ஆசிரியர்: noelnadesan
-
Giving up cigarettes for a dog
Pamela would always come to the hospital dressed in the same cigarette-smelling clothes. Her entry always amused the members of staff of the veterinary hospital, from receptionists at the front desk to nurses and veterinarians who are supposed to treat people with empathy and courtesy. I noticed nurses and other veterinarians covering their noses and…
-
20 கரையில் மோதும் நினைவலைகள்:மெல்பனில் உதயம்.
நடேசன் மெல்பனில் உதயம் பத்திரிகையை நடத்தும்போது, அதற்கான விளம்பரம் மற்றும் விநியோக வேலைகளை கவனிப்பதற்காக மதிய நேரங்களில் எனது கிளினிக்கில் இருந்து மதிய உணவுக்குச் செல்வதாகச் சொல்லி மறைந்துவிடுவேன். சிலர் அவசர சிகிச்சைக்காக நோயுற்ற தமது வளர்ப்பு பிராணிகளைக் கொண்டு வருவார்கள். நான் அப்போது அங்கில்லாதமையால் என்னை மனதுக்குள் திட்டியபடியே எனது நேர்ஸ்கள் அவர்களை வேறு கிளினிக்குகளுக்கு அனுப்புவார்கள். நான் கடமையில் இல்லை என்று அச்சமயம் அவர்களிடம் சொல்வது எனது நேர்ஸ்களுக்கு பிடிக்காது. ஆனால், அதனை நேரடியாக…
-
ஏன் மொழிபெயர்ப்புகள் வேண்டும்?
மொழிபெயர்ப்பு ஏன் என்பது பல மொழி பேசும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களாகிய எமக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. இங்கு நான் குறிப்பிடுவது இலக்கிய மொழி பெயர்ப்பாகும். மற்றைய மொழிகளிலிருந்து ஏன் இலக்கியத்தை மொழி பெயர்க்கவேண்டும்? அதேபோல் நமது இலக்கியங்கள்தான் ஏன் மற்றைய மொழிகளில் வரவேண்டுமென்பதற்கான சில காரணங்களைப் பார்ப்போம் . 1)மொழி என்பது கலாச்சாரம், பண்பாடுகளை வைத்துப் பாதுகாக்கும் ஒரு களஞ்சியம் . மொழியை அறிந்தால் மட்டுமே கலாச்சாரத்தை அறியமுடியும். புரட்சிக்கு முன்பான ரஸ்சிய, பிரான்சிய கலாச்சாரங்கள் புரிய மொழி தெரியவேண்டும் அதேபோல் கிரிக்க கலாச்சாரத்தை நாம்…
-
19.கரையில் மோதும் நினைவலைகள்: துரையப்பா மேயரின் கொலை.
நடேசன் கொக்குவிலில் ரயில்வே நிலையத்தில் இறங்கி, வீடு சென்றபோது இருளாகிவிட்டது. நான் விடுமுறையில் வருவேன் என, வீட்டு விறாந்தையில் அம்மா உட்கார்ந்திருந்த காட்சி இன்னமும் விழித்திரையில் பதிவாக உள்ளது. இருளில் வந்த என்னை முகத்தில் முத்தமிட்டபடி வரவேற்ற அம்மா, கேட்ட முதற்கேள்வி “அங்கு உனக்குச் சாப்பாடு ஒழுங்காகக் கிடைப்பதில்லையா? “ எந்தவொரு தாய்மாரும் தமது பிள்ளைகளிடம் ஒழுங்காகப் படிக்கிறாயா ? என்று கேட்பதற்குப் பதிலாக உடல் ஆரோக்கியத்தைப் பற்றியே கேள்வி கேட்டு கவலைப்படுவார்கள். பெற்ற மனதின் இயல்பு…
-
அவுஸ்திரேலியா -மொழிபெயர்ப்புகள்
‘எஸ்.பொ’ : ஆபிரிக்க இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முன்னோடி மூன்று நூல்களை மொழிபெயர்த்த ‘ நல்லைக்குமரன் ‘ குமாரசாமி முருகபூபதி ஆங்கிலம் சர்வதேச மொழி. அதனால் ஏராளமான பிறமொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ருஷ்ய இலக்கிய மேதைகள் லியோ டோல்ஸ்ரோய், மாக்ஸிம் கோர்க்கி ஆகியோரினதும் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஊடாகவே சிலர் அவற்றை தமிழுக்குத்தந்தனர். பல மேனாட்டு மொழிகளை தெரியாத தமிழர்கள் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஊடாகவே அந்தநாட்டு இலக்கியங்களை படித்தனர். தமிழர் புலம்பெயரத் தொடங்கியபின்னர், …
-
இன உறவுக்கு; மடுள்கிரியே விஜேரத்ன
தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப் பரிவர்த்தனைக்கு பாலம் அமைத்த மடுள்கிரியே விஜேரத்ன முருகபூபதி “ இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது, மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றியவர் மடுள்கிரியே விஜேரத்ன. இவர் மீண்டும், மெல்பன் – கன்பரா இலக்கியவாதிகள் இணைந்து மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ் என்னும்…
-
“ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
எழுத மறந்த குறிப்புகள்: குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர் ! ! இந்திய முன்னாள் பிரதமர்களின் செய்தி ஊடகப்பிரிவில் இணைந்திருந்த மூத்த இதழாளர் ! ! ! முருகபூபதி “ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று இறங்கும் நட்சத்திரங்களைப் போல அந்த வெண்பனிப்பூக்கள் காற்றில் சுழன்று சுழன்று தரையிறங்குகின்றன. வாசல் கோலத்தில் சில வந்தமர்கின்றன. இன்னும்…
-
18: கரையில் மோதும் நினைவலைகள்: உதயம் பத்திரிகை விடுதலைக்கெதிரானது.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில், 1975 ஏப்ரலில் நடந்த றாக்கிங்கில் , ரூபா ரத்தினசீலி , ராமநாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து இடுப்புக்கு கீழ் இயங்காது போனபின்னரும் அங்கு நடந்த றாக்கிங் முடிவுக்கு வரவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரைவாசியாக குறைந்ததை அடுத்த வருடத்தில் என்னால் அவதானிக்க முடிந்தது. பிற்காலத்தில் றாக்கிங்கால் இறப்புகள் நடந்த போதும் எமது காலத்தில் நடந்த சம்பவமும், அதற்கு ரூபா ரத்தினசீலி என்ற ஏழை மாணவி கொடுத்த விலையும் மிகப் பெரியது. எனக்கு நடந்த…
-
எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
அஞ்சலிக்குறிப்பு: இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர் முருகபூபதி “ Sino pharm 2nd dose . தடுப்பூசி கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே சலிக்குது. எழுத இன்னும் பலது உண்டு. “ மேற்குறிப்பிட்ட வரிகள், எமது எழுத்தாளர் நண்பர் நந்தினி சேவியர், ( செப்டெம்பர் 16 ஆம் திகதி ) மறைவதற்கு முன்னர் எழுதி முகநூலில் பதிவேற்றியவை ! என்னிடம்…
-
அத்தியாயம் 5: முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை ‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால்மணி நேரமாக வவுனியாவாகனதொடரணி சோதனைமுகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்றுநிமிர்ந்துபார்த்தேன்.கையில் துப்பாக்கியுடன் இராணுவச்சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப்பார்தவாறு நின்றிருந்தான். எனக்குநெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனது பக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச. அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள்,வாகனசாரதிகள் எனப்பலர் தொடரணி புறப்படுவதற்காக காத்திருந்தனர். ஏதோதடை செய்யப்பட்டபொருட்களைக் கடத்த முற்பட்டுப் பிடிபட்டுவிட்டேன் என்றுஅவர்கள் எண்ணியிருக்கக்கூடும். விடலைப்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையும்…