பகுப்பு: Uncategorized
-
உரத்துப் பேச…ஆழியாளின் கவிதைக் குறிப்பு.
பலகாலத்திற்கு முன்பு எழுதியது – Noel Nadesan . தமிழர்கள் வாழ்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கவிதை வடிவங்கள் ஒட்டி உறவாடின. சராசரியான தமிழ் அறிவு கொண்ட என்போன்றவர்களுக்கு கவிதைகளைப் படிக்கப் பொறுமை இல்லை. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது சில கவிதைகளின் வரிகள் மனத்தில் நெருடும். சில வரிகள் குற்றவுணர்ச்சியை தூண்டும். பல மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. இப்படிப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு ஆழியான எழுதிய உரத்துப் பேச… இந்த கவிதைத் தொகுப்பில் இருந்த கவிதைகள்…
-
யானைகள் தேடும் சவக்காலை
நடேசன். காட்டில் வாழும் மற்றைய மிருகங்களிலும் பார்க்க யானைகள் பற்றிய விடயங்கள் எனக்கு ஆவலானவை. அதற்குக் காரணம் அவற்றைப்பற்றி அரைகுறையாக தெரிந்ததால்தான் என நினைக்கிறேன். மிருக வைத்தியராக இலங்கையில் யானைகளை பற்றி படித்திருப்பதுடன், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் வேலைகளையும் ஓரளவு செய்திருக்கிறேன். தந்தத்திற்காக கொலை செய்த யானைகளை பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். குட்டிகளை பிடிப்பதற்காக, வெட்டிய குழிகளில் விழுந்த ஓரிரு மாதங்களேயான, யானைக் குட்டிகளை இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பில் எடுத்தால், அவற்றை வளர்ப்பதற்கு உதவுவது மிருகவைத்தியர்களான எங்கள்…
-
மூத்த படைப்பாளி அன்புமணி
திரும்பிப்பார்க்கின்றேன். பல்துறை ஆற்றலுடன் பதிப்பாளராகவும் விளங்கிய மூத்த படைப்பாளி அன்புமணி சமூகநலன் சார்ந்த பணிகளிலேயே தனது வாழ்நாளை செலவிட்டு விடைபெற்ற கர்மயோகி முருகபூபதி “ஒருவன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின் ஆன்மாதான் தீர்மானிக்கிறது” என்ற மகாபாரத தத்துவத்தை சமீபத்தில் படித்தேன். இந்தத்தத்துவத்தை நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அதிலிருக்கும் உண்மை புலப்படுகிறது. வயது செல்லச்செல்ல நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் யார்…? என்ற தெரிவு எம்மையறியாமலேயே மனதிற்குள் உருவாகிவிடுகிறது. அவர்களில் பலருடைய…
-
உயிரையும் காதலையும் காப்பாற்றிய டொக்டர் கெங்காதரன்
நடேசன் டாக்டர் கெங்காதரன் மரணமடைந்துவிட்டார் என்றதும், அவரை பற்றி பலவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றியது. அவர் ஒரு புல்லங்குழல் வித்துவான். பலதடவை எனது சிறுவயதிலும் பின்னர் எனது ரீன் ஏஜ் பருவத்திலும் எனக்கு வைத்தியராக சிகிச்சையளித்தவர். அவரது மகளை பல்கலைக்கழகத்தில் நன்கு பரிச்சயமான எனது நண்பர் குமரன் தங்கராஜா மணம்முடித்து மெல்பனில் வாழ்கிறார். டொக்டர் கெங்காதரன் 95 இடப் பெயர்வில் இருந்து இறுதியுத்தம் முடிவுற்றவரையில் வன்னிமக்களிடையே தனது மருத்துவசேவையை மேற்கொண்டவர். தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை மற்றவர்களுக்காக செலவிட்டும்…
-
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பட்டதாரி மாணவர்கள்
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பட்டதாரியாகினர். விரைவில் பட்டமளிப்பு விழா. சிலர் தொழில் வாய்ப்பு பெற்றனர், சிலர் மேற்கல்வி தொடருகின்றனர். பயனடைந்த மாணவர்கள் கல்வி நிதியத்திற்கு பாராட்டு இலங்கையில் நீடித்த முப்பது ஆண்டுகால போரினாலும் 2004 ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கிலங்கையில் நிகழ்ந்த சுனாமி கடற்கோள் அநர்த்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் பயின்றவாறு அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்…
-
நற்செய்தி
அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிய இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற மாணவி செல்வி பாமினி செல்லத்துரை தமது பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்டு கொழும்பில் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பணியாற்றினார். தொடர்ந்தும் மேற் கல்வி கற்று தற்பொழுது பிரதி கல்விப்பணிப்பாளராக நுவரேலியா பிராந்தியத்திற்கு தெரிவாகியுள்ளார். தாம் மேலும் முதுகலை (M . A) பட்டப்படிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியை…
-
வரிக்குதிரை வதக்கல் வேண்டுமா…?
நடேசன் 2005 இல் தென்னாபிரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஹொலிவூட் படம் ரேசிங் வித் ஸ்ரைப்பிஸ் (Racing with stripes). மிருகங்களைப் பேசவைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் குதிரைகள், சேவல்கள் ,ஆடுகள் முதலானவை தோன்றின. இத்திரைப்படம் ஒரு இளம் வரிக்குதிரையையும் அதன் மீது பாசம் கொண்ட தாயற்ற இளம் பெண்ணையும் முக்கிய பாத்திரங்களாகக் கொண்டது. சூறாவளி திடீரென்று மையம் கொண்டதால் அவசரம் அவசரமாக தாங்கள் தங்கிய இடத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்கிறது ஒரு சர்க்கஸ் குழு.…
-
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு
வவுனியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் ஒன்று கூடலும். இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் கடந்த சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் பணிமனையில் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு.…
-
பிரேமலதா. (சிறுகதை)
1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது காலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர்…
-
மலேசியன்ஏர் லைன் 370″.
முன்னுரை – தெளிவத்தை ஜோசப் ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டுகாலம் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர். ‘திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேசமுடியாமற்போன சிறுவனைப்போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்’ என்று தனது எழுத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றார் திரு.நடேசன். (வண்ணாத்திக்குளம்-முன்னுரை). 2003 ல் 15 வருடங்களுக்கு முன்பு என்றால் 1988 என்று…