ஆசிரியர்: noelnadesan
-
மெல்லுணர்வு (சிறுகதை)
நடேசன். குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக…
-
எகிப்தில் சில நாட்கள்13: பெண்ணரசி.
நடேசன் ஜோவான் என்ற பெண் ஆணாக வேடமிட்டு மத்தியகாலத்தில் (1100AD) கத்தோலிக்க பாப்பரசராக இரண்டு வருடங்கள் பதவி வகித்தார். அவர் குதிரையில் செல்லும் போது பிரசவம் நடந்து பெண்ணென்ற விடயம் பகிரங்கமானது. ஜோவான் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்;. பெண்களைப் பொறுத்தவரை தற்காலத்தில் நிலைமை எவ்வளவு மாற்றம் நடந்துள்ளது என்பது நாடுகளுக்கு நாடுகள் வேறுபடுகிறது. பல நாடுகளில் பெண்கள் நிலைமை மத்திய காலத்திலே உள்ளது. பண்டைக்கால சீனாவின் வரலாற்றில் டாங் அரசவம்சத்தில் (Tang Dynasty) சக்கரவர்த்தினியாகி அரசாண்ட…
-
எகிப்தில் சில நாட்கள்12:மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்
நடேசன் அந்த நாள் காலை பிரகாசமாக விடிந்தது என்பதை எனது அறையில் நிறைந்திருந்த வெளிச்சம் எனக்குத் தெரிவித்தது.மெதுவாக கண்களை கைகளால் அழுத்தியபடி விழித்தபோது எனதருகே படுத்திருந்த சியாமளாவைக் காணவில்லை. நைல் நதியில் நின்ற எமது கப்பலின் மேல்தளத்தில் சென்று சூரிய உதயம் பார்ப்பதற்காக எனது நண்பர் ரவீந்திரராஜின் குடும்பத்தினரும் எனது மனைவியும் சென்று விட்டார்கள் என்பது சிறிது நேரத்தில் எனது அறிவுக்கு எட்டியது. முதல் நாள் லக்ஸர் மற்றும் கார்னக் கோவிலையும் சுற்றி நடந்ததனால் உடல் களைப்பும்…
-
மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.
எக்சோடஸ் 4 நடேசன் இரண்டு நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு கோடம்பாக்கத்தில் ஆர்காடு ரோட்டில் அமைந்த பழைய கட்டிடத்தில் மேலே உள்ள சிறிய அறையை மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டேன். அந்த அறையில் யன்னலையும் கதவையும் விட பெரிய இரும்புக்கட்டில்; – சந்தமிட்டபடி சுழலும் ஒரு பழைய கறள் பிடித்த காற்றாடி மற்றும் அதோடு ஓட்டிய ஒரு லைட் மட்டுமே எனக்குத் துணையாக இருந்தன. தனிமை அந்த அறையில் கோடை வெப்பத்தை விட மோசமாக வாட்டியது. அந்தப் பெரிய சென்னைப்பட்டணத்தில்…
-
பிரேதத்தின் கதை: வாசிப்பு அனுபவம்
முருகபூபதி நாங்கள் பிறக்கிறோம். இறக்கிறோம். இரண்டும் எப்பொழுது நிகழும் என்பதோ பிறந்த வேளையே அல்லது இறந்தபின்போ எதுவும் தெரியாது. மற்றவர்களின் குழந்தை பிறந்ததை பார்த்ததும் அட நாங்களும் பிறந்தபொழுது இப்படித்தானே இருந்திருப்போம் என நினைப்போம். அத்துடன் குழந்தைப் பருவமும் நினைவுக்கு வந்துவிடும். ஒருவர் இறந்தால் அவரை ஃபியூனரல் பாலரில் அல்லது மயானத்தில் பிரேதப்பெட்டியினுள் பார்த்தால் நாம் என்ன யோசிக்கின்றோம். நாங்கள் இறந்தாலும் இப்படித்தானே அலங்கரித்து வைத்திருந்து புதைப்பார்கள் அல்லது தகனம் செய்வார்கள். பலருக்கு சுடலைஞானம் பிறக்கும். இறந்தவர்…
-
இளங்கீரன் நினைவுகள்
திரும்பிப்பார்க்கின்றேன் 19 இலங்கை முற்போக்கு இலக்கிய முகாமில் எனக்கொரு தந்தை இளங்கீரன் முருகபூபதி இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது. நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரது…
-
மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தமிழ்ச்சிறுகதைகள் தொடர்பான அனுபவப்பகிர்வு நிகழ்வு மெல்பனில் வேர்மண் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி – படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள், ஆவூரான் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை, பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு வரமாட்டேன், கே.எஸ்.சுதாகரனின் காட்சிப்பிழை, நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் என்ற சிறுகதை ஆகியன வாசிக்கப்பட்டு அவை…
-
மெல்பனில் நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் முருகபூபதி அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அடுத்தவாரம் (07-12-2013) மெல்பனில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் – மொழிபெயர்ப்பு முயற்சிகள் – இலக்கிய இயக்கம் – கலை, இலக்கியத்துறை சார்ந்த நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு – Being…
-
Appreciation
Dear Friend, I read your comment on the book written by com. Pushparani. Based on my opinion, your report was well written. It is very brave of Pushparani to allow her experience in the war to be published. Unfortunately, women are not respected by Tamil saivas and vellalas in the same manner that Kandy Perinpanayagam…
-
கவிஞர் கருணாகரன் கடிதம்.
அகாலம் நூலுக்கான முன்னுரையை எழுதித்தருமாறு ஷோபாசக்தி கேட்டபோது அந்தப் புத்தகத்தை படித்தபின் எழுதியதை அனுப்பியிருந்தேன். ஆனால், அது ஒரு அறிமுகக் குறிப்பாக இருக்கிறது என இன்னொரு நண்பரும் கருதியதால் பிறிதொரு கட்டுரையை எழுதினேன். ஒன்றை முன்னுரையாக எடுத்துக்கொண்டு மற்றதை புத்தகம் வந்த பின்னர் மதிப்புரையாகப் பயன்படுத்தலாம் எனக் கருதினேன். ஆனால் இரண்டையும் படித்த ஷோபாசக்தி அவற்றை மிகச் சிறப்பாக எடிற் பண்ணி ஒன்றாக இணைத்திருந்தார். “நீங்கள் அனுப்பிவைத்த இரண்டு முன்னுரைகளையும் சற்றே எடிட் செய்து (குறிப்பாக புத்தகத்திலிருந்து…