பகுப்பு: Uncategorized
-
‘அசோகனின் வைத்தியசாலை’ பற்றிய ஒரு பார்வை.
‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அசோகனின்வைத்தியசாலை’என்றநாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளி என்ற விதத்தில்,இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும,இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால்,இந்தச்…
-
ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்ற கி.வா.ஜகந்நாதன்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி தமிழில் புதுக்கவிதை இலக்கியம் அறிமுகமான காலப்பகுதியில் அதனை வன்மையாக எதிர்த்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன். மற்றவர் கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன். புதுக்கவிதை விடயத்தில் இவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. இலக்கியக்கோட்பாடுகள் குறித்தும் நிரம்பவும் வேறுபட்டவர்கள். ரகுநாதன் ஒரு கம்யூனிஸவாதி. கி.வா.ஜகந்நாதன் ஆத்மீகவாதி. ஜகந்நாதன் எப்பொழுதும் நெற்றியில் திருநீறு துலங்க சிவப்பழமாகக்காட்சியளிப்பவர். ரகுநாதன் அப்படியல்ல. கி.வா.ஜ. என அறியப்பட்ட ஜகந்நாதன் இந்துசமய இலக்கியங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் இராமாயணம்…
-
கல்விக்கும் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய முகம்மது சமீம்.
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி மெல்பனில் நடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்று உரையாற்றிவிட்டு வீடு திரும்பியிருந்தவேளையில் கொழும்பிலிருந்து நண்பரும் யாத்ரா இதழின் ஆசிரியருமான அஷ்ரப் சிகாப்தீனிடமிருந்து அவசர தகவல் வந்திருந்தது. முகம்மது சமீம் காலமாகிவிட்டார் அவரைப்பற்றிய கட்டுரையொன்றை தாமதமின்றி எழுதி அனுப்புமாறு அவர் கேட்டிருந்தார். எனக்கு அந்தச்செய்தி மிகுந்த மனச்சோர்வையளித்தது. அந்தச்சோர்வுக்கு முக்கிய காரணம் — கடந்த சில மாதங்களாக முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து அடுத்தடுத்து எனது இனிய நண்பர்களை நான் இழந்துகொண்டிருக்கின்றேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர்…
-
மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு
– அசோகனின் வைத்தியசாலை நாவல் வெளியீட்டில் முருகபூபதியின் உரை: எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் விலங்கு மருத்துவருமான Murugapoopathy Speech Nadesan Book Launchநடேசனின் புதிய நாவல் அசோகனின் வைத்திய சாலை – வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு சமணல வெவ மற்றும் உனையே மயல் கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You ஆகிய மூன்று நூல்களினதும் விமர்சன அரங்கு அண்மையில் (04-05-2014) மெல்பனில் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. பந்து திஸாநாயக்கா…
-
Acceptance Speech For the Book Launch-Melbourne
Hon Liz Beattie, MP, Victoria Hon Jude Perera MP Victoria Consul general Puspakumara Dear Friends. A warm welcome to you all. Thank you for coming along today as I share and launch my books We are here today not only for the purpose to discuss my novels, but gather as friends from many communities. I’m…
-
தேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி
கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பற்றித் தெரியுமா? ஓ—– தெரியுமே—- ஐந்துலாம்புச் சந்தி – நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான செட்டியார் தெரு, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் – விவேகானந்தா மண்டபம் -கமலாமோடி மண்டபம் – விவேகானந்தா மகா வித்தியாலயம் இப்படி பிரசித்தமானவைகள் அமைந்த பிரதேசம். அவ்வளவுதானா? இந்த ஜிந்துபிட்டிக்கென தனியாக ஒரு வரலாறு இருப்பது தெரியுமா? தெரியாதே? மகாத்மா காந்தி – ஜவஹர்லால் நேரு – தியாகராஜ பாகவதர் – பி.யு.சின்னப்பா – கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதலானோரை முதல் முதலில் வரவேற்ற…
-
எரிமலையை நோக்கிய பயணம்
வனவாத்து (Vanuatu) – தென்பசிபிக்தீவுகள் நடேசன் ஏழாயிரம் அடி உயரத்தில் ஆகாயவெளியில் ஆறு இருக்கைகளைக் கொண்ட செஸ்னா விமானம் பறந்தபோது எதிரே புகைபோல் வந்த ஓவ்வொரு மேகக்கூட்டமும் அந்த விமானத்தை தூக்கித் தூக்கி எறிந்தது. சிறுகுழந்தை, விளையாட்டு விமானத்தை விளையாடுவதுபோல் அந்த மேகக்கூட்டங்கள் விளையாடியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மேககூட்டங்களை பயத்துடன், மவுனமாக சபித்துக் கொண்டேன்.வனவாத்து வருவதற்கு முதல்நாள் மண்டைக்கயிறுக்கு (மனைவியின் தம்பி) கொடுக்க வேண்டிய பணத்தை வங்கியில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஏதாவது…
-
மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டிDr.Nadesan1ல் எழுத்தாளரும் மிருக மருத்துவருமான டொக்டர் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு எதிர்வரும் 04 – 05 – 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் GLENWAVERLEY R S L மண்டபத்தில் (161, COLEMAN PARADE, GLENWAVERLEY – VICTORIA – 3150)( GLENWAVERLEY ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மண்டபம்) நடைபெறும். ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான வண்ணாத்திக்குளம்…
-
மீட்டாத வீணையும் – தொப்புள்கொடியும் வழங்கிய நித்தியகீர்த்தி
முருகபூபதி அவுஸ்திரேலியாவில் இலக்கியத்துறையில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வருடாந்தம் ஒன்று கூடச்செய்யும் தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நான் ஒழுங்குசெய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியிலிருந்து நண்பர் கலாமணி ( தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் அதன் ஆசிரியர் பரணீதரனின் தந்தையார்) தமது குடும்பத்தினருடன் வந்து எமதில்லத்தில் தங்கியிருந்தார். கலாமணி தமது பூதத்தம்பி இசைநாடகத்தை எழுத்தாளர் விழாவில் மேடையேற்றுவதற்காகவும் விழாவில் நடந்த…
-
Let them dream peacefully
Noel Nadesan </ Right now Sri Lanka is facing three offensives – and all three have come from abroad with the Tamil Diaspora trying their best to embarrass the Sri Lankan government. The first is the anti-Sri Lanka resolution passed by the UN Human Rights Council at its 25th session in Geneva. This resolution insisting…