ஆசிரியர்: noelnadesan
-
A balloon that spoiled the footy match
It was a very quiet day at the Veterinary Clinic. The reason: the crowds were all at the footy match at the Melbourne Cricket Ground. The MCG is known to overflow with footy fans whenever there is a popular contest. Traffic jams on the roads leading to the MCG are common occurrences on such days.…
-
கர்ப்பம்.
நடேசன். நான் ஒரு மிருகவைத்தியர். அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில்…
-
17. கரையில் மோதும் நினைவலைகள்: பேராதனை: பல்கலைக்கழக றாகிங்.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் றாகிங் உச்சக்கட்டமாக இருந்த காலமது. எனது வருடத்தில் (1975) பல்கலைக்கழகம் சென்ற அல்பிட்டி(காலி) மாணவி ரூபா ரத்தினசீலி, றாகிங் தாங்காது ராமனாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்று, பிற்காலத்தில் சக்கர நாற்காலியில் கால் நூற்றாண்டுகள் மேல் வாழ்ந்தவர். இவருக்கு வீடும் கிணறும் கட்டி, பேராதனை மாணவர்கள் உதவி செய்தார்கள். பிற்காலத்தில் அந்த வீட்டை விட்டு விலகும்படி அவரது சகோதரர் வலியுறுத்தியபோது ரூபா ரத்தினசீலி 2002 இல் மனமுடைந்து பேராதனை…
-
வரலாற்றை எழுதியவரது , வரலாற்றுக்குச் சாட்சியானேன்.
நடேசன் 1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன். வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை.…
-
அவன் ஒரு அகதி
வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு பலசரக்கு சாமான்களை விற்கும் இடம் வாரம் ஒருமுறை சென்று இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட மளிகைச் சாமான்களையும், தமிழ் நாட்டின் புதிய கலாச்சார வடிவங்களாக இறக்குமதியாகும் தமிழ் வீடியோக்களையும் வாடகைக்கு எடுத்து வருவது எமது வாராந்த கடமையில் ஒன்று. கடையை அண்மித்தபோது, முன் கண்ணாடி ஊடாக கவுண்டரில்…
-
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்.
நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக், கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத் ( Junagadh) நகரில் இரவு தங்கினோம். நகரத்தின் மத்தியில் அழகான சமாதி (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. கோபுரங்கள் இஸ்லாமிய வடிவமும், வளைவுகள் ஐரோப்பிய முறையும் கலந்த கலவையாக அந்தக் கட்டிட வடிவம் இருந்தது. அந்த நகரத்தில் அதைப் பார்க்கப் பலர் வந்தார்கள். இந்தியாவின் பிரதான கவர்ச்சியாக இருக்கும் தாஜ்மகாலும் ஒரு சமாதி என்பதை நாம்…
-
இது ஒரு ஆப்கானிய கதை.
ஒரு மனிதன் தேவதையிடம் தனக்கு முத்து குவியல் வேண்டும் என வரம் கேட்டான். தேவதை ‘நீ அழுதால் வரும் கண்ணீர் ஒவ்வொன்றும் முத்தாகும்’ என வரம் கொடுத்தது. அந்த மனிதன் அழத்தொடங்கினான். ஆனால் அழுகை வரவில்லை. இறந்து போன தாய் – தந்தையை நினைத்தான். சிறிதளவு வந்த கண்ணீர் துளிகள் முத்துகளாகின. பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து தனது குடும்பத்தை குத்தத் தொடங்கினான். கண்ணீர் ஆறாகப் பெருகி வீட்டில் முத்துகளாகின. கண்ணைத் துடைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தபோது…
-
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம்
நடேசன் 2008 பெப்ரவரி மாதத்தில் உதயத்தில் எழுதியது. இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு செல்வநாயகம் – அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ் ஈழம் என்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்படவைத்தனர்.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இப்பொழுது கோவணத்துணியும் இல்லாமல் அம்மணமாக விட்டு விட்டார்கள். தற்பொழுது மகிந்த இராஜபக்ச தலைமையில் உள்ள இலங்கை அரசாங்கம் உலக நாடுகளினதும் இந்தியாவினதும் வற்புறுத்தலின் பேரில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் நடத்துவதாக வாக்களித்தது மூலம் தனது தோளில் தொங்கும் கரும் சிவப்பு துண்டை வட-கிழக்கு வாழும் தமிழ் மக்களுக்குக் கொடுத்து கோவணமாக அணியும்படி கொடுத்திருக்கிறார். இந்த திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்ற கேள்வி வெளி நாட்டுத் தமிழர்கள்பலரிடம்…