ஆசிரியர்: noelnadesan
-
யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை
நடேசன் பலாலிக்கு இந்திய விமானம் வந்திறங்கியது என்ற செய்தி பல காலமாக மனதின் ஆழத்திலிருந்த பாடசாலை நினைவுகளை கிளறிவிட்டது. பல விடயங்களைப் போர் உண்டு ஏப்பம் விட்டுவிட்டது. புதிதாக ஒரு தலைமுறை எதையும் தெரியாது குண்டுகளின் ஓசையிலும் , வெடிகளின் மணத்திலும், போரின் காயங்களையும் சுமந்தபடி வாழ்கிறது. ஆனால், நாங்கள் போர் தீண்டாத காலங்களை ருசித்தவர்கள் . அமைதியின் நினைவுகள் எம்மிடமுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பன்னிரண்டாம் தரத்தில் படித்தபோது, இலங்கையில் மொழிவாரியான தரப்படுத்தலுடன் மாவட்ட ரீதியாக…
-
இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி
இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள் முருகபூபதி ” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை…
-
ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்
ஹொஸ்டனில் ஏறிய விமானம் இருபதினாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில்லாத விமானப்பயணம். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தவாறே, விமானப்பயணத்தின் பாதையை தொலைக்காட்சித் திரையில் இடைக்கிடையே பார்த்துக்கொண்டிருந்தேன். தரை இறங்குவதாக விமானத்திலிருந்து அறிவிப்பு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன் . இறுதியில் தரையில் தட்டி, விமானம் நின்றது. அமெரிக்கர்கள் மட்டும் கைதட்டினார்கள் . அப்போது மீண்டும் தொலைக்காட்சி திரையைப் பார்த்தபோது 8200 அடிகள் எனக்காட்டியது . ஏன் விமானம் தரையிறங்கவில்லை. அந்தரத்தில் நிற்கிறதா? என யோசித்தபடியே இருந்தபோது விமானத்தின்…
-
நாவல்கள்:கூனன் தோப்பு -குடியேற்றம்.
வாசிப்பு அனுபவம் நடேசன் கடற்கரை அருகே ஒரு ஆற்றின் இரு பக்கத்திலும் காலம் காலமாக அமைதியாக வாழும் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே நடந்த கலவரங்களையும் அதன் விளைவாக அழியும் அப்பாவி மக்களின் அவலங்களையும் பேசும் கதையிது . இதைப் படித்தபோது இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது. கொழும்பான் சேமது நானா இதில் முக்கியமான பாத்திரம் . கொழும்பில் இருந்து பல வருட காலம் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பியவர்.…
-
நாவல்:அஞ்சுவண்ணம் தெரு-தோப்பில் முகமது மீரான்.
நடேசன் தோமஸ் காடியின் நாவலான த மேயர் ஒவ் காஸ்ரபிரிஜ் ( Thomas Hardy – mayor Of Casterbridge) உலக நாவல்களின் வரிசையில் அதனது ஆரம்ப அத்தியாயத்திற்காக விதந்து பேசப்படும் ஆங்கில நாவல். அந்த நாவலின் முதலாவது அத்தியாயம் மனைவியை ஐந்து பவுனுக்காக சந்தையில் ஏலம் விட்டு ஒரு கடலோடிக்கு விற்கும் சம்பவத்தை சித்திரிக்கிறது. அதனை எழுதப்பட்டிருந்த முறையால் அந்த நாவலுக்குள் நம்மை உள்ளே இழுத்துச் செல்லும். அதன் பின்விளைவாக தொடரும் கதையை எவரால் விடமுடியும்?…
-
குயவன் வனையும் கோடுகள்.
நூல் அறிமுகம் – எஸ்.அர்ஷியா 2009 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் இலக்கிய உலகம் எண்ணற்ற படைப்புகளின் வழியே மேலும் மேலும் வளமையும் செழுமையும் அடைந்து வருகின்றது. புவிமையத்தின் 360 கோணங்களிலிருந்தும் படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. காலத்தாலும் சூழலாலும் இலங்கையிலிருந்து விசிறியடிக்கப்பட்ட புலம் பெயர்த்தவர்களின் எழுத்துகள் வலி நிறைந்த கவிதைகளாக, பல்தரவுகள் கொண்ட கட்டுரைகளாக, துன்ப துயரங்களைச் சுமக்கும் சிறுகதைகளாக, விரிவான நாவல்களாக புதிய தளம் நோக்கி நகர்வு கொண்டு வருகின்றன. அவற்றில் சில பேரிலயக்கிங்களாகக் கண்டடையும்…
-
அசோகனினின் வைத்தியசாலை. பதிவுகள் இணையத்திற்கு எழுதிய அறிமுகம்
கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம். இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது…
-
முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல் வெளியீட்டரங்கு
படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானது. அத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது. இலங்கையில்…
-
தோப்பில் முகம்மது மீரான் – நடேசன்
அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கத்தில்- தோப்பில் முகம்மது மீரானை நினைவு கூர்ந்தது பேசியது நான் கொலம்பியா சென்றபோது அதன் தலைநகரான போகட்டாவில் விமான நிலயத்தில்— மாஜிக் ரியலிசம் வரவேற்கிறது— அங்கு வரவேற்று வார்த்தையாக போட்டிருந்தது. கொலம்பியா எழுத்தாளரான கபிரியல் காசே மக்குவசின்Gabriel Garcia Marquez) எழுத்துக்குக் கொடுத்த மரியாதையாகத் தெரிந்தது. அஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்காக சிலே நகரின் தலைநகரான சந்தியாகோவில் விமான நிலயத்தில் எனது மனைவியுடன் வந்து இறங்கியதும் “நாங்கள் போதைவஸ்து தடைப்பிரிவை சேர்ந்தவர்கள் ” எனக்கூறி இருவர்…
-
நூல் அறிமுகம். கானல் தேசம்
எழுத்தாளர் நடேசன் (கானல் தேசம்) மீது முகநூலில் முன்வைக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டதுமான விமர்சனங்களே கானல் தேசம் மீது எனக்கும் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆசிரியர் தனது முன்னுரையில் ஒப்புவிப்பதைப் போலவே, ஓர் அறிதல் / கேள்விப் புனைவாக கானல்தேசத்தை படைத்திருக்கிறார். நியூட்டனின் 3ம் விதியைப் போலவே; ஈழம் மீது தாக்கம் செலுத்திய விடுதலை என்கிற வினை, கொண்டிருந்த நேர் வினைகளை தீபச்செல்வன், தமிழ்நதி, குணாகவியழகன் (இன்னும் பலர்) சமகாலத்தில் இலக்கியப்புனைவுகளாக்கி தந்திருக்கிறார்கள். அதைப் போல, அதன் எதிர்வினைகளை சோபா சக்தி…