ஆசிரியர்: noelnadesan
-
மெல்பனில் 1987 இல் முதலாவது சந்திப்பு
கங்காரு நாட்டுக்காகிதம் முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்கு 1987 பெப்ரவரியில் வந்து, மெல்பனில் West Brunswick என்னுமிடத்தில் ஒரு படுக்கை அறைக்குடியிருப்பை வாடகைக்கு எடுத்து புகலிட வாழ்வை நான் ஆரம்பித்து, இரண்டு நாட்களில் நண்பர் இராஜரட்ணம் சிவநாதன், ( இவரை எனக்கு இலங்கையிலேயே தெரியும்) தொலைபேசியில் ( அப்பொழுது கைத்தொலைபேசி இல்லாத காலம்) ” பூபதி, தருமகுலராஜா என்ற ஒரு நண்பர் வருகிறார். அவர் உங்களை Don caster என்ற இடத்துக்கு அழைத்துச்செல்வார். அங்கே மகேஸ்வரன் என்ற ஒரு பொறியிலாளரின்…
-
பெர்லின் நினைவுகள்.
பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன்.கடைசியில் அது கை கூடியது. நிட்சயமாக ஒரு டாக்சி ஓட்டினராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டினராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும்…
-
நகரமயமாக்கலும் சூழல் மாசுபடலும் .
சுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள் நடேசன் பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள். 16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக்…
-
பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா
நடேசன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இயங்கிய வட-கிழக்கு மாகாணசபை 1987-90 களில் தீண்டத்தகாத மசுக்குட்டிப்புழுவாக பலரால் அருவருப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த மாகாணசபை இரண்டாகப் பிரிந்து வண்ணத்துப்பூச்சிபோல் அழகாகத்தோற்றமளிக்கிறது. அத்துடன் தற்பொழுது அதனை தேவைக்கு மேலாகப் பால்கறக்கும் காமதேனுவாகவும் பார்க்கிறார்கள். மடியில் முட்டிமுட்டி, கடைவாயில் பால்வழிந்த ஞானசம்பந்தராக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் குடிக்கிறார்கள். தீண்டத்தகாத மாகாணசபையின் இப்படியான உருமாற்றம் கடந்த முப்பது வருடங்களில் நடந்திருக்கிறது. தமிழர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களவர்களை இணைத்து உருவாக்கிய மாகாணசபைக்கு வரதராஜப்பெருமாளை…
-
மெல்லுணர்வு – நோயல் நடேசன்
By அனோஜன் பாலகிருஷ்ணன் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற…
-
வழிகாட்டியாக டொமினிக் ஜீவா
நடேசன் – அவுஸ்திரேலியா 2016 ஜூலையில் இலங்கை சென்றபோது மல்லிகை ஆசிரியரும் எழுத்தாளருமான டொமினிக்ஜீவாவை சந்திக்கத் தயாரானபோது ஞானம் ஆசிரியர் ஞானசேகரனும் என்னுடன் சேர்ந்து கொண்டார். கொழும்பில் மாலை மூன்று மணியளவில் எமது பயணம் ஓட்டோவில் தொடங்கியது. கோடை வெய்யில் அனலாக முகத்தில் அடித்தது. போக்குவரத்து ஓசை காதைப்பிளந்தது. தெருப்புழுதி, வாகனப்புகையுடன் கலந்து நுரையீரலை நிரப்பியது. ஒரு மணி நேரப்பிரயாணத்தில் உடல்வியர்த்து, உடைகள் தேகத்தில் ஒட்டியது. முகத்துவாரம் பகுதியில் உள்ள அவரது வீட்டை அடைந்தபோது, இந்துசமுத்திரத்திலிருந்து…
-
சதைகள் : அனோஜனின் சிறுகதைகள்.
சதைகள் – சிறுகதைகள் காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன்…
-
கமலி பன்னீர்செல்வம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து…..
பிள்ளை தீட்டு “பிள்ளைத்தீட்டு” கதையில் ஜமீல் என்பவன் தனக்கு இலங்கை ராணுவத்தில் வேலை கிடைத்த சந்தோஷ செய்தியை மனைவி ஆயிஷாவிடம் பகிர்கிறான். அவள் இங்கு நாம் சுகமாக இருக்க எதுக்கு சண்டை பிடிக்கனும் என்கிறாள். இயக்கத்தவர்கள் ஒரு நாளில் எல்லாவற்றையும் பிடுங்கி வெளியே துரத்தியதை மறந்துவிட்டாயா நான் சேரபோகிறேன் என்கிறான். அப்படின்னா என்ன கொண்டுபோய் நாகலிங்கண்னே வீட்டில் விட்டுட்டு போங்க நானும் பிள்ளையும் நீங்க வரும்வரை அங்கே இருக்கோம் என்கிறாள். நாகலிங்கண்னே பெயர் கேட்டவுடன் ஜமீல் சோர்வுடன்…
-
பாரதி பள்ளியின் நாடகவிழா .
பங்குபற்றிய மாணவர்கள் பாரதி பள்ளியின் நாடகவிழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து சிறுவர் நாடகங்களை அனுபவித்து நினைவோடையில் நீந்த முடிந்தது. ஒருவிதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனத்தில் படிந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின்பு ஆங்கிலத்தில் பார்த்து, படித்து சிறுவர் இலக்கியங்கள், நாடகம் மற்றும் சினிமாவை புரிந்து கொண்டபோது ,எமது நாடுகளில் முக்கியமாக தமிழ்மொழியில் வறுமைக்கோட்டின்கீழ் கவனிப்பாரற்ற ஒரு துறையாக உணர்ந்தேன். அதனால் பல முறை மனத்தில் ஏக்கம்…
-
மலேசியன் ஏர்லைன் 370 – ஆசிரியர் நடேசன்
புத்தகம் பற்றி ஒரு பார்வை by kamaliswaminathan.blogspot.com “மலேசியன் ஏர்லைன் 370” சிறுகதைகளின் தொகுப்பு. நடேசன் எழுதியது. மலைகள் வெளியீடு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆ(வு)ஸ்திரேலியாவில் கால்நடை வைத்தியராக பணியாற்றிய எழுத்தாளர் அவரது பார்வையில் இலங்கையையும் அவர் பணிபுரிந்த அவர் சென்று பார்த்த இடங்களையும் பற்றிய அனுபங்களையும் அழகாக தொகுத்திருக்கிறார். இலங்கை தமிழர்கள் என்ன தான் சொந்த மண்ணை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வசதியாக வாழ்கின்ற போதும் தங்கள் மண்ணை மக்களை பிரிந்த…