பகுப்பு: Uncategorized
-
முகபுத்தகத்தில் ஈழம்..!!!
This was sent to me by a girl who was an LTTE fighter who lost both her legs. She was given away in marriage to a tiger doctor by Mathivathani. This letter typifies the current attitude and the situation prevailing amongst remnants of LTTE Sundar முகபுத்தகம் ஆழமாக இன்றைய சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கின்றது. போரிற்கு பின் முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில்…
-
Counting the Dead
Who Speaks for Sri Lanka’s Tamils? Island Padraig Colman An article I posted on Groundviews on May 28 elicited many responses. Sri Lanka’s Numbers Game On May 16, a seminar was held at the Marga Institute to launch a publication by the Independent Diaspora Analysis Group – Sri Lanka (IDAG-S) – The Numbers Game: Politics of…
-
மனைவி இருக்கிறாவா…? Is your wife at home?
முருகபூபதி இந்தப்பத்தியின் தலைப்பாக உபாதை என்றும் குறிப்பிட நினைத்தேன். ஏன் என்பதை வாசகர்கள் பத்தியின் இறுதியில் தெரிந்துகொள்ளலாம். அன்று ஒருநாள் மாலை நான் எனது நூலக அறையில் கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன். வாசலில் அழைப்பு மணியோசைகேட்டது. யார் என்று பார்க்கும்படி மனைவிக்கு சற்று உரத்தகுரலில் சொன்னேன். மனைவி வீட்டின் பின்புறத்தில் தான் புதிதாக வளர்க்கும் பூஞ்செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும். “ கையில் வேலை. நீங்களே போய்ப்பாருங்கள்” என்று அவளும் உரத்த குரலில் சொன்னாள். யார்… இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும்.…
-
மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்
பயணியின் பார்வையில் 20 முருகபூபதி கிழக்குமாகாணத்தில் மழை, வெள்ளம் எனத்தெரிந்துகொண்டே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எனது பயணத்தை தொடர்ந்தேன். திருகோணமலையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் கணேஷ். ஏற்கனவே எமது கல்வி நிதியம், வவுனியாவில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை (மாணவர்களை) விடுவித்து அவர்களை க.பொ.த. உயர்தர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு வகைசெய்தபோது அந்தப்பணியை நிறைவுசெய்வதற்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் வவுனியா…
-
Rumblings in the temple
By our community reporter Melbourne: In the April 2013 issue of the SAT we did a story ‘Immigration raid at temple in Carrum Downs…’ On Friday 5 April, 2013 immigration officials had visited the Sri Shiva Vishnu temple, Carrum Downs and interviewed a person there. Subsequently, we saw a denial by the Immigration Department published…
-
அசோகனின் வைத்தியசாலை 28- இறுதி அத்தியாயம்
பத்து மில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளராகிய பின், இலண்டனில் ஒரு மிருக வைத்தியசாலையில் நியமனம் பெற்றுக்கொண்டு செல்லும்போது ‘எப்பொழுதாவது இங்கிலாந்துக்கு வந்தால் என்னைப் பார்’ எனச் சொல்லி விட்டுத் ஷரன் தனது இண்டனில் வதியும் சிறிய தாயாரின் விலாசம் கொண்ட காகிதத்தை மெல்பேன் விமான நிலயத்தில் வைத்து சுந்தரம்பிள்ளையிடம் கொடுத்தாள். எங்கோ கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோமீட்டரில் உள்ளவர்களைத் தாக்கும் சுனாமி போல் இவள் செய்த காரியம் வேறு எந்த சராசரி பெண்ணாலும் செய்து…
-
அசோகனின் வைத்தியசாலை 27
சுந்தரம்பிள்ளை சிட்னியில் நடக்கவிருக்கும் எலும்பு முறிவு சம்பந்தமான கொன்பரன்ஸ்க்கு செல்வதற்கு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தான். பதினைந்து மிருக வைத்தியர்கள் வேலை செய்யும் வைத்தியசாலையில் ஒருவர், இருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் விடுமுறை கிடைக்கலாம். விண்ணப்பித்த போது விடுமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் எதுவித நட்டமும் இல்லை என்ற அலட்சியமான மனநிலை விண்ணப்பிக்கும் போதிருந்தது. வியப்புக்களும் ஆச்சரியங்களும், திருப்பங்களிலும் முடுக்குகளிலும் காத்திருப்பது போல் சுந்தரம்பிள்ளைக்கும் அந்த விடுமுறை கிடைத்தது. கடந்த நான்கு வருடத்தில் இப்பொழுதுதான் முதல்…
-
அசோகனின் வைத்தியசாலை 26
ஜோனின் பிரியாவிடை வைத்தியசாலையில் நடந்த சில மாதங்களின் பின் அவனது வீட்டுக்கு ஒரு காலை நேரத்தில் அவனது உடல் நலத்தை விசாரிப்போம் என நினைத்து சுந்தரம்பிள்ளை சாருலதாவுடன் சென்றான். ஈரலிப்பாக இருந்த காலைப்பொழுது பனிபுகாரின் போர்வையில் இருந்து வெளியேவரத் தாயின் வயிற்றி இருந்து வரத்துடிக்கும் குதிரைக் குட்டிபோல் திமிறியது. கண்ணுக்கெட்டியவரை டன்னினேங் மலையடிவாரத்தில் உள்ள அந்தப் புறநகரின் புறச்சூழலில் எதுவித மாற்றமும் தெரியவில்லை.மலைச்சாரலில் உயர்ந்து வளர்ந்த யூகலிகப்ரஸ் மரங்கள் பச்சைப் பசேலன கண்களையும், அந்த மரங்களில் இருந்து…
-
மக்கள் சேவையை கவனத்தில் கொள்ளாதஆயுததாரிகள்
பயணியின் பார்வையில் — 19 முருகபூபதி மகாத்மாகாந்தி நாதுரம்கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டபொழுதுமுன்னாள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேர்ட்டன்,தமதுஅஞ்சலிக்குறிப்பில் இவ்வாறுசொன்னார்: “தொடர்ச்சியாகபிரித்தானியவெள்ளையரசைஎதிர்த்துப்போராடியகாந்தியின் உயிருக்கு பிரித்தானியா பாதுகாப்பாக இருந்தது. ஆனால் அவர் எந்தத்தேசத்தின் விடுதலைக்காககுரல்கொடுத்தாரோஅந்தத்தேசத்தின் குடிமகன் ஒருவர்தான் அவரதுஉயிரைப்பறித்தார்.” வன்னிப்பிரதேசநிகழ்ச்சிகளைமுடித்துக்கொண்டு,கிளிநொச்சியிலிருந்துஒருகாலைவேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச்சென்றுகொண்டிருந்தபொழுது,எமது இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் தோற்றம் வளர்ச்சிமற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகயோசித்துக்கொண்டு ஏ9 பாதையில் பயணித்தேன்.எனக்குநினைவுக்குவந்த மூன்றுதமிழ் அன்பர்கள் எமதுநிதியத்திற்குஆதர்சமாகவும் பக்கத்துணையாகவும் விளங்கினார்கள். அவர்களைப்பற்றியும் பதிவுசெய்யவேண்டியதுகாலத்தின் தேவை. மவுண்ட்பேர்டனின் குறிப்பை இங்குஏன் தெரிவித்தேன் என்பதை இந்தப்பத்தியைவாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். இலங்கைமாணவர் கல்விநிதியம்…
-
அசோகனின் வைத்தியசாலை 25
வைத்தியசாலையில் சுந்தரம்பிள்ளைக்கு ஓய்வு நாளானதால் மெல்பேனின் வடபகுதியில் வசிக்கும் நண்பனிடம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது வைத்தியசாலையுள்ளே சென்றான். எப்பொழுதும் வேலை செய்யும் நாளிலும் பார்க்க வேலை செய்யாத நாளில் சென்று , நண்பர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது திருப்தியைத் தரக்கூடியது. மனிதர்களுக்கு வேலை செய்வது உடலோடு அல்லது மூளையோடு மட்டும் சம்பந்தபட்டது அல்ல. வேலை தொழிலாக மாறி ஆன்மாவோடு சேர்ந்து விடுகிறது. வேதனம் இரண்டாம் பட்சமாகிறது. வேலை இல்லாமல் இருப்பதை நாகரீகமான மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாது.…