பகுப்பு: Uncategorized
-
பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர்.
திரும்பிப்பார்க்கின்றேன் நிழலாக நினைவுகளாக எம்மைத் தொடரும். நீர்கொழும்பூர் முத்துலிங்கம். பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர். முருகபூபதி இலங்கையின் மேற்குகரைதனில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழும் நீர்கொழும்பு – ஈழத்து இலக்கிய உலகிலும் இடம்பெற முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம். இவரது மறைவு எதிர்பார்க்கப்பட்டதே! நீண்ட இடைவெளியின் பின்பு 1997 ஆம் ஆண்டில் இலங்கை சென்ற சமயம் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் நடைபெற்ற மூன்று இலக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டோம். கொழும்பு நிகழ்ச்சிகளுக்கு இருவரும்…
-
மண்வாசனையை பரவச்செய்த மருதூர்க்கொத்தன்.
திரும்பிப்பார்க்கின்றேன் கிழக்கிலங்கையின் மண்வாசனையை இலக்கியப்படைப்புகளில் பரவச்செய்த மருதூர்க்கொத்தன் இன்று அவரது பிறந்த தினம் முருகபூபதி பல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண சான்றிதழ் – மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும். கிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால்…
-
பொலிடோல்
(சிறுகதை) நடேசன் ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது. வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும் அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த…
-
மெல்பனில் கலை இலக்கிய விழா 2014
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain Highway , BORONIA , Victoria) தொடங்கும் கலை – இலக்கிய விழா இரவு 10 மணிவரையில் நடைபெறும். பகல் அமர்வில் இலக்கிய கருத்தரங்கு மற்றும் நூல்களின் விமர்சன அரங்கும்…
-
வலி சுமக்கும் நூலக நினைவுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன். நீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது…
-
ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்.
கருணாகரனின் ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்- ஈழத்தமிழர் எதிர்காலத்தை இறந்த காலமாக்காமல் இருப்பதற்கு தொடர்ந்து மறுவாசிப்பு செயயவேண்டியது நூல். நடேசன் கவிஞர்கள் காலம் காலமாக ஒரு மொழியின் சொந்தக்காரர்கள். அதாவது நிலத்தினை பயிர்செய்யும் விவசாயிபோல். ஒவ்வொரு சமூகத்திலும் மொழியை அவர்கள் உடமையாக வைத்திருப்பதால் அந்த மொழியை பாவிக்கும் சமூகம் அவர்களை நம்பி காலம் காலமாக இருக்கிறது. மற்றவர்கள் அவர்களிடம் இருந்து கடன்வாங்கி மொழியை பாவிக்கிறார்கள் ஏன் தெரியுமா? சமூகத்தின் கதையை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு…
-
ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்
படித்தோம் சொல்கிறோம் முருகபூபதி இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவடைந்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தும் ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல் சமீபகாலத்தில் நான் படித்த சில நாவல்கள் யாவும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட அல்லது அதற்குக்கிட்டவாக வரும் பக்கங்களைக்கொண்டிருந்தன. இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் சூழலில் அத்தனை பக்கங்களையும் படித்து முடிக்க தேவைப்படுவது நேரமும் ஆர்வமும் பொறுமையும். இன்றைய யுகத்தில் ஒரு தேர்ந்த வாசகனுக்கு இவை மிகவும் அவசியம் எனக்கருதுகின்றேன். இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்த…
-
குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த கலைஞன் ஸ்ரீதர் பிச்சையப்பா
திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் – உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை – என்று எழுதினார் தொ.மு.சி.ரகுநாதன். ஸ்ரீதர் பிச்சையப்பாவின் மறைவுச்செய்தி கிடைத்தபோது ரகுநாதனின் அந்தக்கூற்றைத்தான் நினைத்துப்பார்த்தேன். இந்த நினைப்பு ஸ்ரீதரை புதுமைப்பித்தனுடன் ஒப்பிடும் முயற்சியல்ல. ஸ்ரீதர் மட்டுமல்ல பல கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்க்கையும் சோகநாடகமாகத்தான் அரங்கேறியுள்ளன. பட்டியலிட்டால் அது அவர்களின் உறவுகளை காயப்படுத்தும். வாழ்பவர்களுக்கு எச்சரிக்கை என்று சொன்னாலும் – எத்தனைபேரால் இந்த எச்சரிக்கை சமிக்ஞையை புரிந்துகொள்ள முடியும்…
-
உல்லாசம் பிரயாணிகளைக் கவரும் பிஜித் தீவுகள்
நடேசன் ஹாஜி முகம்மது என்ற இஸ்லாமிய வாகன சாரதி ‘பிஜித்தீவில் வாழும் இந்திய மக்களிடம் இந்து – முஸ்லீம் தொடர்பாக எதுவித மதப்பாகுபாடும் இல்லை’ என்றார் அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எங்களையும் அவர் இந்தியர்களாக கணித்ததால் அந்த வார்த்தையைக் கூறினார். “அப்படியென்றால் புலம்பெயர்ந்த இந்தியர்களான உங்களிடம் இருந்து மத சகிப்புத்தன்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” – என்றேன். எங்கு சென்றாலும் வாகன சாரதிகளைத் துருவுவது எனது வாடிக்கையான பொழுது போக்கு. “நான்கூட இந்துப் பெண்ணைத்தான் மணந்தேன். எனது…
-
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014)
06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre – Memorial Drive, Noble Park, Vic – 3174) இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் ஆதரவுடன் நிதியுதவி வழங்கி குறிப்பிட்ட மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை மாணவர்…