இப்படியான ஒரு காரியத்துக்கு நான் தயாராக இருக்கவில்லை. ஆனாலும் அலாதியான சுகத்தை அனுபவிக்கிறேன்.” இப்பொழுது அவளது கைகள் இடுப்பருகில் இருந்தது.

“இது என்ன கறுப்பாக இருக்கிறதே “?

“எனக்கு தெரியாதே? எவரும் தன் முதகைப் பார்ப்பதில்லை”. மெதுவாக திரும்பிய சந்திரனுக்கு அவனது இடதுபக்க முதுகின் மச்சம் தெரிந்தது. அதேவேளையில் குனிந்தபடி மசாஜ் செய்யும் ஜீலியாவின் இரண்டு முலைகளும் முகத்துக்கு அருகில் அசைந்து நளினம்காட்டிச் சந்திரனின் இதயத்துடிப்பை வேகமாக்கியது. மெதுவாக திரும்பினான்.

புன்சிரிப்பு இளையோட, “இன்னும் வேணுமா? “ என இரண்டு கைகளையும் கட்டிலின் தலை பக்கத்துச் சட்டத்தில் பிடித்தபடி கேட்டாள். சந்திரன் ஜீலியாவின் கைகளை பிடித்தபடி தனது முகத்தருகே கொண்டு சென்றபோது “தைலம் முகத்தில் படக்கூடாது” என்றதும் அவளது கைகளை நெஞ்சில் வைத்தான். ஜீலியாவின் முகத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. புன்னகை மறைந்தது.

“ஐ ஆம் சொறி” எனக் கூறி எழுந்தவனை அழுத்தி அவனது நெஞ்சில் முத்தமிட்டாள் அப்போது அவள் மார்பகத்தின் மென்மையும், வெதுவெதுப்பும் அவனது நெஞ்சில் முழுமையாகப் பதிந்தன. சிறிது மூச்சுத்திணறிய சந்திரன் கைகளால் அணைத்தபடி அவளுடைய சட்டையின் உள்ளே கைவிட்டு பிராவின் கூக்கை அவிழ்க்க முயன்றான். முடியவில்லை.

“அனுபவக்குறைவு போல் இருக்கு” எனக்கூறி விட்டு கட்டிலை விட்டு எழுந்து நின்று தனது ஆடைகளை கழற்றி கட்டில் சட்டத்தில் போட்டாள். சந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முகத்தில் அதிர்ச்சிகளைக் காட்டாமல் மறைக்க எத்தனித்தான். அம்மணமாக கட்டிலில் விழுந்தவள் சந்திரன் மெதுவகாக எழுந்து உடைகளை களைவதை புன்புறுவலுடன் பார்த்துக்கொண்டு ஒருக்கழித்தபடி கிடந்தாள். சந்திரனுக்கு எப்போதோ பார்த்த புகழ்பெற்ற ஐரொப்பிய ஓவியத்தின் உள்ள காட்சி போல் இருந்தது. சரிந்து பிறப்புறுப்பை மறைத்தபடியும் அதேபோல் இரண்டு கைகளால் இலாவகமாக மார்பை மறைத்துக்கொண்டு திருப்பியது சந்திரனை உணர்வின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. மனதில் எழுந்த குற்றஉணர்வுகளும்இ நியாயத்திற்கும் அநியாயாயத்துக்கும் இடையில் நடந்த தர்க்கங்களும்இ பாரிய யுத்தமொன்றின் தோல்வியுற்று பின்வாங்கிய எதிர்ப்படைகள் வென்ற அரசனிடம் கடைசியில் தலைகுனிவது போல் சரணடைந்தன. பாலுணர்வு உடலை வெம்மையாக்கி கொதிப்படைய வைத்தது. இரத்த நாடிகள் விரிந்து இதயத்து உதிரத்தை உள்வாங்கி பாலுறுப்புகளுக்கு செலுத்தின. தசைநார்கள் திண்மை பெற்று விறைத்தன. சந்திரன் உன்மத்தமான கலவியில் ஈடுபட முயன்றாலும் ஜீலியாவிடம்ல் ஒரு குளிர்ந்த தன்மை தென்பட்டது, உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டனர். பசியோடு இருந்தவன் உணவை உண்ணும்போது உப்பு புளி குறைந்தாலும் உண்ணுவான். ஆனால் ஏதோ குறைவதை அவனால் அவதானிக்க முடிந்தது.

கட்டிலில் படுத்தபடி ஜீலியா “இதுதான் மனைவிக்கு புறம்பான முதல் உறவா” என மெதுவாக கிசுகிசுத்தாள்.

“ஆம்”

“இதுவரையும் நல்லபிள்ளை என்னால் கெட்டபிள்ளையாகி விட்டது” எனக்கூறி விரிப்பால் இருவரையும் சேர்த்து போர்த்தினாள்.

“உன்னிடம் ஒளிக்கவில்லை. கடந்த ஒருவருடத்தில் நான் கண்ட உறவுகள் எனது கைவிரல்எண்ணிக்கையிலும் குறைவானவை” என்று மறுபக்கம் திரும்பினான்.

“ஏன் என்ன விடயம்”? எனக்கூறி சந்திரனின் முகத்தை தன்பக்கம் திருப்பினாள்.

“சோபாவின் நிலை அப்படி. திருமணம் முடிந்த காலத்தில் இருந்து வித்தியாசமான போக்குதான். ஒரு இரு நாளில் நல்லமூடில் இருப்பாள். மற்ற நாட்களில் ஒதுங்கிவிடுவாள். நான் முயற்சி செய்தாலும் பிரயோசனம் இருக்காது. சிலவேளை உடலுறவுக்கு பின்னர் சிறுபிள்ளைபோல் அழுவாள். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விடும். நான் கட்டிலை விட்டு எழுந்து போய்விடுவேன்”.

“சந்திரன் பொதுவாக உடல் உறவை தீர்மானிப்பது பெண்கள்தான் ஆதிகாலத்திலும் அதுதான் நடந்தது. மிருகங்களிலும் பெண்மிருகங்கள் விரும்பிய காலத்தில் தான் ஆண்மிருகம் அருகே போகமுடியும். நாய்கள் வருடத்தில் இருமுறையும் பசுக்கள் மூன்றுகிழமைக்கு ஒருமுறையும் மட்டும் ஆண் மிருகங்களை அனுமதிக்கும் “

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? “

“எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். இருநூறு பசுமாடுகளும், இரண்டாயிரம் செம்மறி ஆடுகளும் ஒருகாலத்தில் வைத்திருந்தோம்.”

“சோபாவுக்கு உடல் உறவில் ஆர்வம் இல்லை என்றால் சகித்துக் கொள்ளலாம். வீட்டில் வேலை செய்வது குறைவு. காரணமில்லாமல் அழுவாள். எரிந்து விழுவாள் இவையெல்லாம் தாங்க முடியாமல் இருக்கிறது. பிள்ளை பிறப்பதற்கு முன்பு கொஞ்சம் குணக்குறைவு இருந்தது. இப்போது அவை அதிகமாகி விட்டன.”

“ஏதாவது மனம் சம்பந்தப்பட்ட விடயம் என்று நினைக்கவில்லையா? “நான் அப்படி நினைத்து பல தடவை இன்ரநெற்றைப் பார்த்தேன். பைபோலர் அல்லது மனத்தளர்வாக இருக்கலாம் என நினைத்தேன்.”

“ஏன் மனோவைத்தியம் பார்க்க கூடாது? “ “இதைப்பற்றி பலதடவை சிந்தித்தேன் எமது சமூகத்தில் மனவியல் பெரிய விடயம். சோபாவின் தாயார் தந்தையர் இதைக்கேட்டால் உயிரையே விட்டுவிடுவார்கள்.”

“இவையெல்லாம் காரணம் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தான் அதற்கு முடிவு கட்ட வேண்டும்.

” எனக்கு புரிகிறது. உங்களோடு உடலுறவு கொண்டுவிட்டு எனது மனைவியின் மனநிலையைப் பற்றி யோசிக்கிறேன்”

“அதுபற்றி என்ன?. எனக்கு தெரிந்த மனோவைத்தியர் ஒருவர் இருக்கிறார் அவரும் உங்கள் நாட்டில் இருந்து வந்தவர். எனக்கூறிக்கொண்டே பக்கத்து மேசையில் இருந்து விசிட்டிங்காட்டை எடுத்துத் தந்தாள்.

“டொக்டர் கந்தசாமியைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

“எப்படி இவரது விலாசம் உங்களுக்கு கிடைத்தது”?

“அதைப்பற்றி ஆறுதலாக பேசலாம். வீட்டுக்கு நேரமாகி விட்டது”.

அவன் மேலுள்ள போர்வையை விலக்கித் தன்னை மட்டும் போர்த்தாள். உடைகளை அணிந்துகொண்டு” இந்தநாளை என்னால் மறக்க முடியாது” என்று அவள் போர்வையை நீக்கி நிர்வாணமாக்கியபின் கன்னத்தில் முத்தமிட்டான்.

“நான் வாசலுக்கு வரவில்லை. பூட்டை திருப்பி கதவை பூட்டி விட்டு செல்லுங்கள்;.”

தொடரும்

“உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு” அதற்கு 2 மறுமொழிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: