ஆசிரியர்: noelnadesan
-
FRIENDS OF SRI LANKA – AUSTRALIA- Appeal.
P O Box 5292 Brandon Park Victoria 3150 AUSTRALIA Email: uthayam12@gmail.com 29th November 2022 His Excellency President Democratic Socialist Republic of Sri Lanka President’s House Colombo Call for the release of all political prisoners in Sri Lanka Your Excellency, We congratulate you on becoming the President of our country in a crucial situation. All peace-loving…
-
பவளவிழா: மாவை நித்தியானந்தன்.
கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம் முருகபூபதி ( கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும், சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடினர். மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின் சிறப்பியல்புகளை கூறும் நித்தியம்…
-
நாவல் அறிமுகம்: முத்துப்பாடி சனங்களின் கதை.
நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் நடந்த இந்து – முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி, ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப் பயணிக்கிறது. பிரிவினை நடந்தபோது லாகூரில் இருபது வயதான முஸ்லீம் இளைஞன் சாந்த் அலி வேலை செய்யும் இடத்தில், இரண்டு பஞ்சாபி இளம் பெண்களைப் பாதுகாத்து, அவர்களை டில்லிக்கு அழைத்துவந்து விட்டு விட்டு, மீண்டும் லாகூர்…
-
அனாதை மரங்கள்
கல்கி 07.10.2022 இதழில் வெளியான இக்கதை ‘குவிகம்’ மின்னிதழ் நடாத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் தமிழ் சஞ்சிகைகளில் வெளிவந்த 69 சிறுகதைகளுள் சிறந்த கதை என மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரியினால் தெரிவுசெய்து பாராட்டப்பட்டது. கிறிஸ்டி நல்லரெத்தினம் அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம். இதைக் கேளுங்கள்…… அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம்…
-
விடைகொடுப்போம்.காண்டீபன் அமிர்தலிங்கம்
திரு காண்டீபன் அவர்கள் தொடர்பில் வரதராஜ பெருமாள் அவர்களின் சிறியதோர் மீள்பார்வை.. காண்டீபனின் இறப்பு இதயத்தைக் கனமாக்குகிறது. 1973ன் ஆரம்ப மாதங்களில் அடிக்கடி சந்தித்தோம். அப்போதுதான் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டு ஊர்களெங்கும் நாங்கள் ஓடி அரசியல் வேலைகள் செய்த காலம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்த தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலமே எங்களின் பிரதான சந்திப்பிடம். யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காண்டீபன் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தநதையாருடன் யாழ்ப்பாணம் வந்து விடுவார்.…
-
அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா 2022
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெய்நிகர் அரங்கு கருத்துரைகள்: திருமதி திலகவதி (ஐ.பி.எஸ். ஓய்வு நிலை ) “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று “ திரு. பவா செல்லத்துரை “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ ———————————————————————————- வாசிப்பு அனுபவப்பகிர்வு எஸ். கிருஷ்ணமூர்த்தியின் நோபோல் ( சிறுகதைகள் ) இலங்கையிலிருந்து கலாநிதி சு . குணேஸ்வரன் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து…
-
மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்.
முதல் சந்திப்பு. முருகபூபதி யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான…
-
பொன்னியின் செல்வன் புனைவு
நடேசன் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில் படித்திருக்கின்றேன். எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், நந்தினி என்பன. இலக்கியத்தை ருசிப்பது ஒன்று, அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த…
-
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன் தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு. பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால், இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது பாவைக்கூத்து அழிந்து வருகிறது. இந்தப்பாவைக் கூத்துக் கலை, குடும்பங்களின் பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்தது. அப்படியான கலைக்குடும்பத்து இளைஞர்கள் நகரை நோக்கி கல்விக்காகவும் மற்றைய வேலைகளுக்காகவும் இடம்பெயர்வதால் இந்தக் கலைஞர்கள் அற்று அழிந்துவிடுகிறது. கிராம விவசாயப் பொருளாதாரத்தின் பகுதியான பல கிராமியக் கலைகள் நகரமயமாக்கத்தால் நலிந்து…
-
சிட்னியில் இலக்கிய சந்திப்பு
05-11-2022 ஆவணப்படக்காட்சி – ஐந்து நூல்களின் அறிமுகம் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-11-2022 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு சிட்னியில் Toongabbie Community Centre (244 Targo Rd, Toongabbie NSW 2146 ) மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு, கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் சங்கம் அன்புடன் அழைக்கின்றது. இந்நிகழ்வு சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி (…