ஆசிரியர்: noelnadesan
-
வன்கூவர் நகரம்
நடேசன் எனது வீட்டில் உள்ள லாபிரடோர் சின்டியும் கனேடியக் கரடிகளும், வன்கூவர் துறைமுகத்தைச் சுற்றியுள்ள கற்பாறைகளில் குடும்பங்களாக குளிர்காய்ந்துகொண்டிருந்த சீல்களும் உறவினர்களாக இருக்கவேண்டும் என்ற கணிப்பு, கனடாவிற்கு போன பின்பே மிருக வைத்தியனாகிய எனக்குத் தெரிந்தது . வன்கூவரின் துறைமுகம் சார்ந்த பகுதிகளை ஒரு மோட்டார் வள்ளத்தில் சுற்றிப்பார்த்தபோது, அங்கே கடலுக்குள் பெரிய கப்பல்கள் தரித்து நின்றதை அவதானித்தேன். கரையோரப் பாறைகளில் அமைதியாக கூட்டம் கூட்டமாகச் சீல்கள் படுத்து உறங்கின . அந்தச் சீல்களைப் பார்த்தபோது அவற்றில்…
-
வண்ணாத்திக்குளம்
இராஜேஸ் பாலா டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குளிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது. இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல. கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் விடயங்களைப் பற்றிய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அனல் வெயில் உவமேயம். இன்றைய புலம் பெயர்ந்த பல இலக்கியங்களைப்…
-
வண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல்
ஓடும் தளத்தை விட்டு விமானம் மேலே எழுந்தது.. . மேலே, மேலே வானத்தில் ஏறியது. அதன் பறப்பு தொடர்ந்தது. நான் வாழ்ந்த, பிறந்த மண்ணில் இருந்து பறக்க துடிக்கிறேன்… எழுவைதீவு, நயினாதீவு, யாழ்ப்பாணம், பேராதனை, மதவாச்சி, பதவியா என்ற இந்த இடங்கள் கனவில் வந்து போன இடங்களா? இந்த விமானம் என்னை எங்கு கொண்டு செல்கிறது.? பூகோள படத்தில் மட்டும் பார்த்த இடங்கள். இனி எனக்கு சொந்த பூமியாகுமா? என் பாதங்கள் அணைத்து மகிழ்ந்த அந்த இனிய…
-
ரொக்கி மலை எக்ஸ்பிரஸ்-கனடா
எங்களது பஸ்பயணம் பல முக்கிய மலைசார் நகரங்களில் தரித்து இறுதியில் Banff என்ற நகரில் (அட்பேட்டா மாநிலம்) முடியும். அங்கிருந்து இரண்டு பகல் ரொக்கி மலை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து மீண்டும் வான்கூவர் சேருவது எமது திட்டம். இந்த மேற்குப் பகுதி பற்றி கனடிய பயணத்தில் எழுதுவதற்கு அதிகமில்லை. வட அமெரிக்காவில், அலாஸ்காவில் இருந்து தென் அமெரிக்காவின் அண்டாட்டிக் முனைவரை செல்லும் இந்த கண்டங்களின் மோதலால் வட அமெரிக்காவில் ரொக்கி மலையும் தென் அமெரிக்காவின் அன்டீஸ் மலைத்தொடரும்…
-
வண்ணாத்திக்குளம்;யூலைக்கலவரம்
நானும் சித்ராவும் மதவாச்சி வைத்தியசாலைக்கு புதிதாக இடமாற்றமாகி வந்திருந்த கண்ணனை சந்தித்தோம். கண்ணன் என்னுடன் பேராதனை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவன். மதவாச்சியில் உள்ள வைத்தியசாலை சிறியது. ஒரு வைத்தியரை மட்டும் கொண்டுள்ளது. பெரிய நோய்கள் வந்தால் வவனியாவோ அநுராதபுரமோ தான் செல்ல வேண்டி இருக்கும். பல வருடங்களுக்குப் பின்பு சந்தித்தபடியால் ஏராளமான விஷயங்களை பேசினோம். சித்திரா எங்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். பெரும் பாலும் தமிழில் இருந்ததால் அவளுக்குப் புரியவில்லை. வீடு திரும்பும் வழியில் ‘உங்களுக்கு…
-
ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல-7
கைதிகள் எல்லோரையும் தனித் தனியாக பக்கவாட்டிலும் நேராகவும் புகைப்படம் எடுத்தார்கள். பெயர் என்ன, இயக்கம், கைதி இலக்கம் என்பவற்றை அட்டையில் எழுதி கழுத்தில் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்தார்கள். அதே நிலையில் வீடியோ படமும் எடுத்தார்கள். ஒரு கைதியை வீடியோ படம் எடுக்கும் போது அவர் பெயர், இயக்கம், தீய பழக்கங்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள். விசாரணையின் பின் பல கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிந்தேன். முதன் முதலாக மரண தண்டனை அளிக்கப்பட்ட கைதி ……….…
-
வண்ணாத்திக்குளம்; தலைமறைவு
இரவு ஒன்பது மணிக்கு ரூபவாகினியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். சித்ராவுக்கு செய்திகளில் விருப்பமில்லை. அரசியல்வாதிகளின் முகங்களை சுத்திசுத்தி காட்டுவார்கள். அவர்களை சுற்றியே உலகம் சுழல்வதாக கூறி மக்களை நம்பப்பண்ணும் ஒரு வேலை என்பது அவளது வாதம். குசினிப்பக்கத்தில் பாத்திரங்களை கழுவிக்கொண்டு நின்றவள் பின் கதவால் யாரோ வருவது கண்டு ரி.வி இருந்த கூடத்தை நோக்கி வந்தாள். பின்கதவு வழியாக ருக்மன்; உள்ளே நுழைந்தான். ‘என்ன பின்பக்கத்தால் கள்ளன் மாதிரி வருகிறாய் ‘ என்றாள் சித்ரா. ‘நான் காலிக்கு…
-
மெல்பேனில் ஒரு ” வேங்கைச்செல்வன் “
சபேசன் அண்ணை – எங்கள் எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்தப் பெருமனிதனின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கிறது. தம்பி என்று எப்போதுமே இளையவர்களுடன் பழகும் அந்தப் புன்முறுவல் என்றும் எங்கள் நினைவுகளில் தொடர்ந்திருக்கும். விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் காட்டிய அவரது அளவற்ற பற்றுதல் அபாரமானது. அவருடன் இணைந்து நின்ற செயற்பாட்டாளர்களுடன் அதேயளவு நெருக்கமான மதிப்பை எப்போதும் அவர் வைத்திருந்தார். குறிப்பாக நிர்வாக ரீதியாக அவருக்கு வேறுபாடான எண்ணங்கள் இருந்தாலும் கட்டமைப்பு என்று வரும்போது எதனையும் ஏற்ககூடியவராக…
-
ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல:6.
கைதிகளுக்கு காலை உணவாக பாண் தரப்படும் என முன்னரே சொல்லி இருந்தேன் அல்லவா? அந்தப் பாண் கொண்டு வரப்படும் பெட்டிகளில் பேக்கரியின் பெயரும் துணுக்காய் என்று எழுதப்பட்டதையும் பார்த்து இப்பகுதி துணுக்காய்க்கு சமீபத்தில் இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் உதவியாளர் நெல்லிநாதன் என்பவர் துணுக்காய் பகுதியில் அமைந்துள்ள இக்காட்டு முகாமில் ஒரு துணியும் இல்லாமல் நிர்வாணமாக வைக்கப்பட்டிருந்தார். யோசனையாலும் சித்திரவதைகளாலும் மண்டையில் அடிப்பதாலும் ஐந்து கைதிகளுக்கு மனநோய் பிடித்துக்கொண்டது. இவர்கள் பைத்தியமாக…
-
வண்ணாத்திக்குளம்;புல்மோட்டை
புல்மோட்டை கடற்கரை அண்டிய பிரதேசம். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். இதற்குப் பக்கத்து சிறு கிராமமான தென்னமரவடி தமிழ்க் கிராமம். இவ்விரு கிராமங்களும் ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்த இரு கிராமங்களையும் சமீபத்தில் அநுராதபுர மாவட்டத்தோடு இணைத்து விட்டார்கள். இதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இருந்த பூகோளத் தொடர்ச்சியை அறுத்துக் கொள்ளலாம். இவ்வாறு இடையில் சிங்கள கிராமங்கள் புகுத்தப்படவதால் தமிழருடைய தொடர்ச்சியாக வாழும் பூகோள அமைப்பு உருவாகும் வாய்ப்பினை மறுக்கலாம் என்பது…