ஆசிரியர்: noelnadesan
-
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள்..
மிருக வைத்தியராக எனது அனுபவங்களை அபுனைவாக “வாழும் சுவடுகள்” “ புத்தகத்திலும் புனைவாக “ அசோகனின் வைத்தியசாலை , மற்றும் “பண்ணையில் ஒரு மிருகம் “நாவலிலும் எழுதியுள்ளேன். நாற்பது வருட மிருக வைத்திய தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்னர் நான் ஏதாவது எழுதத் தவறிவிட்டேனா என நினைத்துப் பார்த்தபோது நெருடிய விடயம் ஒன்றுண்டு. செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் மனநிலைகளை எழுதத் தவறிவிட்டேனா என்ற நினைப்பு என்னுள்ளே வந்தது. எல்லோரையும் பற்றி எழுதாத போதிலும் குறிப்பிடத்தக்கதாக என்…
-
நம் காலத்து நாவல்கள்: 9
Toni Morrison – Beloved. பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை, ஆண்களும் சொல்ல முடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான்.
-
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள் :1
நடேசன் நன்றி அபத்தம் கனடா அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம் பெயரும் முன்பாக, தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த அகதி முகாம்களில் மூன்று வருடங்கள் சுகாதார, மருத்துவ மற்றும் கல்விச் சேவைகளைச் செய்திருந்த அனுபவத்தால், எனது ஓய்வு நேரங்களில் இந்த நாட்டிலும் பிரயோசனமாக ஏதாவது எமது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது. இலங்கையில் இப்படியான பொது வேலைகளில் ஈடுபட்டதால் அங்கே பல விதமான தொல்லைகளை எதிர்நோக்க நேரிட்டது. மதவாச்சியில் மிருக வைத்தியராக வேலை…
-
மாதொருபாகன் நாவல்: அனுபவப் பகிர்வு
பெருமாள்முருகனின் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீச்வர வடிவமே மாதொருபாகன். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன.
-
ஒடிசா இந்துக் கோயில்கள்.
இந்தியாவின் கிழக்குக் கரையோர மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவைப்பற்றிபற்றிப் பலகாலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கலிங்கம் என்ற பெயர் கொண்டு , மகதப் பேரரசை எதிர்த்தது நின்றது மட்டுமன்றி, இந்திய மதங்கள் , வாணிபம், நடனம் இசை என்பனவற்றைக் கிழக்காசியாவுக்கு கடத்துவதற்குக் கண்மாயாக இருந்த இடமும் அது. இந்த மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்கள் ஒரு முக்கோணத்தில் அமைந்திருப்பதாக அறிந்தேன். இந்து, புத்தம், ஜைன ஆகிய மதங்களில் முக்கிய இடங்கள் உள்ள இந்த மாநிலத்தின் பெரும் பகுதியில் ஆதிவாசிகள் வசிப்பதாகத் தெரிந்து…
-
நாம் காலத்து நாவல்கள்:7 தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.
கதையின் கரு ரஸ்சிய பண்ணையாரின் இரண்டு மனைவிமாருக்குப் பிறந்த மூன்று ஆண்கள் மக்கள். அதைவிட சமையல்காரனாக வேலை செய்யும், ஆனால் இதே பண்ணையாரின் கள்ள தொடர்பில் பிறந்த நான்காவது ஒருவன். இவர்களிடையே இரண்டு பெண்கள் வருகிறார்கள். அதில் மகனது காதலியை திருமணம் செய்ய நினைக்கும் தந்தையைத் தனயன் கொலை செய்வதான கதை. இங்கு பாத்திரங்களது செயல்கள் மட்டுமல்ல, சிந்தனைகள் கதையை நகர்த்துகின்றன.
-
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதிய “ துப்பாக்கிக்கு மூளை இல்லை !
மரணத்துள் வாழ்வோரின் குரலை பிரதிபலிக்கும் கவிதைகள் ! ! முருகபூபதி “ துப்பாக்கி முனையில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது. அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். “ எனச் சொன்னார் சீனாவின் பெருந்தலைவர் மா ஓ சேதுங். எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் புகழ்பெற்ற கவிஞரும், விமர்சகரும் இலக்கிய பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள், “ துப்பாக்கிக்கு மூளை இல்லை “ என்று சொல்லியிருக்கிறார். இக்கூற்றிலிருக்கும் உண்மையை…