மெல்பூர்னில் ‘2025 ஆம் ஆண்டின் சிறந்த தென் ஆசியர்’ விருது

நடேசன்

மெல்பேர்ன்,

மெல்பேர்னில்  வளர்ந்து வரும் தென் ஆசிய சமூகத்தினர்,   திரு பந்து திசாநாயக்காவுக்கு    ” 2025ல்  சிறந்த தென்ஆசியர் ” விருதை அளித்தார்கள். திரு பந்து திசாநாயக்கா நான்கு வருடங்கள் இலங்கையின் விக்ரோரியா மானில கௌரவ கொன்சல் ஜெனரலாக இருந்தவர். அத்துடன் பகான என்ற சமூக பத்திரிகை,விஷ்வவாகனி என்ற தொலைகாட்சியையும் நடத்துகிறார். பந்து திசாநாயக்கா அவுஸ்திரேலியா சவுத்ஏஷியா சொசைட்டியின் (ASAS) நிறுவுநராகவும் போஷகராகவும் உள்ளார்

அவுஸ்திரேலியா சவுத் ஏஷியா சொசைட்டி (ASAS) ஏற்பாடு செய்த பல்சமூக நிகழ்வில், திசாநாயக்கவுக்கு “2025 ஆம் ஆண்டில் தென்ஆசியர்” என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. மெல்பேன் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு நிர்மாண பொறியியல் துறையின் பேராசிரியர் பிரியன் மெண்டிஸ் விருது கோப்பையை வழங்கினார். தெற்கு கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த எம்.பி. லீ  டர்லாமிஸ், பந்து திசாநாயக்காவுக்கு பாரம்பரிய பொன்னாடை  அணிவித்து கௌரவித்தார்.

இந்த நிகழ்வு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புப் பேச்சாளர்களால் சிறப்பிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர், இருமுறை ஃபுல்பிரைட் அறிஞர், விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் தி கார்டியன் பத்திரிகை பத்தி எழுத்தாளர்  டாக்டர் ரஞ்சனா ஸ்ரீவஸ்தவா, “சமூக மாற்றத்தை தூண்டும் எழுத்தின் சக்தி” என்ற தலைப்பில் கருத்துக்களைப் பகிர்ந்தார். இவர் ஆஸ்திரேலியாவின் OAM விருது பெற்றவர் .  அவர், மருத்துவத்திலிருந்துஎழுத்துலகத்துக்கான தனது பயணத்தை நினைவு கூர்ந்தார், மேலும் எழுத்துப் பயிற்சியை வளர்ப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கினார்.

எழுத்தாளர் டாக்டர் கௌஷல் ஸ்ரீவஸ்தவா, ,ஆஸ்திரேலியாவின் பல்வகை சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்க கலாச்சாரம் வகிக்கும் பங்கு குறித்து பேசினார்.  பல்வேறு தென் ஆசிய சமூகங்களைஒன்றிணைக்க நடனமும் இசையும் முக்கியத்தை விளக்கிறனார்.

 விக்டோரிய மாநில எம்.பி. லீ டர்லாமிஸ்,  கலைகள் மூலம் கலாச்சார பரிமாற்றத்தில் அவுஸ்திரேலியா சவுத் ஏஷியா சொசைட்டி வழங்கும் தலைமைத்துவத்தைப் பாராட்டினார். “எங்கள் கலாச்சாரங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன, இப்படிப்பட்ட நிகழ்வுகள் அவற்றை மேலும் வலுப்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ASAS துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி  வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் தலைவரான டாக்டர் நோயல் நடேசன் மற்றும் காயத்ரி, திசாநாயக்கவின் சமூக பங்களிப்புகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். நன்றிக் குறிப்பை ASAS  போஷகர் நீரஜ் நந்தா வழங்கினார்.

கலாச்சார நிகழ்ச்சியில் பிரேரோனா சின்ஹா, ரஞ்சனா ஆரியதாசா ஆகியோரின் பாரதநாட்டியம்; சங்கத் தமிழ்க் கலைக்கழகத்தின் பாறை மேளம் அடிக்கப்பட்டது , இது  பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக அவர்களை மெய்மறக்க வைத்தது. பிலிப்பைன் குழுவின் ஸ்பானிய-ஆசிய கலவைத் தோற்றமளிக்கும்பிலிப்பைன்ஸ் நடனம், நமலி பெரேராவின் இலங்கைநடனம் மற்றும் இளம் கலைஞர் அபிதரணிசந்திரனின் மிருதங்கம் ஆகியவை இடம்பெற்றன.

கிரிஸ் மல்லிகா பத்ரா நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து, நிகழ்வை இனிமையுடன் முன்னெடுத்தார். ஸ்ரீதரன் அருணசாலம் , அரங்கத்தை பாரம்பரிய தென் ஆசிய கலாச்சாரத்திற்கமைய அழகுபடுத்தினார்.

“மெல்பூர்னில் ‘2025 ஆம் ஆண்டின் சிறந்த தென் ஆசியர்’ விருது” மீது ஒரு மறுமொழி

  1. Please send Sanga kalai parai kalagam link! Tell nr email etc! Great
    Service to Tamil World!
    Thanks ! Shan +47-91784271

dragonsillyc26c663145 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.