ஆசிரியர்: noelnadesan
-
சித்துவான் தேசிய வனம் – நேபாளம்.
நடேசன் அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது. மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை…
-
Oxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் வியாபாரம் செய்வதற்காக இந்தியா என்ற பெரும் கண்டத்துள் கால் பதித்த ஆங்கிலேயர் பின் இந்தியாவையே ஆண்ட கதை நாம் யாவரும் அறிந்ததே. அவ்வாறு வந்தவர்கள் இந்திய கலாசாரத்திலும் மோகம் கொண்டனர். கிழக்கிந்திய கொம்பனியர் பலர் இந்தியர் போலவே உடையணிந்தும் மகிழ்ந்தனர். சூரியன் அஸ்தனமாகாத பிரித்தானிய அரசை ஆண்ட விக்டோரியா மகாராணியார் அத்துடன் திருப்திப்படவில்லை. அவர் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் சக்கரவர்த்தினி என தனக்கு பட்டமும் சூட்டிக்கொண்டார். அவர் தலையில் அணிந்து கொள்ளும்…
-
கும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்
நிலத்திற்குக் கீழ் ஒரு குகையில் கும்ப ஈஸ்வரரை ( சிவன்- Gupteshwor Mahadev Cave ) வைத்திருக்கிறார்கள். அங்கு ஈரமான படிகளில் கீழ்நோக்கி குகைக்குள் செல்லவேண்டும். பல இடங்களில் குனிந்தபடி செல்லவேண்டும். சில இடத்தில் கடினமாக இருந்தது. தவழ்ந்து செல்லவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் பக்தியுடன் செல்கிறார்கள் . மனைவி கூட ஆங்காங்கு புத்த விகாரைகளிலும் ஆலயங்களிலும் வணங்கி வணங்கி புண்ணியத்தைச் சேமித்துள்ளார் . நான் மட்டும் உல்லாசப்பிரயாணியாகச் செல்வதால் நம்மீது கும்ப ஈஸ்வரர் ஏதாவது கல்லையோ பாறையையோ…
-
>புக்காரா நகரம்
நடேசன் நாங்கள் காட்மாண்டுவிலிருந்து புக்காரா என்ற இரண்டாவது பெரிய நகரத்திற்குப் புத்தா விமானச் சேவைக்குரிய விமானத்தில் பயணித்தோம். நமது நாட்டில் முருகன் உணவுக்கடை, பிள்ளையார் விலாஸ் , லட்சுமி அடைவு கடை என பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு மனேஜர்களை வைத்து வர்த்தகத்தை பெருக்குருக்கிறோம். நேபாளத்தில் புத்தர் மட்டுமே ஒரு மார்கெட்டிங் மனேஜர் ஆக பல வியாபார நிறுவனங்களுக்கு உதவியாக தொழிற் படுகிறார் . அவரது பெயரில் உணவகம், நட்சத்திர விடுதிகள், லொரி சேர்விஸ் எனப்பல உண்டு. நேபாளிகள் புத்தரில்…
-
பூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் பூமியின் அதி கூடிய வெப்பநிலையே சீரற்ற காலநிலைக்கு காரணம் எனக்கூறப்படுகின்றது. இயற்கையோ எமக்குப் போதிய அளவு கொடுத்தவண்ணமே உள்ளது. பேராசை கொண்ட மனிதனோ இயற்கையின் வளத்தை சீராகப் பயன்படுத்தாது இயற்கையை சீரழிப்பதே இதற்குக் காரணம். அபரிதமான உற்பத்தியே இன்றைய எமது பெரும் பிரச்சனை. 70பதுகளில் நான் படித்த நூல் ஒன்று இப்பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்துள்ளது. அதன் பெயர் Small is Beautiful இதை எழுதியவர் Trever Link இவர் ஒரு பிரபலமான…
-
பவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்
பவுத்தநாத் தூபி திபெத்திய அரசனால் கட்டுப்பட்டது . உலகத்திலே பெரிய துபா என்கிறார்கள் .வெள்ளை நிறத்தில் பிரமாண்டமானது சுற்றிபார்பதற்கு முன்பாக எங்களுக்கு அதற்கு எதிரே உள்ள உணவகத்தில் இருந்து பார்ப்பதற்கு இடம் கிடைத்தது . நான்கு பக்கத்திலும் தூபியில் வரைந்துள்ள கண்கள் எங்கள் கண்ணைக் கொள்ளையிடும் தூபிக்குள் சித்தார்த்த புத்தரின் எலும்புகள் இருப்பதாகவும் அதைவிட சாக்கிய முனி பிறப்பதற்குப் பலகாலங்கள் முன்பு வாழ்ந்த காசியப்பா என்ற புத்தரின் எலும்புகள் உள்ளதாகவும் தொனமக்கதையுள்ளது . இங்கு புத்தர் என்பது…
-
கானல் தேசம்-நொயல் நடேசன்
எஸ்.எல்.எம்.ஹனீபா கானல் தேசம்- நொயல் நடேசன் என்ற மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் தனக்கு கிடைத்த கரிசனைக்கு வாழ்க்கை என்ற சாளரத்தினூடே இந்த நாவலை உருவாக்கியுள்ளார். செய் நேர்த்தியும் – உழைப்பும் மிக்க படைப்பு. தனது மற்றைய எழுத்துக்களிலிருந்து, இந்த நாவலை அவர் எழுத கைக்கொண்ட மொழி ஒரு கோட்டோவியம் போன்றது. நாவலில் வரும் கதாமாந்தர்கள் அனைவரும் தங்களுக்கு படைப்பாளியால் வழங்கப்பட்டஎல்லைகளிலிருந்து ஒரு இஞ்சியேனும் பிசகாத நிலையில் கனகச்சிதமாக வந்து போகிறார்கள். நாவலில் பல பாத்திரங்கள் மறக்க…
-
நேபாளத்தில் வினோதமான சடங்குகள்.
நேபாளம் என்ற பெயர் வந்து 250 ஆண்டுகளே. இந்தியாவைப்போல் பல சிறிய அரசுகள் இருந்த பிரதேசம் . கூர்க்கா பிரதேசம் என்ற நேபாளத்தின் வடபிரதேசத்தை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவி நாராயணன் ஷா தனது ஆட்சியில் முழுப்பிரதேசத்தையும் ஒன்றிணைத்து நேபாளத்தை இந்து நாடாக பிரகடனப்படுத்தினான். – அக்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆண்டார்கள். இதன் பின்பு முழு நேபாளம் கூர்க்கா நாடக சொல்லப்படுகிறது . இந்திய ராஜபுத்திர வம்சத்தில் வந்த பிருதிவி நாராயணனது வம்சமே பிற்காலத்தில் தொடர்ந்து நேபாள…
-
நேபாளம்:3 பாக்மதி ஆறும் பசுபதிநாத் ஆலயமும்.
நடேசன் பாக்மதி ஆறு காட்மாண்டில் இருந்து கங்கைக்கு வந்து சேருகிறது. நேபாள நாகரீகம் இந்த நதிக் கரையிலே தொடங்குகிறதென்கிறார்கள். இதன் ஒரு கரையில் கங்கை ஆற்றில் இடம் பெறுவது போன்று இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வந்து எரிக்கப்படுகின்றன. மறுகரையில் எப்பொழுது இறப்பு வரும் என ஜோதிடம் சொல்பவர்கள் நிறைந்துள்ளார்கள். ஆற்றம் கரையிலிருந்து பொசுங்கும் மனித உடலில் இருந்து வரும் மணமும் புகையும் என் மனைவியை அங்கிருந்து விரட்டியது . எனக்கு அருவருப்பை ஏற்படுத்திய போதும், வாழ்வின் நிரந்தரமற்ற…
-
அஜித் போயகொட எழுதிய “” நீண்ட காத்திருப்பு
”படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி “ சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம். கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. “ சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான்.இந்த நூலின் பதிப்புரையின் தொடக்க வரிகளை…