ஆசிரியர்: noelnadesan
-
Bringing out the human-ness of people caught up in the war.
Associate Professor Sanjiva Wijesinha https://www.sundaytimes.lk/250323/plus/bringing-out-the-human-ness-of-people-caught-up-in-the-war-592731.html Dr. Noel Nadesan’ latest book Odyssey of War is being launched in Melbourne this week. For those who do not know Noel he is what is best described as a polymath – someone whose knowledge spans many different fields. He was born and grew up in northern Sri Lanka, he…
-
எச்.எச்.விக்கிரமசிங்க ஆபத்தில் உயிர்காத்த போராளி !
லயனல் போப்பகே , அவுஸ்திரேலியா 1970களின் இறுதியில் ஆரம்பமான எங்கள் தொடர்பு, நீண்ட கால வெளியில் தோழராகவும் நண்பராகவும் நீடித்தது. உங்களின் முக்கால் நூற்றாண்டு வாழ்வு வியக்கத்தக்க நினைவுகளால் நிறைந்தது.உங்களின் 75 ஆவது பிறந்த நாளையொட்டி எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் இளமை வாழ்வில் நாம் எதிர்கொண்ட சவால்கள் மிகப்பல. துயர் நிறைந்த பல தருணங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம்.எங்களின் மறக்கமுடியாத அரசியல் வாழ்வு ஜேவிபி யின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமானது.…
-
நதியில் நகரும் பயணம் 12: அம்ஸ்ரடாம்.
ஒல்லாந்தின் முக்கிய துறைமுக நகரமான அம்ஸ்டர்டாம், எங்கள் படகின் இறுதித் தரிப்பாக இருந்தது. ஏற்கனவே 150 வருடங்கள் இலங்கைத்தீவை ஆண்டவர்கள் என்பதால் அவர்களை பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். எஇலங்கையை விட்டு அவுஸ்திரேலிய வந்தபின் இலங்கையிலிருந்து வெளியேறிய ஒல்லாந்து கலப்பினத்தவர்கள் அதாவது இலங்கையில் அவர்களை ‘பேர்கர் ‘என்போம் அவர்கள் பலர் எனது மிருக வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவார்கள். எனது கிளினிக்கில் வேலை செய்த நேர்ஸ் ‘கலி’ தனது பூட்டன் இலங்கையில் முதலாவது சேவையர் ஜெனரலாக…
-
நதியில் நகரும் பயணம் 11: கோலோன் (Cologne)
கோலோன், ஜெர்மனியின் முக்கிய நகரமாகவும், எங்கள் படகு தரிக்கும் இறுதி ஜெர்மன் நகராகவும் இருந்தது. நாங்கள் படகை விட்டு இறங்கியபோது மழை பிடித்துக்கொண்டது . குடையுடனே எங்கள் நடை இருந்தது. சிறு வயதிலிருந்தபோது எனக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் என்பதால் எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஒடிக்கொலோன் இருக்கும். தலையிடித்தால் துணியில் ஒடிக்கொலோன் தேய்த்து இரண்டு பக்க நெற்றியிலும் அம்மா வைப்பார். அதேபோல் இருமல் , நெஞ்சில் சளி வந்தால் நெஞ்சில் துணி நனைத்துப் பூசுவது வழக்கம் .…
-
நதியில் நகரும் பயணம் 10 மில்றன்பேர்க் (Miltenberg)
நதி பயணத்தில் மிற்றன்பேர்க் என்ற சிறிய நகரம் தரிப்பாக இருந்தது . இதுவும் பவேரியா பகுதியில் உள்ள பழைய நகரம் ஒன்றாகும் இங்கு குடியேற்றம் ரோமர்களது காலத்திற்கு முந்தியதென்றாலும் அதனது எச்சங்கள் இங்கு இல்லை. மத்திய காலத்தின் எச்சங்களே தற்பொழுது காணப்படுகிறது. நதியின் கரையில் இருப்பதால் எப்போதும் மக்கள் போக்குவரத்து வணிகம் இங்கு செழித்திருந்ததன் விளைவாக நகரம் முழுவதும் அழகிய மரக் கட்டிடங்கள் , கற்கள் பதித்த தெருக்கள் இருந்தன. அத்துடன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு…
-
நதியில் நகரும் பயணம் 9 : ரோத்தன்பேர்க். (Rothenberg)
எமது படகு வுஸ்பேர்க் (Wurzburg) என்ற நகரத்துக்குச் செல்லும்போது அங்கு எனது சகோதரன் பல வருடங்களாக இருப்பதால் அவனைச் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், அவன் அன்றைய தினம் வேலை – அவன் வேலை இடம் வைத்தியசாலை என்பதால் விடுமுறை பகலில் எடுக்க முடியாது என்றபோது நான் வுஸ்பேர்கில் இறங்கி அந்த நகரத்தைப் பார்க்க விரும்பவில்லை. இரண்டு முறை தம்பியிடம் சென்றபோது, வுஸ்பேர்க்கில் பல இடங்களைப் பார்த்தேன் என்பதால் அங்கிருந்து புதிதான இடத்திற்கு போவோம் என நினைத்தேன். ஏற்கனவே…
-
வேலாயுதர் செல்லத்துரை மறைவு இரங்கலுரை.
புன்னகையை எப்பொழுதும் தன்னில் அணிந்தபடி இருக்கும் நண்பன் வேலாயுதர் செல்லத்துரையை நினைவுகூர நாம் இன்று ஒன்று கூடியிருக்கிறோம் அவர் எனக்கு 50 வருடங்களாகத் தெரிந்த டக்டர் சக்திலெட்சுமியின் கணவர் அத்துடன் கிசானியின் தந்தையாவார் அவர் தனது உதட்டு சிரிப்பிற்கு உள்ளே தனது விடயங்களைத் தெளிவாக வகுத்து நடந்தவர் என்பதை அறிவேன். நாம் பிறந்த பின்பு, இறப்பு என்ற சம்பவம் வாழ்வில் தவிர்க்க முடியாது ஆனால் இடைப்பட்ட காலத்தில் எப்படி நடந்தோம் என்பதே இங்கு முக்கியமானது. நண்பர் செல்லத்துரை …
-
வாழும் இலக்கியங்கள்:சிலப்பதிகாரம்.
நடேசன். நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலைசீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான். ‘கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது…