DR Karthik


நோயல் நடேசன் சாரின் 18 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எளிய சிக்கலில்லாத படம் பார்த்து கதை சொல்லும் நேரான கதைகள். உறுத்தாத முடிவுகள். ஆங்காங்கே வரும் உதாரணங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. சில சங்கட தருணங்களை விவரணைகளை ஜஸ்ட் லைக் தட் சொல்லிச்செல்கிறார். கம்மி ரூவாய்க்கு இந்த கிராக்கிதான் கிடைக்கும் ஜோக் (ஒரு சிவப்பு அத்தியாயம்), சில வியாதிகள் (schizophrenia, Imposter syndrome, Pseudopregnancy) கதைகளாகி இருக்கிறது. பாலிடால் குடித்த சீலாவதியும் ஆமிக்காரனுக்கு இணங்கி ஊரைக்காப்பாற்றிய ராசாத்தியும் மனதை பாதிக்கிறார்கள்.இந்த கதைகளை சொல்லும் விதத்தில் நோயல் சாரிடம் ஒரு detached தன்மை தெரிகிறது. ஒரு 3rd man view. கதை விமர்சனமாக விவரமாக சொல்ல எனக்கு பிடிப்பதில்லை. நீங்களே படித்துக்கொள்ளுங்கள்.
ஆங்… இலங்கைத்தமிழில் ட வராது ரெக்னோலஜி என்பதை டெக்னாலஜி என்று படித்துக்கொள்ளவும் 😁
பின்னூட்டமொன்றை இடுக