ஆசிரியர்: noelnadesan
-
முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி”
“ நூல் மதிப்பீடு நடேசன் எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி…
-
ஏழு கடல்கன்னிகள்.
உங்கள் நூல் விமர்சனம் அருமை. தமயந்தி வட புலத்தில் உள்ள தீவுகளில் வாழ்ந்ததனால் சொற்பிரயோகத்தில் மண்வாசனை ஒட்டிக்கொண்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் வலிந்து புகுத்தப்பட்ட எந்த வாசனையும் மணப்பதில்லை. எலியட்டில் ஆங்கிலக் கவிதையும் சோவியத்தின் போல்சுவிக்குக்கு எதிராக எழுதப்பட்டது என குறிப்பிட்டிருந்தீர்கள் என நினைவு. இது பற்றி மேலும் அறிய படித்ததில் கிடைத்தவற்றை கீழே ஒட்டித்தந்துள்ளேன். The Waste Land இன் முதல் வரியிலேயே எலியட் ஏப்ரல் மாதத்திற்கு கறை பூசி எம்மை ஒரு இருண்ட உலகுக்கு…
-
முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு.
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாகவி பாரதியார் மறைந்து 101 வருடங்களாகின்றன. இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய படைப்பு மின்னூலாக வெளியாகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு ஆரம்பமானது. அதனை முன்னிட்டு முருகபூபதி எழுதிவந்த பாரதி தரிசனம் தொடர் தற்போது…
-
நைல் நதிக்கரையோரம் By Dr Karthik
பாஸ்போர்ட் விசா டிராவலிங் அரேஞ்ச்மெனட்ஸ் ஜெட் லாக் தீவிரவாதிங்க பயம் ஃபுட் பாய்சனிங் எந்த கஷ்டமும் படத்தேவையில்ல நடேசன் சார் நம்மள ஃப்ரீயா எகிப்து சுத்திக்காட்டிட்டார். அவரேதான் செலவு எல்லாம் போட்டுக்கறார். அவரேதான் கைடு. சாதா கைடு இல்ல வெட்னரி டாக்டர் கைடு. போற இடத்துல ஏற்படற சங்கடங்களைக்கூட (உதா. சாராய பாட்டில் பேசின மச்சான் என்னைக்காப்பாற்று டயலாக்) நகைச்சுவை உணர்வு கலந்து இனிப்பா சொல்ர கைடு. ரொம்ப இயல்பா நம்ம மனசுல தோணுறதை நாம கேட்காமயே…
-
வியட்நாமின், சம்பா இந்து அரசு
நடேசன். பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே என்று சொல்லப்பட்டது. அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி . அதன்பின் சில தடவை வியட்நாம் சென்றபோது எதோ காரணத்தால் அந்தப்பகுதி எங்கள்…
-
பண்ணையில் ஒரு மிருகம் நாவல்-Murugesu Natkunathayalan
உங்களின் பண்ணையில் ஒரு மிருகம் நாவல்Murugesu Natkunathayalan இப்போது படித்து முடித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன். சலிப்பில்லா நகர்வு. நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம். படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன். ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள். நெருடியவை: இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது. கதை முடிவுக்கு வந்தமை ஒரு…
-
வியட்நாம் துரைசாமி
நோயல் நடேசன் நாங்கள் வியட்நாம் சென்றபோது எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெண் மிகவும் கரிசனையாக எங்களைப் பார்த்துக்கொண்டாள். என் மனைவிக்குத் துணிகள் தைக்குமிடமெல்லாம் அவளே கூட்டிச் சென்றாள். என்னால் அந்த நேரத்தில் ஓய்வெடுக்க முடிந்தது. அவள் மற்றைய மஞ்சள் நிற வியட்நாமியப் பெண்களைவிட கறுப்பான நிறத்திலிருந்தாள். எங்களது நிறத்தில் எனலாம். அதாவது பொது நிறமென இலங்கையிலும் மாநிறமெனத் தமிழ்நாட்டிலும் சொல்லும் நிறம் கொண்டவள். அது எங்களது மனதில் கேள்வியை உருவாக்கி, முகத்தைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் பறந்தபடி இருந்தது.…
-
பண்ணையில் ஒரு மிருகம்-நாவல்
தமிழகத்தை சாராதவரின் நாவலில் தமிழகச் சூழல் ! கதை சொல்லி நடேசனின் மற்றும் ஒரு நாவல் முருகபூபதி அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன், இதுவரையில் சிறுகதை, நாவல், பயண இலக்கியம், மற்றும் தனது தொழில்சார் அனுபவக் கதைகள் என பல நூல்களை வரவாக்கியிருப்பவர். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப் பிரதிகள் எழுதத் தொடங்கியவர். அதாவது 1990 ஆம் ஆண்டுக்குப்பின்னரே இந்தத்துறையில் தீவிரமாக இயங்கினார். கடந்துவிட்ட மூன்று தசாப்த…
-
சினிமா: நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா… !
அவதானி நாய் நன்றியுள்ள மிருகம். நாய் வீட்டைக் காக்கும் . என்றவாறெல்லாம் எமது சிறிய வயதில் பாடசாலைகளில் சொல்லித் தந்திருக்கிறார்கள். நாய் பற்றி திருவாசகம் முதல் திரைப்படங்கள் வரையில் ஏராளமான பாடல்கள் பிறந்திருக்கின்றன. நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு என்று தாம் இயற்றிய திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மூத்த கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் வீமா வீமா ஓடி வா என்ற தலைப்பினைக்கொண்ட குழந்தைகளுக்கான பாடலை வரவாக்கியவர். கவியரசு கண்ணதாசனும் படிக்காத மேதை திரைப்படத்திற்காக எழுதிய…