இத்தாலியப் பயணம்:6

பிசா நகரம்.

இத்தாலியின் மத்திய பகுதியான தஸ்கனியில் முக்கிய நகரமான பிசா நகரத்தை நாம் நினைப்பது, நமது மனதில் நிழலாடும் சாய்ந்த கோபுரம்தான். இது ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இல்லாதபோதிலும், முக்கியமான யுனெஸ்கோ பாதுகாக்கும் பிரதேசமான இது அமைந்துள்ள முழு பகுதி பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அருகே உள்ள தேவாலயத்துக்கு சொந்தமான மணிகோபுரமாக 1174-ல், 199 ஆண்டுகளாக  கட்டப்பட்டது.

கட்டுவதற்கு வரைபடம் போட்ட கட்டிடக் கலைஞர்கள், கட்டி முடிப்பதற்குப் முன்பு இறந்துவிட்டனர். அவர்கள் தவறுகள் உலக அதிசயமாகப் பாதுகாக்கப்படும் என்பதை அவர்கள் அறிவார்களா?

சில தவறுகள, அதிசயமாக மாறுவது உண்மையே .

எவ்வளவோ அதிசயமான விடயங்கள் நடந்த இத்தாலியில் இது ஒரு அசாதாரணமானதே. அதைவிடத் தேவாலய மணி கோபுரம் தேவாலயத்திற்கு அருகில் இருக்கும் ஆனால் இங்கு  பல மீட்டர்கள் தள்ளி அமைந்துள்ளது.  கோபுரம் 293 படிகள் ஏறி மேலே உயரத்திற்குப் போக முடியும்.   வெளிப்பகுதி மட்டும் பளிங்குக் கற்களால் உள்ளே வெற்றிடமாக  ஆன கோபுரம். 1934 ஆண்டில் வெளியிலிருந்து  கொங்ரீட்டை கீழே (Injection) கொடுத்து ஓரளவு சாய்வை குறைத்து நிலைப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சிறிய தொகையினரையே  கோபுரத்தில் ஏற அனுமதிக்கிறார்கள்

கணிதப் பேராசிரியராக பிசா பல்கலைக்கழகத்தில் பதவியிலிருந்த கலிலி இரண்டு நிறையுள்ள பீரங்கிக் குண்டுகளை கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே போட்டு, நிறை கூடிய பொருள் வேகமாக விழும் என்ற அரிஸ்டோடலின் கூற்றைத் தவறு என நிரூபித்தார். பின்பு சூரியனைச் சுற்றியே கிரகங்கள் சுற்றி வருவதென்ற போலந்து அறிஞர் கொப்பேனிகசின் கூற்றைத் தனது தொலைநோக்கியின் மூலம் நிரூபித்ததுடன், வியாழனினது உபக்கிரகங்களையும் ,அகண்ட பால்வெனும் உள்ளதையும் அவரால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியால் அறிந்து தெரிவித்தார்.

இவ்வரையில் கத்தோலிக்க தேவாலயத்தின் மதபீடம், பூமி மட்டுமே மற்ற கிரகங்கள், சூரியனும் உட்பட சுற்றிவருவதான கருத்துக்கு எதிராக பேசியதால், கத்தோலிக்க மதபீடம் அவரை துன்புறுத்தி சித்திரவதை செய்தது. இறுதியில் அவர் மண்டியிட்டு . “நீங்கள் சொல்லும் சரி” என்று கத்தோலிக்க பீடத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டார. அவர் உயிர் பிழைத்தாலும், பலகாலம் வீட்டுக்காவலில் வைத்தார்கள். தற்போதைய இஸ்லாமிய முல்லாக்களின் பத்துவா எங்கே இருந்து வந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பிசா நகரம் மற்றைய நகரங்களுடன் கடல் வாணிகத்தில் ஈடுபட்டதுடன் செல்வச்செழிப்பாக இருந்தது. வங்கி மற்றும் வாணிபங்கள் எல்லாம்  இங்கு கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கை நமக்கு எடுத்துக்காட்டும்.

ரோமர் ஆட்சி அழிந்தபின் மற்றைய இத்தாலிய நகரங்கள்போல்   பிசா நகரமும் தனி அரசாகச்  செல்வாக்குடன் இயங்கியது.

நாங்கள் பிசா கோபுரத்தை காணச் சென்றபோது  நகரத்தைச் சுற்றி அமைந்திருந்த கோட்டை பதினொரு அடி உயரமான உறுதியான மதிலைப் பார்க்க முடிந்தது.மூன்று கிலோமீட்டர் நீளமான மதில் பிசா நகரை பல போர்களிலிருந்து பாதுகாத்தது.

இந்த கோபுரம் உள்ள இடத்தில் அருகே ஞானஸ்தாம் பெறும்  தேவாலயம் உள்ளது : இதுவே இத்தாலியில் பெரியது. அதை விட அழகான பிசா நகர மேரிமாதாவின்  தேவாலயம் உள்ளது.  இதுவே உலகத்தில் அக்காலத்தில் பெரிதானதாக இருந்தததாம்.  

சவக்காலை மற்றும் வைத்தியசாலை என ஒரு வட்டமான பொதுமக்கள் கூடிய சதுக்கமாக இருந்த அந்த இடம். இங்குள்ள சவக்காலைக்குக் கட்ட கற்கள் இயேசுநாதர்க்கு சிலுவையில் அறைந்த இடமான கல்வாரி மலையிலிருந்து கொண்டுவரப்பட்டன என்று கூறப்படுகிறது. வெளியில் சுற்றிப் பார்க்க மட்டுமே எங்களுக்கு முடிந்தது. எங்கு உள்ளே செல்ல நேரம் வேண்டியது இல்லை.

பிசா நகரிலிருந்து தற்போது கடல் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆனால் ரோமர் காலத்திலும் மத்திய காலத்திலும் பிசா ஒரு துறைமுக நகரம். ஆற்றின் கழிவானதால் வாணிபத்தில் செழித்த நகரம், ஆனால் தற்போது  நதி ஒதுங்கி,  கடல் தூரமாகச் சென்றுபோய் விட்டது. கடல் ஊரின் உள்ளே வந்து இருப்பதை கேள்விப்பட்ட எனக்கு, கடல் ஊரைவிட்டு விலகியது என்பது என்பதும் வியப்பாக இருந்தது.

பீசா பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் பழமையானது. இத்தாலியில் செல்வாக்கு பெற்ற மெடிசி குடும்பத்தினர் இதை உருவாக்கினர். இவர்கள் குடும்பத்திலிருந்து பல பாப்பண்டவர், வங்கி நிறுவனர்களும், செல்வந்தர்களும் இருந்தார்கள். பின்னணியில் நெப்போலியனால் பீசா நகரம் கைப்பற்றபட்டபோது, அது உயர்நிலை அரச அதிகாரிகளை உருவாக்கும்  மையமாக மாற்றப்பட்டது.

பிசா நகரத்தில் எனக்கு பிடித்தது அங்கு மதிய உணவாக முழு மீனை அப்படியே பொரித்து தந்தார்கள். இதுவரை நான் பார்த்த ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிய  உணவே சிறந்தது என்பேன் -ஆனால் நான் அங்கு நின்ற இரு  கிழமைகளில் பாஸ்ராவோ அல்லது பிட்சாவோ உண்ணவில்லை என்பதை நீங்கள் நம்பவேண்டும். 

 லுகா

பிசாவிலிருந்து நாங்கள் சென்ற இடம் லுகா (Lucca) ஆரம்பத்தில் ரோமர்களால் கட்டப்பட்டபோதிலும் 16ம் நூற்றாண்டில் புகழ்பெற்றது: மத்திய கால நகரம். இது இரு நாட்கள் தங்கி பார்க்கக்கூடிய இடம் ஆனால் இரண்டு மணி நேரத்தில் எங்களுக்குப் பார்க்கும் அளவில் ஆகிவிட்டது. நாம் உள்ளே செல்லும்போது கோட்டையுள்ளே செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.

 இரண்டு வாசல்கள் பெரியது. உள்ளே நுழைந்தது எதிர்வரும் கோடைகாலத்தில் இங்கு பல சங்கீத விழாக்கள் நடைபெறமென்ற அறிவிப்பு பார்த்துக் கொண்டிருந்தது. கிளாவோமோ போச்சினி (Giacomo Puccini) என்ற உலகப் புகழ்பெற்ற ஓப்பரா தயாரிப்பாளர் பிறந்த இடம் இது. இவரது படைப்பே மாடம் பட்டஃபிளை (Madam Butterfly) என்ற புகழ்பெற்ற ஓபராவாகும். இவரைவிட பல சங்கீத வித்துவான்கள் பிறந்த இடம் இது: தமிழ்நாட்டில் திருப்பூரை போல நீங்கள்  லுகாவை நினைக்கலாம்.

இந்த நகரத்தின் சுற்று மதில்கள் மிகவும் அகலமானவை:கிட்டத்தட்ட சீனப்பெருஞ்சுவர்ப் போன்ற தோற்றம் அதாவது வாகனங்கள் போககூடியதாக இருந்தன. முழு ஊரையும் மதிலில் நடந்தபடியே பார்க்கலாம் . இந்தக் கோட்டைப் பாதுகாப்பால் லுகா நாகரம் 700 வருடங்கள் சுதந்திரமாக இருந்தது.  இறுதியில் நெப்போலியனால் கைப்பற்றப்பட்டது.

மதிலின் மீது நடந்தபோது தேவாலங்கள், மணிக்கூட்டுக் கோபுரங்கள் கண்களுக்குத் தெரிந்தன. ஏற்கனவே பிசா நகரில் நடந்த களைப்பில் அங்குள்ள ஒரு கஃபேயில் கோப்பி குடித்துவிட்டு  அந்த நகரை விட்டு வந்தோம். நாங்கள் போன காலம் முன்வசந்தகாலம் என்பதால் பல கடைகள் இன்னமும் திறக்கவில்லை.

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.