ஆசிரியர்: noelnadesan
-
அ. மார்க்ஸ் தொகுத்த கே. டானியல் கடிதங்கள்.
படித்தோம் சொல்கிறோம் ஒரு தீர்க்கதரிசியின் சிந்தனைகளை பதிவு செய்த கடிதங்கள் முருகபூபதி ‘வேற்றுமைகளுக்கு நிறைய காரணங்களை கற்பிக்கலாம். ஆனால் ஒற்றுமைப்படுவதற்கு காரணங்களைத்தேட வேண்டிய சமுதாயத்தில் வாழும் துர்ப்பாக்கியசாலிகள்தான் எழுத்தாளர்கள்.’- என்ற சிந்தனைதான், டானியலின் கடிதங்களைப்படித்தபொழுது எனக்குள் தோன்றியது. தமிழில் தலித் இலக்கிய முன்னோடி என்று விதந்து போற்றப்படும் கே.டானியல், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்து தமிழ்நாட்டில் தஞ்சையில் 1986 ஆம் ஆண்டு மறைந்து அங்கேயே கல்லறையில் நிரந்தரமாக அடக்கமானவர். 1982-85 காலப்பகுதியில் தமிழக மார்க்ஸீய…
-
உனையே மயல் கொண்டு
எஸ். கிருஸ்ணமூர்த்தி ஊரிலே சிறுவர்கள் நாய், பூனைகளை கல்லால் அடிப்பதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதைத் தடுப்பதற்கு முயற்ச்சியோ அல்லது அவை மீது அனுதாபமோ ஏற்படவில்லை. ஏதோ பிராணிகள் உணர்வற்ற வெறும் ஜடங்கள் என்ற எணணமே மேலோங்கி இருந்தது. டொக்டர் நடேசன் விலங்குகளைப் பற்றி அனுபவக் கட்டுரைகள் பல இங்குள்ள தமிழ் பத்திரிகையில் அடிக்கடி இடம் பெற்றது. அதை வாசித்த போது உணர்வுகள், உணர்ச்சிகள் மட்டுமல்ல அதற்கு ஆசாபாசங்களும் உள்ளன என்பனவற்றை அறிந்து கொண்டேன். அவரது படைப்புக்களை வாசிக்க…
-
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
திரும்பிப்பார்க்கின்றேன் — 11 -முருகபூபதி . இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே பாடிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இடியப்பச்சிக்கலைப்போன்றது. 1972 இல் அந்த இடியப்பத்தை பிழிந்தவர் சட்டமேதை கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா. அறுதிப்பெரும்பான்மையுடன் 1970 இல் ஸ்ரீமாவின் தலைமையில் பதவிக்குவந்த கூட்டரசாங்கம் 1972 இல் உருவாக்கிய ஜனநாயக சோஷலிஸ குடியரசு அரசியலமைப்புத்தான் அந்த சிக்கலான இடியப்பம். இன்றுவரையில் எத்தனையோ உயிர்களை காவுகொண்டபின்னரும் சிக்கல் தீரவில்லை. எதிர்காலத்தில் வரக்கூடிய பாரிய நெருக்கடிகள் இழப்புகளை…
-
எகிப்தில் சில நாட்கள் 10: மண்மூடி மறைத்த புனிதத்தலம்
நடேசன் ஒவ்வொரு மதக் குழுவினருக்கும் தேவையானது தெய்வங்கள். அந்தத் தெய்வங்களின் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை உறுதியாக்குவதற்கு அவற்றைச் சுற்றி கர்ணபரம்பரையான கதைகள் பின்னப்படுகின்றன. இதற்கப்பால் பாமரமனிதர்களுக்கு அரூபமான(Abstract) சிந்தனை புரியாது என்பதால் மிகப் புனிதமானது என கருதப்படும் ஒரு வழிபாட்டுத்தலம் தேவையாகிறது. ஆற்றுப்படுகைகளில் மனித புறக்கலாச்சாரம் பிறந்து வளர்வது போல் அகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் நிலைபெறுவதற்கு இப்படியான விடயங்கள் தேவையாகிறது. முக்கியமாக மரணம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாத எதிரியாக இருக்கும்போது,…
-
Ceylon Students Education Fund, Australia
24th Annual General Meeting The Ceylon Students Education Fund, Australia (CSEF) is seeking ongoing support from its Australian and word wide members and well-wishers for students affected by the decades-long civil war which has ravaged the country. CSEF has been operating in Australia since 1989, providing timely assistance to those who have lost their parents…
-
கல்வி நிதியத்தின் பொதுக்கூட்டம்
இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது. அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு…
-
எங்கள் நாட்டின் தேர்தல்
சொல்லவேண்டிய கதைகள் முருகபூபதி தேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப்போகின்றேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றவுடனேயே எனது தாயகம் எனக்கு இரவல்தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை. ஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல்களும் பார்த்து வாக்கும் அளித்து இடதுசாரிகளுக்காக மேடையேறிப்பேசியும் ஒய்ந்து ஓடிவந்துவிட்டாலும்;, தாயகம்மீதான பற்றுதல் எள்ளளவும் குறையவில்லை. அங்குவந்தால் நிற்பதற்கு ஒரு மாதகாலம்தான்…
-
Books As bridges
By Thulasi Muttulingam The International Tamil Writers Forum, Australia launched the translated versions of three of their books at the BMICH recently. The Authors are Sri Lankan Tamils domiciled in Australia, Dr. Noel Nadesan and L.Murugapoopathy. The books released were Lost in You, the English translation of Dr. Nadesan’s work, Unaiyae Maiyal Kondu, Samanalawewa, the…
-
எகிப்தில் சில நாட்கள் -9 லக்சர் கோவில்
நடேசன் லக்சர் கோவில் எகிப்தின் 18 ஆவது அரசவம்சத்தைச் சேர்ந்த ஆமன்ஹோரப்111 என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு 19 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த மகா இராம்சியால் (இராம்சி11) பிரமாண்டமாக கட்டப்பட்டது. ஏனைய அரசர்களது காலத்தில் சில கட்டிடவேலைகள் நடந்த போதிலும் மேற்குறிப்பிட்ட இரு அரசர்களுமே இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள். முகப்பில் தனியாக நின்று கொண்டிருந்த ஓபிலிஸ்க் (Obelisk) என்ற பிரமாண்டமான தூணைப் பற்றிய விடயங்களை எமது வழிகாட்டி முகமட் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதன் அருகே நின்ற…
-
வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜா மறைந்தார்
இலங்கையில் வடமராட்சியில் பிறந்து 1956 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி சில வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய நடராஜா கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கொழும்பில் தனியார் மருத்துவமனையில் காலமானார். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் முன்னாள் மாணவரான நடராஜா தமது கல்வியைத்தொடர்ந்து கொழும்பில் அரசகரும மொழித்திணைக்களத்தில் பணியாற்றினார். அதன்பிறகு, வீரகேசரி பத்திரிகையின் விளம்பர இலாகாவில் பணியிலிருந்து, வீரகேசரி செய்திப்பிரிவுக்கு வந்தார். அங்கு துணை ஆசிரியராகவும் சிரேஷ்ட பதில் செய்தி ஆசிரியராகவும் செய்தி ஆசிரியராகவும்…