உங்கள் கதைகள் “வண்ணாத்தி குளம்””உன்ன்னையே மையல் கொண்டு”மற்றும் “அசோகனின் வைத்தியசாலை”,தொடர்ச்சியாக மூன்று கதைகளையும் படித்து முடித்தேன். மூன்று கதைகளையும் ஒரு அனுபவமாகவே உணர முடிந்தது. கதைகளில் உள்ள உண்மைத்தன்மை யே காரணம். இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் “வண்ணாத்தி குளம்” வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நான் தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கிறேன். இலங்கை பிரச்சனையை நாங்கள் எல்லாம் எவ்வளவு மேலோட்டமாக தெரிந்து வைத்திருநதிருக்கிறோம் என்பது உங்கள் கதைகள் படித்தபின் உணர்ந்து குற்றவுணர்வு கொண்டேன். வ.கு எதார்த்தமான மனதில் பாதிப்பைக் ஏற்படுத்திய நல்ல கதை. நி. மை. கொண்டேன் இரு பெண்களின் மண நிலைகளை எதிர் கொண்ட நாயகன் நிலையை ஏ ற்கும் படி சொல்லியிருந்தீர்கள். உச்சக் கட்ட காட்சிகளின் நாடக தன்மை செயற்கையாக இருந்தது அந்த உணர்வு இல்லாமல் இருந்திருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும்.” அசோகனின் வைத்தியசாலை” உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத கிளாசிக் கதை. உண்மை சம்பவங்களின் தொகுப்பாக முற்றிலும் ஒரு புதிய கதை களம். புதிய மனிதர்கள், அருமையான கதை. நன்றி. வணக்கம்.வாழ்த்துக்கள்.
அன்புடன்
J. பன்னீர்.
பின்னூட்டமொன்றை இடுக