ஆசிரியர்: noelnadesan
-
துவாரகை.
நடேசன். என் மனைவி சியாமளா கோமதி (Gomti river, Dwarka) ஆற்றின் தண்ணீர் வற்றிய நதிப்படுக்கையில், ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு, வெறும் கால்களால் நடப்பது தனது கால்களுக்கு இதமாக இருக்கிறது என நடந்தபோது, எதிரே வந்த ஒட்டகசாரதி தனது ஒட்டகத்தில் ஏறும்படி வற்புறுத்தினான். அவர்களிடமிருந்து விலகி, நான் எனது கமராவுடன் துவாரகேஸ்வரர் கோவிலின் வெளிப்பகுதியில், கோமதி நதிக் கரையில் உள்ள படிக்கட்டில், அமர்ந்தேன். எனக்கு முன்பாக ஒரு உயிரோவியமாக அங்கு ஒரு காட்சி திரை விலகித் தெரிந்தது.…
-
வாழும்போது வாழ்த்துவோம் – கொண்டாடுவோம்
“ நம்மவர் பேசுகிறார் “ அரங்கில்….. கிழக்கிலங்கையின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த எஸ். எல். எம். ஹனீஃபா ! முருகபூபதி ஆளுமைகள் மறைந்தபின்னர், அவர்கள் குறித்து நாம் பேசுவதும் எழுதுவதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் மரபாகவே தொடர்வது பற்றி பலரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். மறைந்தவர்களுக்கு, நாம் என்ன பேசினோம், எவ்வாறு எழுதினோம் என்பது தெரியாது ! அவர்கள் பூதவுடலாக அடக்கமாவார்கள், அல்லது தகனமாவார்கள். காணாமலும் போயிருப்பார்கள். கலை, இலக்கியம், சமூகம், கல்வி, அரசியல், ஆன்மீகம் தன்னார்வத்தொண்டு…
-
வாழநினைத்தால் வாழலாம்.
இந்து சமயத்தில் ஹரனும் ஹரியும் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் என்னும் தெய்வத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண் தெய்வங்களுக்கு வாரிசான ஐயப்பனுக்கு மாலை போட்டால் அம்மாதம் முழுவதும் பெண் உறவை தவிர்க்க வேண்டும். இந்த கதையின் அடிமூலத்தை நான் ஆராய விரும்பவில்லை. எனது கதையில் வரும் ஹரியும் ஒரு விசித்திரப் பிறவி. நமது கதாநாயகன் மெக்சிக்கோவில் ஓர் ஏரியில் பிறந்தான். அதுவும் 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவதரித்தவன். அந்தக் காலத்தில் மனிதர்கள் தோன்றவில்லை. ஏன் டைனேசர் கூட…
-
Cook or Not Cook
This story centres on a mud crab as the hero and a man, a trained veterinarian with presumably all his rational faculties, as the villain. In the Springvale market, south-east of Melbourne, the mud crab is the largest available for consumption. It is packed with sweet flesh and is often sold alive in Chinese and…
-
எங்கள் குடும்ப உறுப்பினர் “ பிறாண்டி “ விடைபெற்றார் !
அஞ்சலிக்குறிப்பு முருகபூபதி கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவிட்டேன். தொடர்ந்தும் எழுத நேர்ந்துள்ளது. அதனால், “ கல்வெட்டு எழுத்தாளன் “ என்ற பெயரையும் சிலர் எனக்குச் சூட்டியிருக்கிறார்கள். இந்தியா – இலங்கை சுதந்திரம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், ஈழப்போருக்கு முற்பட்ட – பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள் – இடம்பெயர்ந்த – புலம்பெயர்ந்த காலத்தைச்சேர்ந்தவர்கள்பற்றியெல்லாம் எழுதிவிட்டு, இந்த கொரோனோ காலத்தில் விடைபெற்றவர்கள் பற்றியும் அஞ்சலிக்குறிப்பு பதிவுகள் எழுதிவிட்டேன். இத்தகைய பதிவுகள் இக்காலத்திலும் ஓயாது போலிருக்கிறது.…
-
11கரையில் மோதும் நினைவலைகள்:நிரந்தர வேலை
நடேசன் “ உங்கண்ணன்கள் மாதிரி வந்திராதே “ என அடிக்கடி இரண்டு வார்த்தைகள் மந்திரமாக உச்சரிக்கப்படும். எனது இரண்டு அண்ணன்மார் அக்காலத்தில் காதல் திருமணம் செய்ததால் தங்களது கல்வியையும் வசதியான வாழ்வையும் தொலைத்தவர்கள் என்பது அம்மாவின் கருத்து. எனது ஒன்று விட்ட அண்ணர்மார் இருவரை உதாரணமாகக் காட்டுவார். காணும் பெண்களை எல்லாம் காம உணர்வோடு பார்க்கும் விடலைப் பருவத்தில் அம்மாவின் வார்த்தைகள் கடல் நீராக நாக்கில் கரிக்கும். வீட்டில் வேலை செய்த பெண் சிறுமி ஒருத்தி…
-
அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு.
அசோக்குமார் ஜனார்த்தனன் சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல்…
-
காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்.
இன்று மே 29 ஆம் திகதி சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும் முருகபூபதி இன்று மே 29 ஆம் திகதி சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும் இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29…
-
10.கரையில் மோதும் நினைவலைகள்.
வாழ்வின் அர்த்தங்கள். ஒவ்வொரு பரீட்சையும் வாழ்வின் சோதனைகள்தான். இதனாலோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பரீட்சையைச் சோதனை என்பார்கள்.. எடேய் சோதனை எப்படி ? உன்ர சோதனை முடிந்துவிட்டதா? இவள் எங்கே சோதனை பாஸ் பண்ணுவது ? ஒரு படிமமான ஒரு பெயரை வைத்து அழைத்தார்கள். சுட்டபழம் என்பதுபோல் யாரோ ஆரம்பத்தில் வைத்திருக்கவேண்டும். பத்தாம் தரத்தில் பரீட்சை எடுத்து, அதன் கர்ப்பகால முடிவுகள் வெளி வருவதற்கு நான்கு மாதங்கள் காத்திருக்கவேண்டும். இரண்டாவது தடவை எடுத்து பெயிலாகினால் பாடசாலையை விட்டு வெளியேறவேண்டும்.…
-
நாஞ்சில் நாடனின் சிறுகதைகள்.
நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர் அவர். அவருடன் மேலும் சில நாள்கள் பழகவில்லையே என்ற குற்ற உணர்வு இன்றும் என்னைப் புழுவாக குடைகிறது. நாஞ்சில்நாடனின் சில சிறுகதைகளை அங்குமிங்குமாகவே வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளரின் நூலை வாசித்து, அவருடன் உரையாட விரும்புவது எனது இயல்பு.…