பகுப்பு: Uncategorized
-
வண்ணச்சிவிங்கி
நடேசன் ஆபிரிக்காவுக்கு மட்டுமே உரிய மிருகமாக மட்டுமல்லாது சவானாக் காடுகளில் வளரும் முட்களைக் கொண்ட முக்கிய மரமான அக்கேசியாவின்(Acacia) இலையை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக மட்டுமே பரிணாமமெடுத்துள்ள ஒட்டகச்சிவிங்கியை பார்த்தபோது – இவ்வளவு பெரிய உடம்பிற்கு சிறிய தலையிருப்பதென்றால் நிச்சயமாக அதன் புத்தி மட்டமாகத்தான் இருக்கவேண்டுமன்ற நினைப்பே ஆரம்பத்தில் எனது மனதில் ஏற்பட்டது. குருகர் தேசிய வனத்தில் எமது ஜீப்பை கண்ட ஒவ்வொரு முறையும் அக்காசிய மரங்களின் மேற்பகுதியை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எங்களை அந்த ஒட்டகசிவிங்கி…
-
மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான காவலூர் ராஜதுரை நேற்று (14-10-2014) மாலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரையின் கதை வசனத்தில் வெளியான பொன்மணி திரைப்படம் இலங்கை தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில் வசீகரா விளம்பர நிறுவனத்தின் இயக்குநராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரை பல வருடங்களாக அவுஸ்திரேலியா சிட்னியில் தமது குடும்பத்தினருடன் வசித்தார். இங்கு இயங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும்…
-
Lamb, the lawn mower
DR Noel Nadesan On a freezing Melbourne winter morning, gusty winds were blowing an icy chill through my bones. I stood shivering in front of a magistrate court in Melbourne, cursing an Egyptian named Ibrahim. The cold weather and my disgust irritated me badly but I waited patiently not knowing when my name would be…
-
இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை
எக்சோடஸ் 1984 நடேசன் யாழ்ப்பணத்தில் திருக்குடும்ப கன்னியர் மடத்தினரது வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது அங்கேயே 1984 ஜுன் மாதம் 18 ஆம் திகதி எனது மகள் யாழ்ப்பாணத்தில் பிறந்ததும் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. தொடர்ச்சியாக குண்டுகள் யாழ்ப்பாணத்தில் வெடித்துக் கொண்டிருந்தது. வேலை செய்யும் வைத்தியசாலைக்கு அருகிலும் அக்காலத்தில் குருநகர் இராணுவ முகாம் இருந்தது. எனது ஆலோசனைப்படி அவளும் இந்தியா வரத்தயாரானாள் இந்தக்காலத்தில் சென்னையில் எனக்கும் எதிர்காலம் விடையில்லாத வினாவாக நீடித்து இருந்தது. அடுத்து…
-
இருபது ஆண்டுகளின் பின்பாக தென்னாபிரிக்கா
நடேசன் 1994 ஆண்டுவரையும் நிறபேதமான (Apartheid) அரசமைப்பை கொண்டு பத்து வீத வெள்ளை இனத்தவரால் பெரும்பான்மை கறுப்பு இனமக்களை பிரித்து ஓடுக்கி அரசாண்ட தென் ஆபிரிக்கா என்ற தேசம் வானவில்லின் வண்ணங்களைக் கொண்ட பல இனமக்கள் வாழும் ஒரு நாடு என நெல்சன் மண்டேலாவினால் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் இருபது வருடங்களாகிவிட்டது. வெகுகாலமாக நீடித்த கனவான தென்னாபிரிக்க பயணம் மிருக வைத்திய மாநாடு ஒன்றின் மூலம் சமீபத்தில் சாத்தியமாகியது. உன்னதமானவர்களால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட விடுதலைப் போரட்டங்கள் நடந்த…
-
யாழ்தேவி நினைவுப்பதிவு
எழுத மறந்த குறிப்புகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய பாதையைத்தேடி தர்மசேன பத்திராஜாவின் In Search Of A Road முருகபூபதி போர்க்காலத்தில் வடக்கிற்கான ரயில் பாதை வவுனியாவுக்கு அப்பாலும் மன்னார் பாதையில் மதவாச்சிக்கு அப்பால் மன்னார் – தலைமன்னார் பியர் ரயில் நிலையங்கள் வரையும் சென்ற ரயில்கள் தடைப்பட்டன. பாதை சீர்குலைந்த பின்னர் இந்த வழித்தடத்தில் இயங்கிய அனைத்து ரயில் நிலையங்களும் சிதைந்துபோயின. அகதி மக்களின் முகாம்களாகவும் விலங்கினங்களின் சரணாலயங்களாகவும் மாறின. ரயில் தண்டவாளங்களும் சிலிப்பர்கட்டைகளும் பங்கர்…
-
Sandy-lingering soul
Sandy-lingering soul The clock on the television that adorned the latter showed the time as 12 midnight. The television show that I was watching was coming close to the end. It was a detective drama produced in England, the previous show was a police drama also produced in England. I am addicted to British cop…
-
நாளையை நாளை பார்ப்போம்
எக்ஸோடஸ் 1984-6 நடேசன் சென்னையில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் நிறைந்த பாண்டிபஸாரில் நான்கு மாடிக்கட்டிடம். அதன் கீழ்ப்பகுதியில் கல்யாணமண்டபம் மேல்பகுதிகளில் சிறிய அறைகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஆண்கள் மட்டும் இருப்பதற்காக அமைந்தவை. இரவு நடுநிசி வரையும் ஜனநடமாட்டமான பிரதேசமானதால் நாங்களும் பம்பலாக இருந்தோம். நண்பர் விசாகனுடன் சேர்ந்து இருந்த காலம் சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமானது. விசாகன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்தவர். திருமணமாகி மனைவியையும் குழந்தையையும் பிரிந்து என்னைப்போல் வந்திருந்ததால் எனக்கு அவருடன் இணக்கமாக இருக்க முடிந்தது. அவர்…
-
அசோகனின் வைத்தியசாலை.
ஜேகே நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது.…
-
புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை
ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல. அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார். அவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர். நாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா…