ஆசிரியர்: noelnadesan
-
வரலாற்று சிறையில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள்
என் எஸ் நடேசன் உதயம் APRIL 2006 திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அம்மா ஓ-க பு—–டை என்ற தகாத வார்த்தையால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் ஈழ மதியுரைஞர் பாலசிங்கத்தால் பேசப்பட்டவர் என்ற செய்தி அங்கு உடனிருந்த ஜெயதேவனால் ஐலண்ட் பத்திரிகைக்கு கூறப்பட்டு உதயம் பத்திரிகையிலும் மறு பிரசுரமாகியது. செல்வம் அடைக்கலநாதன் 86ல் ஒருநாள் டெல்லியில் ஒரு ஹொட்டேலில் (அசோக்காவாக இருக்கலாம்) சந்தித்தேன். புலிகளால் சிறிசபாரட்ணம் கொலை செய்யப்பட்ட பின் செல்வம் பதவி ஏற்று…
-
ரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி.
உலகத்திலே அதிக உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடாக ரஸ்சியா மாறி அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியாவைப் பின் தள்ளியுள்ளது. ரஸ்சியாவில் கருங்கடலை அடுத்த பிரதேசத்தில் விளையும் கோதுமை இப்பொழுது அருகில் உள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல எகிப்து போன்ற தூரத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றைய உணவுப் பொருட்களும் அபரிமிதமாக ரஸ்சியாவில் தற்பொழுது உற்பத்தியாகிறது. ரஸ்சியாவில் விவசாய உற்பத்தி 1930 இல் இருந்து கூட்டுப் பண்ணைகளாக 1980 வரையும் நடந்தது. அக்காலத்திலே பிரமாதமாக நடக்காதபோதிலும் தேவையான உணவு…
-
உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து
இரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்று மாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். கலவரத்துக்குச் சில மாதகாலம் முன்புதான் ஹட்டன் நாஷனல் வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தான் கார்த்திக். ஏஜன்சியில் காசுகட்டி வெளிநாட்டுக்கு அவனை அனுப்புவது பற்றி இராசநாயகம் மனைவியிடம்…
-
சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்.
சொல்லத்தவறிய கதைகள் – அங்கம் 05 சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள் தர்மபோதனை செய்யவேண்டிய தேரர்களை அரசியலுக்குள் இழுத்து தேசத்தையும் கண்டத்துள் சிக்கவைத்த சிங்களத்தலைவர்கள் முருகபூபதி இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளையைச்சேர்ந்த கலாநிதி எம். எம் உவைஸ் ” கிராமப்பிறழ்வு” என்ற பெயரில் மொழிபெயர்த்தார். கம்பெரலிய நாவல் மட்டுமன்றி, மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல்தூவ,…
-
Anti-Muslim incidents in Ampara and Kandy in Sri Lanka
Care Lanka 203-205 Blackburn Road ,Syndal ,Victoria 3150 ,Australia Care Lanka, an Organisation in Australia represented by expatriate Sinhalese, Tamils and Muslims of Sri Lanka, is immensely concerned about the recent violence in Ampara and Kandy districts. We learn that the incidents were racially motivated and directed particularly against the Muslim community. We do not…
-
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்
கையை நீட்டி கடன் அட்டையைத் தந்தபோது மிஷேலின் முன் கையில் பச்சை குத்தியிருந்த வார்த்தைகள் ஆங்கிலம் போலிருந்தது. ” இது என்ன எழுதியிருகிறது? வார்த்தைகள் புரியவில்லை.” எனக் கேட்டேன். அவளது கையை நீட்டிப் பிடித்தபடி என்னைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல. எனது நேர்ஸ், அவளது தாய், தந்தை, அவரது கையிலிருந்த சிறிய பிறவுன் நிற சுவாவா (Chihuahua) நாயும் பார்த்தது. “இந்தப் பச்சை குத்தியதை நான் இதுவரையும் பார்க்கவில்லையே. இதன் என்ன அர்த்தம் என்ன?” என்றேன் “நான்…
-
இனவாதப்பாம்பு
நடேசன் இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு. சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படல்வேண்டும். அம்பாறையிலும் கண்டி திகன பிரதேசத்திலும் அண்மையில் நடந்திருக்கும் அசம்பாவிதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நமது நமது இஸ்லாமிய சகோதரர்கள். நல்லெண்ணம் கொண்ட தமிழர்கள் மட்டுமல்ல…
-
உன்னையே மயல் கொண்டு- பாகம் நாலு
1983 ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை. அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்தி, வாள் மற்றும் பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது.துரத்தியவர்களின் வாய்களிலிருந்து ஆபாசமான, ஆத்திரமான சிங்கள வார்த்தைகள் வந்தன. வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிடினும் கெட்டவார்த்தைகள் என்பது புரிந்தது. முன்பாக ஓடியவர்களில்…
-
செஞ்சதுக்கம்.
செஞ்சதுக்கம் என்பது எனது இளமைக்காலத்தில் அதிகமாக காதில் வந்த விழுந்த அதேசமயம் படித்த வார்த்தையுமாகும்.இஸ்லாமியருக்கு மக்காவாகவும் கத்தோலிக்கர்களுக்கு ரோமாபுரியாகவும் புனிதமாக போற்றப்பட்டதுபோல், இடதுசாரி அரசியல்பற்றுள்ள இளைஞர்கள் மத்தியில் சோவியத் அரசு மற்றும் மாஸ்கோ மீது பற்றுதலைத்தோற்றுவித்தது. அக்காலத்தைய எண்ணம் இப்போது இல்லாதபோதும் மாஸ்கோவிற்கு சென்று அங்குள்ள செஞ்சதுக்கத்தைப் பார்ப்பது என்பது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கமியூனிஸ்டுகளால் செஞ்சதுக்கம் என்ற பெயர் வந்ததோ எனமுன்பு நினைத்திருந்தேன். அந்தப்பகுதி முழுவதும் சிவப்புகற்கள் பதிக்கப்பட்டு சிவப்பாகவே காட்சியளித்தமையால்தான் செஞ்சதுக்கம் என்ற பெயர்…
-
மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு
இலங்கையில் மூவின மக்களின் நலனுக்காக மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு இலங்கையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அபிலாஷைகளையும் கவனிக்கும் பொருட்டும், கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு முதலான நோக்கங்களுடனும், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மூவின சமூகங்களின் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படும் கெயர்லங்கா (Care Lanka ) அமைப்பின் தகவல் அமர்வு அண்மையில் நடந்தது. மெல்பனில் கடந்த ஆண்டு இறுதி முதல் இதற்கான ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. கடந்த சனிக்கிழமை 24 ஆம்…