அசோகனின் வைத்தியசாலை. பேட்டி.

எமது மனச்சாட்சி என்பது எமது வாழ்க்கையின் கொம்பாஸ் . அது எமது மொழியில் உள்ள இதிகாசம் காப்பியங்களால் உருவானது . படிக்காதவர்கள் வாய்மொழியால் படித்தவர்களிடம் கேட்கிறார்கள். சோம்பேறிகள் தொலைக்காட்சி சீரியல்களிலிருந்தும் பெறலாம். இதிகாசம், காப்பியங்களால் அரூபமான ஒரு சமூக கட்டுமானம் உருவாகிறது – Phenomenological engineering. மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றை மறுப்பவர்கள் பலர் தங்களை அறியாது தங்களை இந்த இதிகாசங்களும் காப்பியங்களே வழி நடத்துவதை அறியாதவர்கள் .இந்தியர்களின் மனச்சாட்சி, இன்னமும் இராமாயணக் கொம்பாசை விட்டு போகவில்லை என்பதை பிஜே பி அறிந்து வைத்துள்ளது. இவற்றை மீறி சிந்திப்பவர்கள் கூட கொஞ்சம் தூரம்தான் விலகமுடியும் . மீண்டும் அங்கே வந்துவிடுவாரகள். ரஸ்சியரகள் 70 வருடங்கள் பாலைவனத்தில் அலைந்து விட்டு மீண்டும் அங்கே வந்துவிட்டார்கள். தவிர்க்க முடியாது ஒவ்வொரு கூட்டம் மக்களும் இப்படியான ஒன்றை உள்வாங்கிய இருப்பார்கள். ஓரங்களைக் காலப்போக்கில் செதுக்கமுடியும் ஆனால் கருப்பொருளை நிராகரிக்க முடியாது. Phenomenological engineering. எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்பதால் எனது அசோகனின் வைத்தியசாலையில் கொலிங்வுட் என்ற பூனைக்கு மோறல் கொம்பாசாக அந்த வைத்தியசாலையில் நடக்கும் விடயங்களைப் பாவித்துள்ளேன் .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.